இம்ரான் கானுக்கும் மனைவிக்கும் 14 வருட சிறைத் தண்டனை

0 44

பாகிஸ்தான் முன்னாள் பிர­தமர் இம்ரான் கான் மற்றும் அவ­ரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்ட மறு­நாளே மேலும் 14 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.
கடந்த 2022இல் பிர­தமர் பத­வியில் இருந்து நீக்­கப்­பட்ட இம்ரான் கான், ஊழல் வழக்கில் குற்றம் சாட்­டப்­பட்டு ஏற்­கெ­னவே மூன்று ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரு­கிறார்.

நேற்று முன்­தினம் செவ்­வா­யன்று அவர் நாட்டின் ரக­சி­யங்­களைக் கசி­ய­விட்­ட­தற்­காக 10 ஆண்­டுகள் தண்­டனை பெற்றார். நேற்று புதன்­கி­ழ­மை­யன்றும் ஓர் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்­டுகள் வழங்­கப்­பட்­டது.
தனக்கு எதி­ரான பல வழக்­குகள் அர­சியல் உள்­நோக்கம் கொண்­டவை என்று இம்ரான் கான் கூறி­யுள்ளார்.

ரக­சி­யங்­களை கசி­ய­விட்ட வழக்கு என்ன?
மார்ச் 2022 இல் அமெ­ரிக்­காவில் அந்­நாட்டு உயர் மட்ட அதி­கா­ரி­க­ளுடன் பாகிஸ்­தா­னுக்­கான அமெ­ரிக்க தூதுவர் முக்­கி­ய­மான பேச்­சு­வார்த்தை ஒன்றில் பங்­கேற்றார். அப்­போது அங்கு பேசப்­பட்ட முக்­கிய விவ­கா­ரங்கள் உள்­ள­டங்­கிய ரக­சிய ஆவ­ணங்­களை இஸ்­லா­மா­பாத்­திற்கு அனுப்பி வைத்தார்.

மார்ச் 2022இல் இம்ரான் கான் இஸ்­லா­மா­பாத்தில் கட்சி பொதுக் கூட்­டத்தில் பங்­கேற்றார். மேடையில் பேசிய இம்ரான் கான் தனது ஆட்­சியைக் கவிழ்க்க வெளி­நாட்டு சக்­திகள் திட்டம் போடு­வ­தாகக் கூறி தனது சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதத் துண்டை வெளியே எடுத்துக் காட்­டினார்.
இம்ரான் கான் ஆட்­சியில் இருந்து நீக்­கப்­பட்டால் அனை­வரும் மன்­னிக்­கப்­ப­டு­வீர்கள் என அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­தாக இம்ரான் கான் கூறினார். இதற்குப் பின்­ன­ணியில் எந்த நாடு இருக்­கி­றது என்­பதை இம்ரான் கான் வெளிப்­ப­டை­யாகச் சொல்­ல­வில்லை.

அதே­நேரம், அவர் அமெ­ரிக்­காவை விமர்­சிக்­கவும் தவ­ற­வில்லை. இந்தச் சம்­பவம் இம்ரான் கான் பிர­தமர் பத­வியில் இருந்து வில­கு­வ­தற்கு ஒரு மாதத்­திற்கு முன்பு நடந்­தது. தன்னை ஆட்­சியில் இருந்து அகற்ற சதி வேலை நடப்­ப­தாக இம்ரான் கான் முன்­வைத்த குற்­றச்­சாட்டை அமெ­ரிக்கா நிரா­க­ரித்­தது.
பாகிஸ்தான் தூதுவர் இஸ்­லா­மா­பாத்­திற்கு அனுப்­பிய ரக­சிய தூத­ரக கடி­தங்­களை பொது­ வெ­ளியில் பிர­த­மரே பேசி­யது பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது. தனக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் கொண்டு வரப்­பட்­டதன் பின்­ன­ணி­யிலும் அமெ­ரிக்கா இருப்­ப­தாக இம்ரான் கான் சந்­தேகம் தெரி­வித்தார்.

