சவூதியின் உதவிகளுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு

0 101

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கைத் தூதுவர் பி.எம்.ஹம்ஸா, சவூதி அரே­பிய வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்­சரும், அந்­நாட்டின் கால­நிலை விவ­கார தூது­வ­ரு­மான ஆதில் பின் அஹமட் அல் ஜுபைரை நேரில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இதன்­போது சவூதி அரே­பியா இலங்­கைக்கு வழங்கி வரும் உத­வி­க­ளுக்கு விசேட நன்­றி­களையும் தெரி­வித்தார்.

குறிப்­பாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள காஸா பிராந்­திய மக்­க­ளுக்கு மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் இலங்கை வழங்­கிய ஒரு தொகுதி தேயி­லையை சவூதி ரேபியா ஊடாக காஸா­வுக்கு அனுப்பி வைப்­ப­தற்கு உத­வி­ய­மைக்கும் சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கைத் தூதுவர் பி.எம்.ஹம்ஸா சவூதி அரே­பிய அர­சுக்கு நன்­றி­களைத் தெரி­வித்­தார்.

இச்­சந்­திப்பின் போது சவூதி இரா­ஜாங்க அமைச்­சரும், இலங்கைத் தூது­வரும் இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான நட்­பு­றவு குறித்து மகிழ்ச்­சி­யினைப் பரி­மாறிக் கொண்­டனர். கால­நிலை மாற்றம், சுற்­றாடல் விவ­கா­ரங்கள் மற்றும் காஸாவின் மனிதாபிமான சவால்கள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடினர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.