மதரஸா சீர்த்திருத்தங்கள்: ஏன், எதற்கு?

0 432

எம்.எல்.எம்.மன்சூர்

இந்­தியா, பாகிஸ்தான் போன்ற நாடு­களில் கடந்த சில வரு­டங்­க­ளாக தீவி­ர­மாக இடம்­பெற்று வரும் மத­ர­ஸாக்கள் (அல்­லது இஸ்­லா­மிய கல்வி நிலை­யங்கள்) தொடர்­பான விவா­தங்­களின் சாராம்­சத்தை இப்­படி தொகுத்துக் கூற முடியும்:

“நவீன கால சமூ­கத்­தையும், அதன் சிக்­க­லான பரி­மா­ணங்­க­ளையும் புரிந்து கொள்­வ­தற்கு அவ­சி­ய­மான முக்­கி­ய­மான பாடங்­களை மத­ர­ஸாக்கள் போதிப்­ப­தில்லை. அதன் கார­ண­மாக, சம­கால உலகின் பிரச்­சி­னை­க­ளையும், சவால்­க­ளையும் சரி­வரப் புரிந்து, செயற்­படக் கூடிய சமயத் தலை­வர்­க­ளையோ அல்­லது அறி­ஞர்­க­ளையோ அவற்றால் உரு­வாக்க முடி­யா­துள்­ளது”.

அதே நேரத்தில், முஸ்­லிம்கள் அல்­லாத தரப்­புக்கள் ‘மத­ர­ஸாக்கள் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தின் விளை­நி­லங்­க­ளாக இருந்து வரும் கார­ணத்தால் அவை தேசிய பாது­காப்­புக்கு பெரும் அச்­சு­றுத்­தலை விடுத்து வரு­கின்­றன’ என்ற விதத்­தி­லான பிரச்­சா­ரங்­களை தொடர்ந்து முன்­வைத்து வரு­கின்­றன. குறிப்­பாக, வட இந்­தி­யாவில் BJP/RSS தரப்­புக்­களும், இலங்­கையில் பொது­பல சேனா இயக்கம், அத்­து­ர­லியே ரதன தேர­ரையும் உள்­ளிட்ட தீவிர சிங்­கள – பௌத்த நிலைப்­பாட்டை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் ஒரு சில முன்­னணி பிக்­குகள் மற்றும் சிங்­கள ஊட­கங்கள் ஆகிய தரப்­புக்கள் இந்த நிலைப்­பாட்­டி­லேயே இருந்து வரு­கின்­றன.

ஈஸ்டர் தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்னர், மத­ர­ஸாக்கள் தொடர்­பாக ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்­பிக்கும் பொறுப்பை அர­சாங்கம் முதலில் பாரா­ளு­மன்­றத்தின் தேசிய பாது­காப்­புக்­கான துறைசார் கண்­கா­ணிப்பு கமிட்­டி­யிடம் ஒப்­ப­டைத்­தது.

முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இஸ்லாமிய கல்வி நிலையங்களின் ஒழுங்குமுறைப்படுத்துனர்
(Regulator) என்ற அதன் பாத்திரத்தை எவ்விதமான தயவு தாட்சண்யமுமின்றி வகித்து வர வேண்டும்.

அந்தக் கமிட்­டியின் பணிப்­பாணை வரு­மாறு:
“இனங்­க­ளுக்கும், மதங்­க­ளுக்­கு­மி­டையில் நட்­பு­றவைப் பலப்­ப­டுத்தி, புதிய பயங்­க­ர­வா­தத்­தையும், தீவி­ர­வா­தத்­தையும் இல்­லா­தொ­ழிக்கும் பொருட்டு தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான சட்­டங்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான யோச­னை­களை முன்­வைத்தல்”.

அதா­வது, ‘மத­ர­ஸாக்கள் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக இருந்து வரு­கின்­றன’ என்ற பொதுப் புத்தி சார்ந்த சிந்­த­னையின் அடிப்­ப­டை­யி­லேயே அர­சாங்­கத்­தினால் இவ்­வா­றான ஒரு பணிப்­பாணை வழங்­கப்­பட்­டி­ருந்­தது.
இந்­தி­யாவின் தேசிய மனித உரி­மைகள் ஆணை­யத்­தையும் உள்­ளிட்ட மனித உரி­மைகள் அமைப்­புக்கள் மத­ர­ஸாக்கள் தொடர்­பான பிரச்­சி­னையை ‘சிறுவர் உரி­மைகள்’ என்ற கண்­ணோட்­டத்தில் அணுகி, விமர்­ச­னங்களை முன்­வைத்து வரு­கின்­றன. அதா­வது, பிள்­ளை­களின் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச சம­வா­யத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்கும் “16 வயது வரை­யி­லான கட்­டாய முறைசார் கல்வி” என்ற உறுப்­பு­ரி­மையை இந்­தி­யா­வெங்­கிலும் செயற்­பட்டு வரும் பெருந்­தொ­கை­யான மத­ர­ஸாக்கள் மீறி வரு­கின்­றன என்­பதே அவர்கள் முன்­வைக்கும் குற்­றச்­சாட்டு.

