அமர்வை பகிஷ்கரித்தது ஐக்கிய மக்கள் சக்தி; பௌஸி, ஹரீஸ், பைஸல், இஷாக் சபை நடவடிக்கையில் பங்கேற்பு

0 71

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்­றத்தின் ஐந்­தா­வது கூட்­டத்­தொ­டரை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க நேற்று வைப­வ­ரீ­தி­யாக ஆரம்­பித்து வைத்தார். குறித்த அமர்வில் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சக்­தியும் அதன் பங்­காளிக் கட்­சி­க­ளான முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்றும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியும் பங்­கேற்­காது பகிஸ்­க­ரிப்பு செய்­தனர்.

இந்­நி­லையில், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளான ஏ.எச்.எம்.பௌஸி, எச்.எம்.எம்.ஹரீஸ், பைஸல் காஷிம் மற்றும் ஏ.ஆர்.இஷாக் உள்­ளிட்­டோ­ருடன் ராஜித சேனா­ரத்ன, குமார வெல்­கம, வடிவேல் சுரேஸ் உள்­ளிட்டோர் சபை நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்­றி­ருந்­தனர்.

நேற்று காலை 10.30மணிக்கு ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்­றத்தின் ஐந்­தா­வது கூட்­டத்­தொ­டரை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க வைப­வ­ரீ­தி­யாக ஆரம்­பித்­து­வைத்தார்.

எதிர்க்­கட்சி புறக்­க­ணிப்பு
ஜனா­தி­பதி கொள்கை பிர­க­டன உரையை ஆரம்­பிக்க முற்­பட்­ட­துடன் சபையில் அர்ந்­தி­ருந்த எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச உள்­ளிட்ட ஐக்­கிய மக்கள் சக்தி உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தியின் உரையை பகிஷ்­க­ரிக்கும் வகையில் சபையில் இருந்து வெளி­ந­டப்பு செய்­தனர். அதே­நேரம் ஐக்­கிய மக்கள் சக்­திக்கு ஆத­ர­வ­ளித்து வரும் ஜீ.எல். பீரிஸ், வீர­சு­மன வீர­சிங்க ஆகி­யோரும் சபையில் இருந்து வெளி­யே­றிச்­செல்­வதை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

இருந்­த­போதும் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி உறுப்­பி­னர்கள் யாரும் சபைக்கு வருகை தர­வில்லை.

ஐக்­கிய மக்கள் சக்தி ஜனா­தி­ப­தியின் உரையை பகிஷ்­க­ரித்து வெளி­யேறிச் சென்­ற­போதும் அந்த கட்­சியை சேர்ந்த ராஜித்த சேனா­ரத்ன, சரத்­பொன்­சேகா ஆகி­யோரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் பங்­காளி கட்­சி­யான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை சேர்ந்த எச்.எம். ஹரீஸ். பைசல் காசிம் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உறுப்­பி­ன­ரான இஷாக் ரஹ்மான் ஆகி­யோரும் சபையில் இருந்­தனர். அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்து வரும் வடிவேல் சுரேஷ், ஏ.எச்.எம்.பெளசி, ஐக்­கிய மக்­கள் சக்­தியில் இருந்து சுயா­தீ­ன­மாக செயற்­படும் சம்­பிக்க ரண­வக்க, குமார வெல்­கம ஆகி­யோரும் ஜனா­தி­ப­தியின் உரை முடி­யும்­வரை சபையில் இருந்­தனர்.

அத்­துடன் ஜனாதிபதியின் கொள்­கை பிரகடன உரையை செவிசாய்ப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் தவராசா கலையரசன் ஆகிய இருவரும் மாத்திரமே சபையில் இருந்தனர்.

அதேநேரம் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களில் ஹரினி அமரசூரிய இடையில் சபைக்கு வந்தபோதும் சிறிது நேரம் கழித்து சபையில் இருந்து வெளியேறிச் செல்வதை காணக்கூடியதாக இருந்தது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.