காஸாவில் அல் ஜெஸீ­ராவின் ஊட­க­வி­ய­லா­ளர்­களை இலக்கு வைத்துக் கொல்லும் இஸ்­ரேல்

0 70

எம்.ஐ.அப்துல் நஸார்

காஸாவில் இஸ்ரேல் மேலும் இரண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களை இலக்கு வைத்து கொன்­ற­தாக அல்-­ஜெ­ஸீரா குற்றம் சாட்­டி­யுள்­ளது.

ஹம்சா வாயெல் தஹ்தூஹ் மற்றும் முஸ்­தபா துரியா ஆகியோர் பய­ணித்த கார் மீது இரண்டு ரொக்­கெட்­டுகள் வீசப்­பட்­டதில் அவர்கள் கொல்­லப்­பட்­ட­தாக நேரில் கண்ட சாட்­சிகள் தெரி­வித்­தனர்.

கடந்த மூன்று மாதங்­களில் இஸ்ரேல் 79 ஊட­க­வி­ய­லா­ளர்­களைக் கொன்று குவித்­துள்ள நிலையில் பிராந்­தி­யத்தில் ‘முடி­வுறாப் படு­கொ­லை­ககள்’ புரி­யப்­ப­டு­வ­தாக எல்­லை­க­ளற்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் என்ற ஆத­ரவுக் குழுவின் தலை­மை­யகம் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அதே­வே­ளையில் அல்-­ஜெ­ஸீரா ஊடகம் காஸாவில் அதன் இரண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களை இஸ்ரேல் இலக்கு வைத்து கொன்­ற­தாக குற்றம் சாட்­டி­யுள்­ளது.

ஹம்சா தஹ்தூஹ் மற்றும் முஸ்­தபா துரியா ஆகியோர் அல்-­ஜெ­ஸீ­ரா­வுக்­கான ஊடகப் பணியில் இருந்­த­போது கொல்­லப்­பட்­ட­தாக கட்­டாரை தள­மாகக் கொண்­டி­யங்கும் ஊடக வலை­ய­மைப்­பினால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூன்­றா­வ­தாக, சுதந்­திர ஊட­க­வி­ய­லா­ள­ரான ஹஸெம் ரஜப் காய­ம­டைந்தார். காஸாவில் அமைந்­துள்ள சுகா­தார அமைச்சு உயி­ரி­ழப்­புக்­களை உறுதி செய்­துள்­ளது. இஸ்­ரே­லிய தாக்­கு­தலே இதற்குக் கார­ண­மெ­னவும் குற்றம் சாட்­டி­யுள்­ளது.

காஸாவில் உள்ள அல் ஜெஸீ­ராவின் பணி­யகத் தலை­வ­ரான வாயெல் தஹ்­தூஹின் மூத்த மகன் தஹ்தூஹ், வாயெல் தஹ்­தூஹின் மனைவி, இரண்டு பிள்­ளைகள் மற்றும் ஒரு பேரக் குழந்தை ஆகியோர் ஒக்­டோபர் மாதம் இஸ்­ரே­லிய தாக்­கு­தலால் கொல்­லப்­பட்­டனர்.

தாக்­கு­த­லில் கொல்­லப்பட்ட ஹம்சா (இடது) தனது தந்தை வாயெல் தஹ்தூஹ் (வலது) உட­ன்

அவ­ரது மகனின் மரணம் பற்­றிய செய்தி வெளி­யான உட­னேயே, அல் ஜெஸீ­ராவின் 24 மணி நேர சேவையில் யுத்தம் பற்­றிய செய்­தி­களை அறிக்­கை­யிட்டுக் கொண்­டி­ருந்த தஹ்தூஹ், மீண்டும் நேர­லையில் தோன்­றினார். ‘காஸா பகு­தியில் என்ன நடக்­கி­றது என்­பதை முழு உல­கமும் பார்க்க வேண்டும்,’ என அவர் அல்-­ஜெ­ஸீ­ராவில் தெரி­வித்தார். ‘என்ன நடக்­கி­றது என்றால், பாது­காப்­பற்ற மக்­க­ளுக்கு பெரும் அநீதி இழைக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான நாமும் பக்­கச்­சார்­பாக நடத்­தப்­ப­டு­கின்றோம்’ எனத் தெரி­வித்தார்.

