வருமான வரி கோப்பு ஆரம்பிக்கும் அனைவரும் வரி செலுத்தவேண்டியதில்லை

ஐ.தே.க. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க

0 103

(எம்.ஆர்.எம்.வசீம்)
வரி அதி­க­ரிப்பை அர­சாங்கம் விருப்­பத்­துடன் செய்­ய­வில்லை. கடந்த அர­சாங்­கத்தின் தூர­நோக்­கற்ற தீர்­மா­னங்­களே வரி அதி­க­ரிக்க கார­ண­மாகும். அத்­துடன் பெப்­ர­வரி முதலாம் திகதி முதல் வரு­மான வரி கோப்பு ஆரம்­பிக்கும் 18வய­துக்கு மேற்­பட்ட அனை­வரும் வரி செலுத்த வேண்டும் என்ற கருத்து பிழை­யா­ன­தாகும் என ஐக்­கிய தேசிய கட்­சியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆஷு மார­சிங்க தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,
ஜன­வரி முதலாம் திக­தியில் இருந்து நூற்­றுக்கு 15ஆக இருந்த வற்­வரி நூற்­றுக்கு 18ஆக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக சில பொருட்­களின் விலை மற்றும் சேவை கட்­டணம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் மக்­க­ளுக்கு பொரு­ளா­தார ரீதியில் தாக்கம் ஏற்­பட்­டி­ருப்­பதை நாங்கள் ஏற்­றுக்­கொள்­கிறோம். என்­றாலும் அர­சாங்கம் வரி அதி­க­ரிப்பை விருப்­பத்­துடன் மேற்­கொள்­ள­வில்லை. கடந்த கோத்­தா­பய ராஜ­பகஷ் அர­சாங்கம் மேற்­கொண்­டி­ருந்த தூர­நோக்­கற்ற தீர்­மா­னங்­களால் நாட்டின் வரு­மானம் குறை­வ­டைந்­தது. அதனால் நாடு பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அதன் கார­ண­மா­கவே வேறு வழி­யின்றி வரி அதி­க­ரிப்பு மேற்­கொள்ளப்பட்­டி­ருக்­கி­றது.

இதன் பிர­காரம் நாடு எதிர்­கொண்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு தீர்­வு­காணும் நோக்கில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க சில கஷ்­ட­மான தீர்­மா­னங்­களை மேற்­கொண்­டதன் கார­ண­மாக பொரு­ளா­தாரம் தற்­போது ஸ்திர­மான நிலைக்கு திரும்ப ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.இதனை 2022 ஆம் ஆண்டின் நாட்டின் மொத்த வரு­மா­னத்­தையும் 2023 நாட்டின் மொத்த வரு­மானத்­த­தையும் ஒப்­பிட்டு பார்க்­கையில் புரிந்­து­கொள்ள முடி­யு­மாக இருக்கும். 2022ஆம் ஆண்டு நாட்டின் மொத்த வரு­மானம் 2013பில்­லி­ய­னாக இருந்­தது. ஆனால் 2023 டிசம்பர் 29ஆம் திக­தி­வரை நாட்டின் மொத்த வரு­மானம் 3115 பில்­லி­ய­னாகும்.

அதே­நேரம் 2022இல் அர­சாங்­கத்தின் ஆரம்ப செலவு 4473 பில்­லி­ய­னாக இருந்­தது. இதில் செலுத்த வேண்­டிய கடன் தொகை வழங்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு இருந்தும் அர­சாங்­கத்தின் ஆரம்ப செல­வுக்கு 895 பில்­லியன் ரூபா பற்­றாக்­குறை ஏற்­பட்­டது. ஆனால் 2023இல் அர­சாங்­கத்தின் வரு­மானம் 3115 பில்­லி­ய­னாக இருந்­த­துடன் ஆரம்ப செலவு 3063 பில்­லியன் ரூபா­வாகும். அதன் பிர­காரம் ஆரம்ப மிகுதி 52 பில்­லியன் ரூபா மேல­தி­க­மாக காணப்­பட்­டது. இலங்கை வர­லாற்றில் முதல் தட­வை­யா­கவே ஆரம்ப மிகு­தியில் இந்­த­ளவு தொகை மீத­மாகி இருக்­கி­றது. ரணில் விக்­ர­ம­சிங்­கவின் திற­மை­யான நிதி முகா­மைத்­து­வமே இதற்கு கார­ண­மாகும்.

அதே­வேளை, 18 வய­துக்கு மேற்­பட்ட அனை­வரும் வரு­மான வரி கோப்பு ஒன்றை ஆரம்­பிக்க வேண்டும் என்­பது கட்­டா­ய­மாகப்பட்­டி­ருக்­கி­றது. இதன் அர்த்­தம் வரு­மான வரி கோப்பு ஆரம்­பிப்­ப­வர்கள் அனை­வரும் வரி செலுத்த வேண்டும் என்­ப­தல்ல. அது தவ­றான கருத்து. மாறாக யாரா­வது எதிர்­கா­லத்தில் வாகனம் அல்­லது காணி வாங்­கு­வ­தாக இருந்தால் அவ­ரிடம் வரு­மான வரி இலக்கம் இருக்க வேண்டும். அதற்­கா­கவே இதனை கட்டாயப்படுத்தி இருக்கிறோம். மாதத்துக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிக வருமானம் உள்ளவர்களே வரி செலுத்த வேண்டி ஏற்படுகிறது. அத்துடன் வருமான வரி கோப்பு ஆரம்பிக்காதவர்களுக்கு 50ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்படுவதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.