ஈஸ்டர் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து சிங்­கள ஊட­கங்­களில் மத­ர­ஸாக்கள் மிக முக்­கி­ய­மான ஒரு பேசு­பொ­ரு­ளாக எழுச்ச்­சி­ய­டைந்­த­துடன், அத்­து­ர­லியே ரதன தேரர் போன்­ற­வர்கள் “இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தத்தின் ஊற்­றுக்கண் மத­ர­ஸாக்­க­ளி­லி­ருந்தே தோன்­று­கின்­றது” என்ற கருத்தை மிகவும் வெற்­றி­க­ர­மான விதத்தில் சந்­தைப்­ப­டுத்தி, சிங்­கள மக்­களின் பொதுப் புத்­தியில் ஊன்றச் செய்­தார்கள்.

அந்தப் பின்­ன­ணியில், முஸ்லிம் சமய, பண்­பாட்­ட­லு­வல்கள் அமைச்சு 2019 மே மாதம் முதல் வாரம் “மத­ரஸா கல்­வியை ஒழுங்­கு­மு­றைப்­ப­டுத்தும் சட்டம்” என அழைக்­கப்­படும் ஒரு சட்­ட­வ­ரைவை அர­சாங்­கத்­திடம் சமர்ப்­பித்­தது. பின்னர் இது தொடர்­பான அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­களின் கருத்­துக்­க­ளையும் உள்­ள­டக்­கிய விதத்தில் “இஸ்­லா­மிய கல்வி வரைவுச் சட்டம்” என்ற ஆவணம் 17.07.2019 இல் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

அண்­மையில் முஸ்லிம் பாட­சாலை ஒன்றின் நூற்­றாண்டு விழாவில் பங்­கேற்று உரை நிகழ்த்­திய ஜனா­தி­பதி முஸ்­லிம்­களின் மார்க்க கல்­வியை ஒழுங்­கு­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு வெகு விரைவில் ஒரு சட்­ட­மூலம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் எனக் கூறி­யி­ருந்தார். அதா­வது, இந்­நோக்­கத்­துக்­கென 2019 ஆம் ஆண்டு சமர்ப்­பிக்­கப்­பட்ட சட்­ட­வ­ரைவு கிட்­டத்­தட்ட நான்­கரை வரு­டங்கள் கழிந்த நிலை­யிலும் இன்­னமும் ஒரு சட்­ட­மாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பது அதன் மூலம் தெரிய வந்­தது.

கிழக்­கி­லங்­கையில் இடம்­பெற்ற ஒரு மத­ரஸா மாண­வனின் துர­திர்ஷ்­ட­வ­ச­மான மர­ணத்­தை­ய­டுத்து இந்தத் தலைப்பு கிட்­டத்­தட்ட இரண்டு வார காலம் (குறிப்­பாக சமூக ஊட­கங்­களில்) பேசு­பொ­ரு­ளாக இருந்து வந்­தது. அச்­சந்­தர்ப்­பத்­திலும் கூட, மத­ர­ஸாக்­களை ஒழுங்­கு­மு­றைப்­ப­டுத்தும் சட்ட வரைவு உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு, ஒரு சட்­ட­மாக நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மெனக் கோரும் வலு­வான குரல்கள் முஸ்லிம் சமூ­கத்­தி­ட­மி­ருந்து எழ­வில்லை.

குறிப்­பாக, கிழக்கை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இது தொடர்­பாக அர­சாங்­கத்தின் மீது அழுத்தம் பிர­யோ­கித்­த­தா­கவும் தெரி­ய­வில்லை. வழமை போல இப்­போது எல்­லோரும் அதனை மறந்­தி­ருக்­கி­றார்கள் (மீண்டும் ஒரு அசம்­பா­விதம் இடம்­பெறும் வரையில் அல்­லது மற்­றொரு சம்­ப­வத்தை முகாந்­தி­ர­மாகக் கொண்டு ரதன தேரர் போன்­ற­வர்கள் மத­ர­ஸாக்­க­ளுக்கு எதி­ராக போர்க் கொடி தூக்கும் வரையில் நிலைமை அப்­ப­டித்தான் இருக்கும்).

