வெலிகம பாரி அரபுக் கல்லூரி மீண்டும் திறப்பு

0 156

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பு­ரைக்­க­மைய கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் மூடப்­பட்­டி­ருந்த வெலி­கம, கல்­பொக்க மத்­ர­ஸதுல் பாரி அரபுக் கல்­லூரி நேற்று முன்­தி­னம் 30 ஆம் திகதி முதல் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மீண்டும் திறக்­கப்­பட்­டுள்­ள­தாக கல்­லூ­ரியின் அதிபர் அப்துல் ரஹ்­மான் (மலா­ஹிரி) தெரி­வித்தார்.

குறிப்­பிட்ட கல்­லூ­ரியின் மாணவர் ஒருவர் கல்­லூரி ஆசி­ரியர் ஒரு­வ­ரினால் தாக்­கப்­பட்டு காயங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டமை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து திணைக்­களம் கல்­லூ­ரியை கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் தற்­கா­லி­க­மாக மூடி­வி­டும்­படி பணித்­தி­ருந்­தது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் வெலி­கம பொலி­ஸாரும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரி­களும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

வெலி­கம பொலிஸார் சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரியர், மாணவர் மற்றும் பெற்­றோரை அழைத்து சமா­தான முயற்­சி­யொன்­றினை முன்­னெ­டுத்து வெற்­றியும் கண்­டனர்.

இவ்­வி­வ­காரம் சுமு­க­மாக தீர்த்து வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து திணைக்­களம் அரபுக் கல்­லூ­ரியின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு மீண்டும் அனு­மதி வழங்­கி­ய­தை­ய­டுத்தே கல்­லூரி திறக்­கப்­பட்­டுள்­ளது.

ஆசி­ரி­யரால் தாக்­கப்­பட்டு காயங்­க­ளுக்­குள்­ளான மாணவர் வெலி­கம – பாரி அர­புக்­கல்­லூ­ரிக்கு அண்­மை­யி­லுள்ள பிறிதோர் மத்­ர­ஸாவில் இணைந்து கல்­வியைத் தொடர்­வ­தாக பாரி அரபுக் கல்­லூ­ரியின் அதிபர் அப்துல் ரஹ்மான் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

பதவி நீக்கம் செய்­யப்­பட்ட ஆசி­ரி­யரை மீண்டும் இணைத்துக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. கல்லூரியின் பணிப்பாளர் சபையே தீர்மானம் மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.