யுத்தம் தனிப்­பட்ட ரீதியில் அவ­ருக்கு ஈடு­செய்ய முடி­யாத இழப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­போ­திலும், தொடர்ந்து அறிக்­கை­யிட வேண்டும் என்ற அவ­ரது திட­சங்­கற்பம், பாலஸ்­தீன ஊட­க­வி­ய­லா­ளர்கள் எதிர்­கொள்ளும் ஆபத்­து­களின் அடை­யா­ள­மாக அவரை மாற்­றி­யுள்­ளது.

காஸாவில் உள்ள ஊட­க­வி­ய­லா­ளர்கள் யுத்­தத்தின் பாதிப்­புக்­களை அறிக்­கை­யிட மிகுந்த பிர­யத்­தனம் எடுக்­கின்­றனர், அதனால் அவர்­களே அதிக ஆபத்­துக்­க­ளையும் எதிர்­நோக்­கு­வ­தா­கவும் ஊட­க­வி­ய­லா­ளர்­களைப் பாது­காப்­ப­தற்­கான அமைப்பு கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று தெரி­வித்­தது.

‘குறிப்­பாக காஸா­வி­லுள்ள ஊட­க­வி­ய­லா­ளர்கள், முன்­னொ­ரு­போதும் இல்­லாத அள­வுக்கு தமது உயிர்­களைத் தியாகம் செய்­துள்­ள­தோடு, தொடர்ந்தும் தமது உயிர்­களை தியாகம் செய்து வரு­கின்­றனர், மேலும் அதிக அச்­சு­றுத்­தல்­க­ளை­யும எதிர்­கொள்­கின்­றனர்’ என அந்த அமைப்­பினைச் சேர்ந்த ஷெரிப் மன்சூர் அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார்.

‘பலர் சக ஊழி­யர்கள், தமது குடும்­பங்­க­ளையும் ஊடக வச­தி­க­ளையும் இழந்­துள்­ளனர், அது மட்­டு­மல்­லாது பாது­காப்­பான புக­லி­டமோ வெளி­யே­று­வ­தற்­கான வழியோ இல்­லா­த­போது பாது­காப்பைத் தேடி அவர்கள் ஓட­வேண்­டி­யுள்­ளது.’

இன்­று­வரை, இந்த மோதலில் 79 ஊட­க­வி­ய­லா­ளர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர் என எல்­லை­க­ளற்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் அமைப்பைச் சேர்ந்த கிறிஸ்டோப் டெலோயர் தெரி­வித்தார். ‘இது நிச்­ச­ய­மாக முடி­வில்­லாத படு­கொலை’ என டிலோயர் சமூக ஊட­கங்­களில் எழு­தி­யுள்ளார்.

காஸாவில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் அதிக எண்­ணிக்­கையில் கொல்­லப்­ப­டு­கின்­றமை ‘மிகவும் கவ­லை­ய­ளிக்­கின்­றது, அத்­தனை ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­னதும் கொலைகள் தொடர்­பிலும் சர்­வ­தேச சட்­டத்­தினை இறுக்­க­மாக உறு­தி­செய்யும் வகையில் முழு­மை­யா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மான விசா­ரணை நடத்­தப்­பட்டு, சட்­டங்­களை மீறி­யோ­ருக்கு எதி­ராக வழக்குத் தொட­ரப்­பட வேண்டும்’ என ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் அலு­வ­லகம் சமூக ஊட­கங்­களில் பதி­விட்­டுள்­ளது.