1978 தொடக்கம் ஒரு புறம்­பான திணைக்­க­ள­மாக செயற்­பட்டு வந்­தி­ருக்கும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் கிட்­டத்­தட்ட 40 ஆண்டு காலம் மத­ர­ஸாக்கள் குறித்து – அதா­வது, நாட்டில் இஸ்­லா­மிய மார்க்கக் கல்­வியை வழங்கி வரும் முதன்­மை­யான கல்வி நிறு­வ­னங்கள் குறித்து – கவனம் செலுத்­தி­யி­ருக்­க­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரிய ஒரு விடயம். (தேவை மதிப்­பீ­டுகள் எவையும் மேற்­கொள்­ளப்­ப­டாமல்) ஊருக்கு ஊர் காளான்கள் போல மத­ர­ஸாக்கள் பெருகி வரு­வது குறித்து சமூக நலனில் அக்­கறை கொண்­டி­ருந்த பலர் நீண்ட கால­மாக கரி­ச­னை­களை வெளிப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கி­றார்கள். அவற்றை கிஞ்­சித்தும் பொருட்­ப­டுத்­தாமல் செயற்­பட்டு வந்­தி­ருக்கும் இத்­தி­ணைக்­களம், சிங்­கள இன­வாதச் சக்­திகள் இப்­பி­ரச்­சி­னையை கையில் எடுத்த பின்­ன­ரேயே திடீ­ரென விழித்துக் கொண்­டது.

வரு­டாந்தம் ஹஜ் பய­ணங்­களை ஏற்­பாடு செய்­வதும், மீலாத் விழாக்­களை நடத்­து­வதும் மட்டும் தான் ‘முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள்’ என்ற விடயப் பரப்­புக்குள் வரும் பணிகள் என அது சிந்­தித்து, செயற்­பட்டு வந்­தி­ருப்­பது போல் தெரி­கி­றது.

2019 இல் தயா­ரிக்­கப்­பட்ட சட்­ட­வ­ரைவின் பிர­காரம், “மத­ர­ஸாக்­களை ஒழுங்­கு­மு­றை­ப்ப­டுத்­து­வ­தற்கும், பதிவு செய்­வ­தற்கும், கண்­கா­ணிப்­ப­தற்கும், கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும், இலங்­கையில் மத­ரஸா கல்­வியை விருத்தி செய்து, மேம்­ப­டுத்­து­வ­தற்கும்” அதி­கா­ரங்­களைக் கொண்ட ஒரு மத­ரஸா கல்விச் சபை உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது.

இச்­சபை பின்­வரும் ஒன்­பது உறுப்­பி­னர்­களைக் கொண்­டி­ருக்கும்:
மத­ரஸா கல்­வியில் நிபு­ணத்­துவ அறிவைக் கொண்­டி­ருக்கும் மூன்று மார்க்க அறி­ஞர்கள்
கல்­வித்­து­றையில் பரந்த அனு­ப­வத்தைக் கொண்­டி­ருக்கும் மூன்று முக்­கிய நபர்கள்
கல்வி மற்றும் திறன் அபி­வி­ருத்தி அமைச்சின் பிர­தி­நி­திகள்.
அது தவிர, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் பணிப்­பா­ளரின் கீழ் பின்­வரும் முதன்மை உத்­தி­யோ­கத்­தர்­களும் நிய­மனம் செய்­யப்­ப­ட­வுள்­ளனர்:
மத­ர­ஸாக்கள் பதி­வாளர்
– பரீட்­சைகள் கட்­டுப்­பாட்­டாளர்
– மத­ரஸா பரி­சோ­தகர்

இச்­சட்ட வரைவின் பிர­காரம், “மத­ரஸா” என்ற பதத்­துக்கு பின்­வரும் விதத்தில் வரை­வி­லக்­கணம் வழங்­கப்­பட்­டுள்­ளது:
“மத­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரிகள், குர்ஆன், அரபு மொழி மற்றும் இஸ்­லா­மிய தத்­து­வங்கள் என்­ப­வற்றை கற்றுக் கொடுக்கும் வேறு நிறு­வ­னங்கள் (தப்ஸீர், ஹதீஸ், கலம், உசூல், முகாலத் என்­ப­வற்றை கற்றுக் கொடுக்கும் நிறு­வ­னங்கள்)’’.

