புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கு விஷேட ஏற்பாடுகள்

0 73

(ஏ.ஆர்.ஏ.பரீல், எம்.வை.எம்.சியாம்)
ரமழான் மாதத்தில் முஸ்லிம் அரச பணி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரும் சமய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்­கான விஷேட பணி நேர அட்­ட­வணை இம்­மு­றையும் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இதற்­கென அரச துறையில் பணி­பு­ரியும் முஸ்லிம் பணி­யா­ளர்­க­ளுக்கு தொழுகை மற்றும் சமய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு வச­தி­யாக பணி நேர­கால அட்­ட­வ­ணையைத் தயா­ரிக்­கு­மாறு பொது நிர்­வாக அமைச்சு சுற்­ற­றிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது.

அமைச்­சு­களின் செய­லா­ளர்கள், மாகாண பிர­தம செய­லா­ளர்கள், அரச கூட்­டுத்­தா­ப­னங்கள் மற்றும் சபை­களின் தலை­வர்­க­ளுக்கு குறிப்­பிட்ட சுற்று நிருபம் பொது நிர்­வாக அமைச்­சினால் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.
ரமழான் மாதத்தில் முஸ்லிம் பணி­யா­ளர்கள் தொழுகை மற்றும் சமய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்குத் தேவை­யான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு பொது நிர்­வாக அமைச்சு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

முஸ்லிம் பணி­யா­ளர்கள் தங்­க­ளது சமய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அனு­ம­திக்கும் வகையில் பணி­நேர திருத்­தங்­களை ஏற்­பாடு செய்யும் படியும் தவிர்க்க முடி­யாத கார­ணங்கள் ஏதும் இருந்தால் மாத்­திரம் சிறப்பு விடுப்பு கொடுக்க முடியும் எனவும் பொது நிர்­வாக அமைச்சு அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளது.

ரமழான் (நோன்பு) எதிர்வரும் மார்ச் 12 ஆம் திகதியன்று ஆரம்பமாகி ஏப்ரல் 11ஆம் திகதி நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.