ஊட­க­வி­ய­லா­ளர்­களை ஏற்றிச் சென்ற கார் மீது இரண்டு ரொக்­கெட்­டுகள் வீசப்­பட்­ட­தாக நேரில் கண்ட சாட்­சிகள் ஏ.எப்.பி செய்தி நிறு­வ­னத்­திடம் தெரி­வித்­தனர். ஒரு ரொக்கட் வாக­னத்தின் முன்­பக்­கத்தைத் தாக்­கி­ய­தோடு, மற்­றொன்று சார­தியின் அருகில் அமர்ந்­தி­ருந்த ஹம்­சாவை தாக்­கி­யது. காரின் சிதைந்த பாகங்­களை மக்கள் ஒன்­று­கூடி பார்ப்­பதை காணொளிக் காட்­சிகள் காட்­டி­யன, அதே­வேளை வீதியில் இரத்தம் தேங்கிக் கிடந்­தது. அப்­ப­கு­தியில் வேறு இடங்­களில் எந்த சேதமும் காணப்­ப­ட­வில்லை.

‘இஸ்­ரே­லிய பாது­காப்புப் படை­யி­ன­ருக்கு அச்­சு­றுத்­த­லாக இருந்த ஒரு விமா­னத்தை இயக்­கிய ஒரு பயங்­க­ர­வா­தியை தாக்­கி­ய­தாக’ இஸ்­ரே­லிய இரா­ணுவம் ஏ.எப்.பி செய்தி நிறு­வ­னத்­திடம் தெரி­வித்­தது, மேலும் ‘பயங்­க­ர­வா­தி­களின் தாக்­கு­தலின் போது, அதே வாக­னத்தில் மேலும் இரண்டு சந்­தேக நபர்கள் இருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டது’ எனவும் இஸ்­ரே­லிய இரா­ணுவம் தெரி­வித்­தது.

ஒக்­டோபர் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்­கொண்ட தாக்­கு­த­லுக்குப் பின்னர் மத்­திய கிழக்கில் தனது நான்­கா­வது சுற்­றுப்­ப­ய­ணத்தை மேற்­கொண்­டி­ருக்கும் அமெ­ரிக்க வெளி­நாட்­ட­லு­வல்கள் செய­லாளர் அண்­டெனி பிளிங்கன், தஹ்­தூவின் இழப்­புக்கு ‘ மிக ஆழ­மாக, வருந்­து­கிறேன்’ எனத் தெரி­வித்தார்.

‘நானே ஒரு தந்தை என்ற வகையில், அவர் அனு­ப­வித்த பயங்­க­ரத்தை என்னால் கற்­ப­னை­கூட செய்து பார்க்க முடி­யா­துள்­ளது, ஒரு தடவை அல்ல, இப்­போது இரண்­டா­வது தடவை. இது கற்­பனை செய்ய முடி­யாத சோகம், மேலும் பல அப்­பாவி பாலஸ்­தீன ஆண்கள், பெண்கள், குழந்­தை­க­ளுக்கும் இதுவே நடந்­துள்­ளது.’ என அவர் கட்­டாரில் தரித்­தி­ருந்­த­போது போது ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார்.

அல்-­ஜெ­ஸீரா வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்றில், ‘பாலஸ்­தீன ஊட­க­வி­ய­லா­ளர்­களின் காரை இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்புப் படைகள் குறி­வைத்­ததை வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தா­கவும்’ இஸ்ரேல் ஊட­க­வி­ய­லா­ளர்­களை வேண்­டு­மென்றே ‘இலக்கு’ வைப்­ப­தா­கவும் ‘ஊடக சுதந்­தி­ரத்தின் கொள்­கை­களை அப்­பட்­ட­மாக மீறு­வ­தா­கவும்’ குற்றம் சாட்­டி­யுள்­ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில், தாக்­கு­த­லொன்­றின்­போது மற்­றொரு அல்-­ஜெ­ஸீரா ஊட­க­வி­ய­லா­ள­ரான மொமன் அல்-­ஷ­ரா­பியின் தந்தை, தாய் மற்றும் 20 குடும்ப உறுப்­பி­னர்கள் கொல்­லப்­பட்­டனர்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை, ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் பெருந்­தி­ர­ளான மக்கள் பற்­கு­பற்­றினர், அங்கு கண்­ணீ­ருடன் தஹ்தூஹ் இறந்த தனது மகனின் கையை முத்­த­மி­டு­வதைக் காண முடிந்­தது.

