கிழக்கு மாகாணத்திலுள்ள 5 அமைச்சுகளிலும் முஸ்லிம் செயலாளர்கள் எவரும் இல்லை

இன சமநிலை பேணப்படுவதில்லை என இம்ரான் சாடல்

0 42

(எஸ்.ஏ.பறூஸ், ஹஸ்பர் ஏ.ஹலீம்)
கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள ஐந்து அமைச்­சு­க­ளிலும் எந்­தவொரு அமைச்­சுக்கும் முஸ்­லிம்கள் செய­லா­ள­ராக இல்லை. அத்­தோடு, கடந்த காலங்­களில் அரச நிய­ம­னங்­க­ளின்­போது பின்­பற்­றப்­பட்ட இனச்­ச­ம­நிலை புறந்­தள்­ளப்­பட்­டுள்­ள­தாக திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் இம்ரான் மகரூப் குற்றம் சுமத்­தினார்.

மேலும், ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் ஆட்­சியின் கீழ் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்ந்து வரு­வ­தாக அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.
இது குறித்து இம்ரான் மேலும் தெரி­விக்­கையில்,

கிழக்கு மாகா­ணத்தில் உள்ள 5 அமைச்­சுக்­களின் செய­லா­ளர்­களுள் இருவர் முஸ்லிம் உத்­தி­யோ­கத்­தர்­க­ளா­கவும், இருவர் தமிழ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளா­கவும், ஒருவர் சிங்­கள உத்­தி­யோ­கத்­த­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர். கிழக்கு மாகாண இனச்­ச­ம­நி­லையைக் கருத்தில் கொண்டு இந்த நிய­மனம் இடம் பெற்­றி­ருந்­தது.

ஆனால் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண அமைச்சு செய­லாளர் நிய­ம­னத்தில் தகு­தி­யுள்ளோர் இருந்தும் முஸ்லிம் உத்­தி­யோ­கத்­தர்கள் ஓரங்­கட்­டப்­பட்­டனர். இரு முஸ்லிம் செய­லா­ளர்கள் பணி­யாற்ற வேண்­டிய தரு­ணத்தில் கிழக்கு மாகாண வீதி அபி­வி­ருத்தி அமைச்சில் மாத்­திரம் ஒரு முஸ்லிம் உத்­தி­யோ­கத்தர் செய­லா­ள­ராகப் பணி­யாற்­றினார். சமீ­பத்தில் அவரும் கார­ண­மே­து­மின்றி அப்­ப­த­வியில் இருந்து அகற்­றப்­பட்­டுள்ளார். தற்­போது கிழக்கு மாகா­ணத்தின் 5 அமைச்­சுக்­க­ளிலும் எந்த ஒரு அமைச்­சிலும் முஸ்லிம் செய­லாளர்கள் இல்லை.

கடந்த காலங்­களில் கிழக்கு மாகா­ணத்தில் உள்ள பொதுச்­சேவை ஆணைக்­குழு, வீட­மைப்பு அதி­கா­ர­சபை, சுற்­றுலா அதி­கார சபை, போக்­கு­வ­ரத்து அதி­கா­ர­சபை, முன்­பள்ளிப் பணி­யகம், கூட்­டு­றவு ஆணைக்­குழு ஆகி­ய­வற்றின் தவி­சா­ளர்­களுள் சில­வற்­றுக்கு முஸ்லிம் தவி­சா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர். ஆனால் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் இவற்றில் எந்­த­வொரு முஸ்லிம் தவி­சா­ளர்­களும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. முஸ்­லிம்கள் ஓரங்­கட்­டப்­பட்­டனர். இது குறித்து ஏற்­க­னவே நான் சுட்­டிக்­காட்­டியுள்ளேன்.

தற்­போது அந்த வரி­சையில் அமைச்சுச் செய­லா­ளர்கள் பத­வி­யி­லி­ருந்தும் முஸ்லிம் உத்­தி­யோ­கத்­தர்கள் அகற்றப் பட்டுள்ளனர்.
இலங்கையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாகாணம் கிழக்கு மாகாணமாகும். இந்த மாகாணத்திலேயே முஸ்லிம்களுக்கு இந்த நிலையென்றால் ஏனைய மாகாண முஸ்லிம்களும் இது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.