மத­ர­ஸாக்களை நடத்­து­வ­தற்கு வழி­காட்­டு­தல்ளை வழங்­கு­வ­தற்­கென விரி­வான ஒரு கைநூலும் தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இக்­கைநூல் மத­ர­ஸாக்­களை பதிவு செய்யும் நடை­முறை, மாணவர் அனு­மதி, தொடர் கண்­கா­ணிப்பு, ஆசி­ரி­யர்­களின் தகை­மைகள், பாடத்­திட்டம்/ பாட­நெ­றிகள், கட்­ட­டங்கள் போன்ற உட்­கட்­ட­மைப்பு வச­திகள் என்­பன தொடர்­பான தெளி­வான வழி­காட்­டு­தல்­க­ளையும், இந்த ஒவ்­வொரு விடயம் தொடர்­பா­கவும் கண்­டிப்­பாக பின்­பற்­றப்­பட வேண்­டிய தர நிய­மங்­க­ளையும் (Standards) உள்­ள­டக்­கி­யி­ருக்கும்.

நன்­கொ­டை­களை பெற்றுக் கொள்­வ­தற்­கென புறம்­பான ஒரு மத­ரஸா நிதி­யமும் உரு­வாக்­கப்­பட உள்­ளது. கைநூலில் எடுத்து விளக்­கப்­பட்­டி­ருக்கும் தர நிய­மங்­களைப் பூர்த்தி செய்யத் தவறும் மத­ர­ஸாக்கள் பதிவு செய்­யப்­படமாட்­டாது. அவ்­விதம் பதிவு செய்­யப்­ப­டாத மத­ர­ஸாக்கள் ‘சட்ட விரோ­த­மா­னவை’ எனக் கரு­தப்­பட்டு, அவற்­றுக்­கெ­தி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
மத­ரஸா கல்விச் சபை­யினால் உரு­வாக்­கப்­படும் பொதுப் பாடத்­திட்­டத்தை அவை பின்­பற்ற வேண்டும். பொதுப் பரீட்­சைகள் நடத்­தப்­ப­ட­வி­ருப்­ப­துடன், மத­ரஸா மாண­வர்­க­ளுக்கு மேல­தி­க­மாக தொழிற் பயிற்­சியும் வழங்­கப்­படும்.
இது தொடர்­பாக ஒரு பொது பாடத்­திட்டம் வெகு விரைவில் அமுல் செய்­யப்­ப­ட­வி­ருப்­ப­தாக இந்தத் திணைக்­களம் அண்­மையில் தெரி­வித்­த­துடன், அநே­க­மாக சம்­பந்­தப்­பட்ட சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு முன்னர் இது இடம்­பெற முடியும் எனத் தெரி­கி­றது. தேசிய கல்விக் கொள்கை 13 வருட கால கட்­டாய முறைசார் கல்­வியை அவ­சி­யப்­ப­டுத்­திய போதிலும், இதனை தற்­பொ­ழுது மத­ர­ஸாக்கள் பின்­பற்­று­வ­தில்லை.

தேசிய பாது­காப்­புக்­கான பாரா­ளு­மன்ற துறைசார் கமிட்டி அதன் அறிக்­கையை 19.02.2020 இல் அர­சாங்­கத்­திடம் சமர்ப்­பித்­தது. அந்த அறிக்கை அனைத்துப் பிள்­ளை­களும் ஆகக் குறைந்­தது 11 வருட கால (O/L வரை­யி­லான) முறைசார் கல்­வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், மத­ரஸா அனு­ம­திக்­கான குறைந்தபட்ச வயது 16 ஆக இருந்து வர வேண்டும் என்றும் குறிப்­பி­டு­கி­றது. மேலும், நாட்டில் இயங்கும் மொத்த மத­ர­ஸாக்­களின் எண்­ணிக்கை 75 ஆக வரை­யறை செய்­யப்­பட வேண்டும் எனவும் அது பரிந்­துரை செய்­துள்­ளது.
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் 2020 ஆம் ஆண்டில் மத­ரஸா அதி­பர்­க­ளு­டனும், பணிப்­பாளர் சபை உறுப்­பி­னர்­க­ளு­டனும் இந்த விடயம் தொடர்­பாக விரி­வான கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்­தி­யது. இந்த சட்­ட­வ­ரைவில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு அனை­வரும் தமது உடன்­பாட்டை தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள். ஆனால், மத­ர­ஸாக்­களின் எண்­ணிக்­கையை வரை­யறை செய்தல் மற்றும் அனு­ம­திக்­கான குறைந்த பட்ச வயதை 16 ஆக நிர்­ண­யித்தல் போன்ற நிபந்­த­னை­க­ளுக்கு ஒரு சில மத­ரஸா சம்­மே­ள­னங்கள் உடன்­ப­ட­வில்லை என்­ப­தனை அறிய முடி­கி­றது.