பத்து ஆண்டுகள் சிறை
இந்த நிலையில் இம்ரான் கானின் பதவி பறி­போன பிறகு, ஜூலை 2023இல் அதி­கா­ர­பூர்வ ரக­சிய சட்டம் 1923 இன் படி, முன்னாள் பிர­தமர் மீது அரசு ரக­சி­யங்­களை பொது வெளியில் கசி­ய­விட்­ட­தாகக் குற்­றம்­சாட்டி பாகிஸ்தான் அரசு வழக்கு தொடுத்­தது.

இந்த வழக்கின் விசா­ர­ணையை விரை­வு­ப­டுத்­து­மாறு நீதி­ப­தி­யிடம் தொடர்ந்து வலி­யு­றுத்­தப்­பட்­ட­தாக உள்ளூர் ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.
வழக்கை விசா­ரித்த பாகிஸ்தான் சிறப்பு நீதி­மன்றம், இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளி­யு­றவு அமைச்சர் ஷாஹ் மஹ்மூத் குரைஷி ஆகி­யோ­ருக்கு 10 ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது.

நீதி­மன்றத் தீர்ப்பு கேலிக்­கூத்­தா­னது என்றும் தீர்ப்பை மேல்­மு­றை­யீடு செய்ய உள்­ள­தா­கவும் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தெரி­வித்­துள்­ளது.
இம்ரான் கானின் எக்ஸ் பக்­கத்­திலும் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து பதி­வி­டப்­பட்­டுள்­ளது.

தீர்ப்பு பற்றி இம்ரான் கான் கருத்து
சைஃபர் வழக்கு இஸ்­லா­மாபாத் உயர் நீதி­மன்­றத்தால் இரண்டு முறை செல்­லாது என அறி­விக்­கப்­பட்டு மீண்டும் விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டப்­பட்ட ஒரு வழக்கு என்­பதை நினைவில் கொள்­ளுங்கள்.

இரண்டு முறையும் இந்த வழக்கு அர­ச­மைப்பு மற்றும் சட்­டத்தை மீறி நடத்­தப்­பட்­டது. இந்த வழக்கு பொய், மிரட்டல், சதி, வஞ்­ச­கத்தால் கட்டி எழுப்­பப்­பட்­டுள்­ளது. அத­னால்தான் உச்­ச­நீ­தி­மன்­றமும் எனக்கு இந்த வழக்கில் பிணை வழங்­கி­யது.

இப்­போது முக்­கிய சாட்­சி­களின் வாக்­கு­மூ­லத்தில் எனக்கும், ஷா மெஹ்­மூத்­துக்கும் எதி­ராக எதுவும் வெளி­வ­ரா­ததால், இதன் பின்­ன­ணியில் உள்­ள­வர்கள் பீதி­ய­டைந்­து­விட்­டனர்.

மேலும் சட்ட விதி­மு­றை­களைக் கடை­ப்பி­டிக்­காமல் இதை விரை­வாக முடித்­து­விட நினைக்­கி­றார்கள்,” என இம்ரான் கானின் எக்ஸ் பக்­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இம்ரான் கான் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யுமா?
முன்­ன­தாக, 2023 ஆகஸ்ட் மாதத்தில் அரசுக் கரு­வூ­ல­மான தோஷ­கா­னா­விடம் இருந்த பரிசுப் பொருட்­களை சட்­ட­வி­ரோ­த­மாக விற்­ற­தாக பாகிஸ்தான் முன்னாள் பிர­தமர் இம்ரான் கானுக்கு எதி­ராகத் தொட­ரப்­பட்ட வழக்கில் அவர் குற்­ற­வாளி என இஸ்­லா­மாபாத் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது.
இந்தத் தண்­ட­னையை உச்ச நீதி­மன்றம் அண்மையில் நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது சைஃபர் வழக்கில் 10 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பிப்ரவரி 8ஆம் திக­தி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தண்டனை அனுபவித்து வரும் இம்ரான் கானால் அதில் போட்டியிட முடியாது. தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் பிடிஐ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.