15ஆம் திகதிக்கு முன் ஹஜ் யாத்திரிகர்கள் பதிவு செய்து கொள்ளவும்

0 112

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக நேற்று புதன்­கி­ழமை வரை 2630 பேரே விண்­ணப்­பித்­துள்­ளார்கள். இவ்­வ­ருட ஹஜ் விசா எதிர்­வரும் மார்ச் முதலாம் திகதி முதல் சவூதி ஹஜ் உம்ரா அமைச்­சினால் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளதால் எதிர்­வரும் 15 ஆம் திக­திக்கு முன் ஹஜ் யாத்­தி­ரைக்கு திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் தங்­களைப் பதிவு செய்து கொள்­ளு­மாறு வேண்­டப்­பட்­டுள்­ளனர்.

இறுதி நேர நெருக்­க­டி­களைத் தவிர்ப்­ப­தற்­காக ஹஜ் யாத்­தி­ரைக்கு திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் தாம­தி­யாது 25 ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­ட­ணைத்தைச் செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொண்டு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் அனு­மதிப் பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள ஹஜ் முகவர் நிலை­யங்­களைத் தொடர்பு கொண்டு பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் படி ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலைவர் ஏ.சி.பி.எம்.கரீம் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்ளார்.

திணைக்­க­ளத்­தினால் அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள 93 ஹஜ் முக­வர்­களின் பெயர் பட்­டியல் மற்றும் விப­ரங்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முகநூல் பக்கம் மற்றும் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தெ­னவும் அவர் கூறினார்.
எதிர்­வரும் மார்ச் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 25ஆம் திகதி வரை சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு ஹஜ் விசாக்களை விநியோகிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.