தற்கொலைக்கு வித்திட்ட மத போதனை

0 111

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
தவ­றான மத போத­னை­களை நடத்தி, சமூக ஊட­கங்­களில் பெளத்த மதத்தின் கொள்­கை­களைத் திரி­பு­ப­டுத்தி மக்­களை தற்­கொ­லைக்குத் தூண்­டி­ய­துடன் தானும் தற்­கொலை செய்து கொண்ட ருவான் பிர­சன்ன குண­ரத்ன என்­ப­வரின் போத­னை­களில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்­களைத் தேடி சி.ஐ.டி. பிரி­வினர் விரி­வான விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

குறிப்­பிட்ட விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு இர­க­சிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் இருவர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள் இரு­வரின் கீழ் 15 பேர­டங்­கிய பொலிஸ் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­கு­ழுவின் ஒரு பிரி­வினர் விஷம் அருந்தி தற்­கொலை செய்து கொண்­டுள்ள ஏழு பேரின் வைத்­திய அறிக்­கை­யூ­டாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­ள­வுள்­ளனர். யூடியுப் உட்­பட சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யான வீடியோ பதி­வுகள் இவ்­வி­சா­ர­ணை­களின் போது உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளன.

அத்­தோடு சம்­பந்­தப்­பட்ட மத போத­கரின் போத­னை­களை ஏற்­பாடு செய்­வதில் தொடர்புபட்­ட­வர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்­களை இனங்­கண்டு அவர்­களை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்தி வாக்கு மூலமும் பெற்­றுக்­கொள்­ளப்ப­ட­வுள்­ளது.
இந்த போத­னை­களில் பங்­கு­பற்­றி­ய­வர்கள் தங்கள் குடும்­பத்­திலும் இருந்­தால் அவர்கள் தொடர்பில் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும் என பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிஹால் தல்­துவ தெரி­வித்­துள்ளார்.

47 வய­தான மத போதகர் ருவான் பிர­சன்ன குண­ரத்ன அடுத்த பிற­விக்­கான தற்­கொ­லையை ஊக்­கு­வித்து போத­னை­களை நடத்­தி­ய­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

இலங்­கையில் பல பகு­தி­களில் இத்­த­கைய போத­னை­களை நடத்­திய குண­ரத்ன அண்­மையில் 28.12.2023 அன்று ஹோமா­க­மயில் உள்ள தனது வீட்டில் தற்­கொலை செய்து கொண்டார். அவர் சயனைட் உட்­கொண்­டது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

30.12.2023 இல் அவ­ரது இறுதிச் சடங்­கு­களைத் தொடர்ந்து அவ­ரது மனைவி மற்றும் மூன்று பிள்­ளை­களும் தற்­கொலை செய்து கொண்­டனர்.
குண­ரத்­னவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அம்­ப­லாங்­கொ­டையைச் சேர்ந்த 34 வய­து­டைய நப­ரிடம் பொலிஸ் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. விசா­ர­ணையில் குண­ரத்ன தற்­கொலை செய்து கொள்­வ­தற்­கான போத­னை­களை செய்­தது தெரி­ய­வந்­தது.

விசா­ர­ணை­களைத் தொடர்ந்து அம்­ப­லாங்­கொ­டையைச் சேர்ந்த 34 வய­து­டைய நபர் குண­ரத்­னவின் மர­ணத்தைப் போன்றே மஹ­ர­க­மவில் உள்ள விடு­தி­யொன்றில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார். இதே­வேளை குண­ரத்­னவின் குடும்­பத்­தாரின் இறு­திச்­ச­டங்கில் கலந்து கொண்ட 21 வய­து­டைய பெண் ஒரு­வரும் இதே­போன்று சட­ல­மாக மீட்­கப்­பட்டார். ருஹுனு பல்­க­லைக்­க­ழக மாண­வி­யான இவர் யக்­க­லவில் உள்ள அவ­ரது வீட்டில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார். இவரும் மத போத­கரின் போத­னை­களைப் பின்­பற்­றி­ய­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

மத போத­னை­களை வழங்­கு­வதில் பிர­ப­ல­மான குண­ரத்ன தனது பிர­சங்­கங்­களின் வீடி­யோக்­களை சமூக ஊட­கங்­களில் பகிர்ந்­துள்ளார். இச்­சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் உள்ள சரி­யான நோக்கம் தெரி­ய­வில்லை.
இவர்களுக்கு நிதி நெருக்கடிகள் இருந்­தி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். குண­ரத்­னவின் போத­னை­களை செவி­ம­டுத்­த­வர்கள் தமது வீடு­களில் இருந்­தால் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறு பொலிஸார் பொது­மக்­களை வேண்­டி­யுள்­ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிஹால் தல்­துவ கூறு­கையில், போதகர் நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் போத­னை­களை நடத்­தி­யுள்ளார். மேலும் அவ­ரது சீடர்கள் பலர் தற்­கொலை செய்து கொண்­டுள்­ளனர். இது­வரை இறந்­த­வர்­களும் அவ­ரது இறுதி ஊர்­வ­லத்தில் கலந்து கொண்­ட­வர்கள் என்­பது பொலிஸ் விசா­ர­ணையில் தெரிய வந்­துள்­ளது.
இவ்­வா­றான மத போத­னை­க­ளுக்கு பொது­மக்கள் பலி­யா­காமல் இருக்­கு­மாறும் போத­னை­களில் கலந்து கொண்­ட­வர்­களின் உற­வி­னர்கள் போத­னை­க­ளினால் ஏற்­ப­டக்­கூ­டிய தற்­கொலை அபா­யங்கள் குறித்து அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு பொது­மக்­க­ளுக்கு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

போத­கரின் போத­னை­களால் தீவி­ர­மாக ஈர்க்­கப்­பட்­ட­வர்கள் தங்­க­ளது உயிர்­களை மாய்த்துக் கொண்­டுள்­ளார்கள் எனத் தெரி­வித்­துள்ள பொலிஸ் பேச்­சாளர் மத போதகர் தற்­கொ­லையை நியா­யப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் அடுத்த ஆன்­மாவைப் பெறு­வ­தற்கு இதுவே இல­கு­வான வழி எனவும் போதித்துள்ளார் என்றார்.

தற்­கொலை செய்து கொண்ட மத போத­கரின் வழி­காட்­டல்­களின் கீழ் அவ­ரது சீடர்கள் நாட்டில் இது போன்ற போத­னை­களைத் தொடர்­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளதால் இது தொடர்­பான விசா­ர­ணைகள் பலப்­ப­டுத்­தப்­பட்டுள்­ளன.
குற்­ற­வியல் விசா­ரணை திணைக்­க­ளத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரண­சிங்க மற்றும் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் காவிந்த பிய­சே­கர என்­போரின் வழி­ந­டத்­தல்­களின் கீழ் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­க­பட்­டுள்­ளன.

30 பேர் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்
சுவர்க்­கத்­துக்கு செல்ல வேண்­டு­மென்றால் உயிர்­து­றக்க வேண்டும் என்ற சித்­தாந்­தத்தை மத போதனைகள் மூலம் பரப்பி 7 பேரை தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டிய ருவான் பிரசன்ன குணரத்னவின் மூட நம்பிக்கை கும்பலுடன் நேரடியாக தொடர்புபட்ட முப்பது பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின்படி இந்தக் குழு அடையாளம் காணப்பட்டுள்ளது. இக் குழுவில் சில பெளத்த பிக்குகளும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இனங்காணப்பட்ட 30 பேரையும் மதவாதக் கருத்துகளிலிருந்து விடுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.