மட்டக்களப்பு பள்ளி முன்றலிலிருந்த 350 வருட பழமையான மரத்தை வெட்டிய விவகாரம்: வழக்கு உயர்நீதிமன்றில் விசாரணைக்கு ஏற்பு ;மே 21 இல் மீண்டும் விசாரணை

0 53

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
மட்­டக்­க­ளப்பு ஜாமி உஸ்­ஸலாம் ஜும்ஆப் பள்­ளி­வாயல் முன்­றலில் நின்ற 350 வரு­டங்கள் பழை­மை­யான மரத்தை சட்­டத்­திற்கு முர­ணாக வெட்­டி­ய­மைக்கு எதி­ராக கொழும்பு உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை வழக்கு திங்­கட்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

இதன்­போது குறித்த வழக்கின் விசா­ரணை எதிர்­வரும் மே மாதம் 21 ஆம் திக­தி­யன்று விசா­ர­ணைக்கு வரும் என தெரி­விக்­கப்­பட்­டது.
மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த ஏ.எல்.எம்.மர்சூக் மற்றும் ஆப்தீன் ஆகிேயாரால் இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட மர­மா­னது வர­லாற்றுச் சிறப்புமிக்­கது என்றும் மட்­டக்­க­ளப்பின் ஒரு அடை­யா­ள­மாக இருந்­தது என்றும் குறிப்­பிட்­டுள்­ள­துடன் இம் மர­மா­னது சூழ­லுக்கு பயன்­மிக்­க­தாக காணப்­பட்­டது எனவும் அதனை பலாத்­கா­ர­மாக வெட்­டி­ய­மை­யினால் பிர­தி­வா­திகள் தங்­களின் அடிப்­படை உரி­மை­களை மீறி­யுள்­ள­தாக மனு­தா­ரர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இந்த மரத்தில் பல நூற்­றுக்­க­ணக்­கான பற­வைகள் வசித்து வந்­தன. மரம் வெட்­டப்­பட்­ட­வுடன் அவை கூடு­களை இழந்­துள்­ளன எனவும் மனு­தா­ரர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர். அத்­துடன் பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான இடத்தில் இருந்த இந்த மரத்­தினை பள்­ளி­வா­சலின் அனு­ம­தி­யின்றி மட்­டக்­க­ளப்பு பிராந்­திய இலங்கை மரக்­கூட்­டுத்­தா­ப­னத்தின் ஊழி­யர்கள், மண்­முனை வடக்குப் பிர­தேச செய­லாளர் மற்றும் வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை ஆகி­யோரின் ஆத­ர­வோடு சட்­டத்­திற்கு முர­ணாக வெட்டி வீழ்த்தி உள்­ளனர் எனவும் மனுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ் வழக்கின் பிர­தி­வா­தி­க­ளாக இலங்கை மரக்­கூட்­டுத்­தா­பனம், மண்­முனை வடக்குப் பிர­தேச செய­லாளர், வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை,மட்­டக்­க­ளப்பு மா நகர சபை மற்றும் மட்­ட­க்க­ளப்பு ஜாமி­யுஸ்­ஸ­லாமா ஜும்மா பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

மனு­தா­ரர்கள் சார்­பாக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ், சட்­டத்­த­ரணி ஜா.றாஸி முஹம்மத் ஆகி­யோ­ருடன் அறி­வு­றுத்தல் சட்­டத்­த­ர­ணி­யாக றுடானி ஸாஹிர் ஆகியோர் ஆஜ­ராகி இருந்­தனர். குறிப்­பிட்ட வழக்­கா­னது எதிர்­வரும் மே மாதம் 21 திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்­ப­ட­வுள்­ளது.

மட்­டக்­க­ளப்பு ஜாமி­யுஸ்­ஸலாம் ஜும்ஆப் பள்­ளி­வாசல் முன்­றலில் காணப்­படும் இம் மரம் கடந்த 16.10.2023 அன்று வெட்­டப்­பட்­டது. பல நூற்­றாண்­டுகள் பழ­மை­யா­னதும் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இந்த மரத்தினை முழுமையாக வெட்ட வேண்டாமெனவும் முறிந்த பகுதியை பகுதியளவு அகற்றுமாறும் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகம் எழுத்து மூலமும் வாய் மூலமும் தெரிவித்திருந்த நிலையிலும் குறித்த மரம் முற்றாக வெட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.