ஹஜ் யாத்திரை 2024: உப முகவர்களிடம் முற்பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்

திணைக்களம் எச்சரிக்கை

0 107

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ள பய­ணிகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள ஹஜ் முகவர்கள் ஊடா­கவே பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும். உப முக­வர்­க­ளென தங்­களைக் கூறிக்­கொள்­ப­வர்­க­ளுக்கு முற்­பணம் வழங்கி ஏமாற வேண்டாம் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் இஸட். ஏ.எம். பைஸல் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை இவ்­வ­ருடம் ஹஜ் முக­வர்­க­ளாக 93 பேர் நிய­மனம் பெற்­றுள்­ளார்கள். அவர்­க­ளது விப­ரங்கள் திணைக்­க­ளத்தின் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. எனவே அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள ஹஜ் முக­வர்­களே உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­க­ளாவர்.

இது­வரை இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்கு 2800 பேர் திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொண்­டுள்­ளனர். மேலும் 700 பேருக்கு வெற்­றி­ட­முள்­ளது. இலங்­கைக்கு சவூதி ஹஜ் அமைச்­சினால் 3500 கோட்டா வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே ஹஜ் யாத்­தி­ரைக்கு திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதத்­துக்கு முன்பு 25 ஆயிரம் பதிவுக் கட்­டணம் செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

திணைக்­க­ளத்தின் நிகழ்­நிலை இணை­ய­வ­ழி­யூ­டாக ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தங்­களைப் பதிவு செய்து கொள்­ளலாம் என்றார்.

இதே­வேளை இவ்­வ­ரு­டத்­திற்­கான ஹஜ் முக­வர்­க­ளு­ட­னான கூட்­ட­மொன்று நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. இக்­கூட்­டத்தில் புத்­த­சா­சன சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் இஸட். ஏ.எம்.பைஸல் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­றாஹிம் அன்சார் என்­போரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் யாத்திரை கட்டணம் வழங்கப்படும் சேவைகளின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
17 இலட்சம் ரூபா, 19 ½ இலட்சம் ரூபா, 23 ½ இலட்சம் ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.