இப்­பொ­ழுது இத்­தி­ணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்கும் மத­ர­ஸாக்­களின் எண்­ணிக்கை 317 ஆகும். 125 மத­ர­ஸாக்கள் பதிவு செய்­யப்­ப­டா­தவை. தேசிய பாது­காப்பு தொடர்­பான துறைசார் மேற்­பார்வை கமிட்­டியின் அறிக்­கையின் பிர­காரம், பதிவு செய்­யப்­ப­டாத மத­ர­ஸாக்­களின் எண்­ணிக்கை 175 ஆகும். அப்­படிப் பார்த்தால், தற்­பொ­ழுது நாட்டில் கிட்­டத்­தட்ட 492 மத­ர­ஸாக்கள் இயங்கி வரு­கின்­றன. அவற்றில் சுமார் 28,000 மாண­வர்கள் இருந்து வரு­வ­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவற்றில் படித்து வெளி­யேறும் கணி­ச­மான அள­வி­லான மௌல­விமார் வேலை­யற்­ற­வர்­க­ளாக இருந்து வரு­கின்­றார்கள்.
உத்­தேச சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு, அது எப்­போது ஒரு சட்­ட­மாக நிறை­வேற்­றப்­படும் என்ற விடயம் எவ­ருக்கும் தெரி­யாது. சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்­களும் இந்த தாம­தத்­திற்­கான காரணம் என்ன என்­பதை தெரி­விக்­க­வில்லை. ஊட­கங்­களின் கவனம் இந்த ஆண்டில் இடம்­பெ­ற­வி­ருக்கும் தேர்­தல்கள் பக்கம் திரும்­பி­யி­ருக்கும் நிலையில், ‘மத­ரஸா’ என்ற தலைப்பு (தற்­கா­லி­க­மாக) மறக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால், முஸ்லிம் சமூகம் இது தொடர்­பாக மெத்­த­ன­மாக இருக்க முடி­யாது. மத­ரஸா சீர்­தி­ருத்தம் எப்­பொ­ழுதும் அதன் முன்­னு­ரிமைத் துறை­யொன்­றாக இருந்து வர வேண்டும்.

வகை­தொ­கை­யற்ற விதத்திலான மதரஸாக்களின் பரவலும், (அடிப்படை மனித உரிமை மீறல்களாக கருதப்படும்) சிறுவர் உரிமை மீறல்களும், சிறுவர் துஷ்பிரயோகங்களும், நன்கொடை வசூல் என்ற போர்வையில் ஆங்காங்கே இடம்பெற்று வரும் மோசடிகளும், வெளிப்படைத்தன்மை (Transparency) மற்றும் பொறுப்புக் கூறல் (Accountability) என்பன அறவே இல்லாத விதத்தில் செயற்பட்டு வரும் ஒரு சில மதரஸாக்களின் விதி மீறல்களும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமானால் இச்சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட்டு, உரிய விதத்தில் அமுல் செய்யப்பட வேண்டும்.

அத்தோடு, முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இஸ்லாமிய கல்வி நிலையங்களின் ஒழுங்குமுறைப்படுத்துனர் (Regulator) என்ற அதன் பாத்திரத்தை எவ்விதமான தயவுதாட்சண்யமுமின்றி வகித்து வர வேண்டும்.
இறுதியாக ஓர் எச்சரிக்கை குறிப்பு.மதரஸாக்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருவது எப்படிப் போனாலும், பாரிய நிதி வளங்களுடனும், மிதமிஞ்சிய அளவிலான, ஆடம்பரமான உள்கட்டமைப்பு வசதிகளுடனும் சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் செயற்பட்டு வரும் ‘நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய’ ஒரு சில மதரஸாக்கள் அப்பிரதேசங்களில் வாழ்ந்து வரும் உள்ளூர் சிறுபான்மை முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன என்ற யதார்த்தத்தை இங்கு சொல்லித் தான் ஆக வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.