‘இஸ்­ரே­லிய கண்ணால் அன்றி உலகம் இரண்டு கண்­க­ளாலும் பார்க்க வேண்டும், பலஸ்­தீன மக்­க­ளுக்கு நடக்கும் அனைத்­தையும் அவர்கள் பார்க்க வேண்டும்,’ என தஹ்தூஹ் தெரி­வித்தார்.

‘ஹம்சா அவர்­க­ளுக்கு (இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கு) என்ன செய்தார்? என் குடும்பம் அவர்­க­ளுக்கு என்ன செய்­தது? அவர்­க­ளுக்கு பொது­மக்கள் என்ன செய்­தார்கள்? அவர்­க­ளுக்கு எதுவும் செய்­ய­வில்லை, ஆனால் காஸா பகு­தியில் என்ன நடக்­கி­றது என்­பதை பார்க்­காமல் உலகம் கண்­களை மூடிக்­கொண்­டி­ருக்­கின்­றது’ என கடந்த டிசம்­பரில் இஸ்­ரே­லிய தாக்­கு­தலில் காய­ம­டைந்த தஹ்தூஹ் தெரி­வித்தார். தஹ்தூஹ் காய­ம­டைந்த தாக்­கு­தலில் அல்-­ஜ­ஸீ­ராவின் ஒளிப்­ப­தி­வாளர் சமிர் அபூ டக்கா கொல்­லப்­பட்டார்.

உத்­தி­யோ­க­பூர்வ இஸ்­ரே­லிய புள்­ளி­வி­ப­ரங்­களின் அடிப்­ப­டையில் ஏ.எப்.பி செய்தி நிறு­வ­னத்தின் கணக்­கீட்­டின்­படி, ஹமாஸ் போரா­ளிகள் காஸாவின் எல்­லையைத் தாண்டி இஸ்­ரே­லுக்குள் நுழைந்த எதிர்­பா­ராத தாக்­கு­தலில் பொரும்­பா­லான பொது­மக்கள் உட்­பட 1,140 பேர் கொல்­லப்­பட்­டனர், இத­னை­ய­டுத்து காஸாவில் போர் மூண்­டது.

அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தால் பயங்­க­ர­வாதக் குழு என விமர்­சிக்­கப்­படும் ஹமாஸை ஒழிக்கப்­போ­வ­தாக இஸ்ரேல் உறு­தி­பூண்­டுள்­ளது, மேலும் காஸா மீது தொட­ரான குண்­டு­வீச்சுத் தாக்­கு­தலைத் தொடர்ந்­தது, 23,000 இற்கும் அதி­க­மான பொது­மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தோடு ஆயி­ரக்­க­ணக்­கானோர் இடி­பா­டு­க­ளுக்குள் புதைந்­துள்­ள­தா­கவும், பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் காயமடைந்துள்ளதாகவும் நம்பப்படுவதாகவும் காஸாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலை செய்தியாக வெளியிட்ட மற்றொரு லெபனனைச் சேர்ந்த ஊடகவியலாளர் ரொய்ட்டர்ஸின் இஸாம் அப்துல்லா ஆவார். ராய்ட்டர்ஸ் விசாரணையின்படி, அவர் அக்டோபர் 13 அன்று லெபனானில் எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலைப் படமெடுக்கும் போது இஸ்ரேலிய டேங்க் குழுவினரால் கொல்லப்பட்டார்.

கடந்த 2022 மே மாதத்தில், அல்-ஜெஸீராவில் பணிபுரிந்த சிரேஷ்ட பாலஸ்தீனிய பெண் ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இஸ்ரேலிய இராணுவம் பின்னர் தனது இராணுவ வீரர்களில் ஒருவர் குறித்த பெண் ஊடகவியலாளரை சுட்டுக் கொன்றதாக ஒப்புக்கொண்டது – அவர் ஹெல்மெட் மற்றும் குண்டு துளைக்காத உடையை அணிந்திருந்ததால் அவர் ஒரு போராளி என்று தவறாகக் கருதப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.