2023 இல் இலங்கையருக்கு அதிகமாக வேலைவாய்ப்பு வழங்கிய நாடு சவூதி

0 169

2023 ஆம் ஆண்டில் 63000 இலங்­கை­யர்­க­ளுக்கு சவூதி அரே­பியா வேலை­வாய்ப்­பு­களை வழங்­கியுள்­ளது. இதற்­க­மைய 2023 இல் அதி­க­மான இலங்­கை­ய­ர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கிய நாடு­களின் பட்­டி­யலில் சவூதி அரே­பியா முத­லி­டத்தைப் பிடித்­துள்­ள­து.

வரு­டாந்தம் சுமார் 2 இலட்சம் இலங்­கை­யர்கள் வேலை­வாய்ப்­பு­க­ளுக்­காக வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­கின்­றனர். அண்­மையில் நாடு எதிர்­­கொண்ட பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக தொழில் தேடி வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­ப­வர்­களின் எண்­ணிக்­கையில் கணி­ச­மான அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

வெளி­நாடுகளில் தொழில்­பு­ரியும் இலங்­கை­யர்­கள் 2023 ஆம் ஆண்டில் மாத்­திரம் 7 முதல் 8 பில்லியன் டொலர்களுக்கு மேல் பணம் அனுப்பியுள்­ள­­தாக சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் பி.எம். அம்சா தெரி­வித்­துள்ளார். இதில் சுமார் 15 முதல் 20 வீத­மான தொகை சவூதி அரே­பி­யாவில் பணி­பு­ரியும் இலங்­கை­யர்­களால் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தூதுவர் குறிப்­பிட்­டுள்­­ளார்.

விஷன் 2030 திட்­டத்­தின் கீழ் சவூதி அரே­பி­யாவில் பாரிய அபி­வி­ருத்திப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட்டு வரு­கின்­றன. இதனால் அங்கு தொழி­லா­ளர்­க­ளுக்­கான கேள்­வியும் அதி­க­ரித்­து­ள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.