விரைவில் அரபுக் கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டம் அமுல்படுத்­தப்­ப­டும்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரி­விக்­கி­ற­து

0 232

(றிப்தி அலி)

இஸ்­லா­மிய மார்க்க அறிஞர்­களின் பங்­க­ளிப்­புடன் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்­கான பொது­வான பாடத்­திட்­டத்­தினை விரைவில் அமுல்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­தது.

அரபு மொழியில் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள இந்த பாடத்­திட்டம் தற்­போது ஆங்­கில மொழிக்கு மொழி மாற்­றப்­பட்­டுள்­ள­துடன் புத்­த­சா­சன மற்றும் சமய விவ­கார அமைச்சின் அனு­ம­திக்­காக ஓரிரு தினங்­களில் அனுப்­பி­வைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம். பைசல் தெரி­வித்தார்.
இந்த பாடத்­திட்­டத்­திற்­க­மைய, கல்விப் பொதுத் தரா­தரம் (சாதா­ரண தரம்) பரீட்­சையில் சித்­தி­ய­டைந்­த­வர்கள் மாத்­தி­ரமே அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்கு அனு­ம­திக்­கப்­ப­டுவர் என அவர் குறிப்­பிட்டார்.

அத்­துடன், புதிய பாடத்­திட்­டத்­திற்­கி­ணங்க, பரீட்சைத் திணைக்­க­ளத்­தினால் அரபுக் கல்­லூரி மாண­வர்­க­ளுக்­கான பரீட்­சை­களை நடத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் பணிப்­பாளர் பைசல் கூறினார்.

அரபு மத்­ர­ஸாக்­களை ஒழுங்­கு­ப­டுத்த விரைவில் சட்­ட­மூ­ல­மொன்­றினை கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க அண்­மையில் இடம்­பெற்ற குருத்­த­லாவ மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தின் நூற்­றாண்டு நிகழ்வில் உரை­யாற்றும் போது அறி­வித்­தி­ருந்தார்.

இதற்கு முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து வர­வேற்பு கிடைக்கப் பெற்­றுள்­ள­துடன், அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்­கான பொதுப் பாடத்­திட்­ட­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையும் தற்­போது வலுப்­பெற்­றுள்­ளது.

இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­டா­லு­வல்கள் திணைக்­களம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் தொடர்பில் வின­விய போதே அதன் பணிப்­பாளர் பைசல் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் விடி­வெள்­ளிக்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

“முஸ்லிம் சமய பண்­பாட்­டா­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பா­ள­ரான ஏ.பீ.எம். அஷ்­ர­பி­னு­டைய காலப் பகு­தியில் அரபுக் கல்­லூ­ரிகள் மறு­சீ­ர­மைக்­கப்­பட வேண்டும் என்ற விடயம் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
இதன் முதற்­கட்­ட­மாக அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்­கான பொது­வான பாடத்­திட்­ட­மொன்­றினை அறி­மு­கப்­ப­டுத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இதற்­காக 34 பேரைக் கொண்ட குழு­வொன்று முன்னாள் பணிப்­பாளர் இப்­றாஹீம் அன்­சா­ரு­டைய காலப் பகு­தியில் நிய­மிக்­கப்­பட்­டது.

பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள், அரபுக் கல்­லூ­ரி­களின் அதி­பர்கள், அரபுக் கல்­லூ­ரி­களின் ஒன்­றி­யங்கள், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, சூரா சபை, ஷரீஆ கவுன்ஸில் மற்றும் சூபி கவுன்ஸில் ஆகி­ய­வற்றின் பிர­தி­நி­திகள் இந்த குழுவில் உறுப்­பி­னர்­க­ளாக உள்­வாங்­கப்­பட்­டனர்.
அரபுக் கல்­லூ­ரி­களின் பதிவு, பாடத்­திட்டம், நிர்­வாகம் மற்றும் கண்­கா­ணிப்பு ஆகிய நான்கு தலைப்­புக்­களில் உப குழுக்­களும் இந்த குழு­வி­லி­ருந்து உரு­வாக்­கப்­பட்­டன.

இதற்கு மேல­தி­க­மாக கொழும்பு பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி என்.கபூர்டீன், திறந்த பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஜே..டி. கரீம்தீன், மல்­வானை பின்பாஸ் மகளிர் அரபுக் கல்­லூ­ரியின் அதிபர் கலா­நிதி எம்.எச்.எம். அஸ்ஹர், பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ­டத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஏ.ஜே. ஷிஹான் உள்­ளிட்ட ஆறு பேரைக் கொண்ட தொழி­நுட்பக் குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டது.
கடந்த பல மாதங்­க­ளாக இக்­குழு பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்­கான பொது­வான பாடத்­திட்­ட­மொன்­றினை தயா­ரித்­துள்­ளது.

இந்த பாடத்­திட்­டத்­திற்­க­மைய, கல்விப் பொதுத் தரா­தரம் (சாதா­ரண தரம்) பரீட்­சையில் சித்­தி­ய­டைந்­த­வர்கள் மாத்­தி­ரமே அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்கு அனு­ம­திக்­கப்­ப­டுவர்.

எனினும், தரம் 10 இல் அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்கு இணைக்­கப்­ப­டு­ப­வர்கள் முதல் இரண்டு வரு­டங்­களில் பாட­சாலைக் கல்­வி­யினை கற்று கல்விப் பொதுத் தரா­தரம் (சாதா­ரண தரம்) பரீட்­சையில் சித்­தி­ய­டைய வேண்டும்.
புதிய பாடத்­திட்­டத்­திற்­க­மைய அரபுக் கல்­லூ­ரி­களின் கல்வி ஆண்­டுகள் ஆறு வரு­டங்­க­ளாக வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளன. இதில் முதல் இரண்டு வரு­டங்­களில் அரபு மொழி மாத்­திரம் போதிக்­கப்­படும்.

இதனை மாத்­திரம் நிறைவு செய்­து­விட்டு அரபுக் கல்­லூ­ரி­க­ளி­லி­ருந்து வெளி­யே­று­ப­வர்­க­ளுக்கு விசேட சான்­றிதழ் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இச்­சான்­றி­தழை வைத்து மத்­திய கிழக்கு நாடு­களில் சிறந்த தொழில் வாய்ப்­பினை பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

அதே போன்று, சான்­றிதழ், மேல­திக சான்­றிதழ், டிப்­ளோமா, உயர் டிப்­ளோமா என நான்கு மட்டங்­களை உள்­ள­டக்­கிய வகையில் அரபுக் கல்­லூ­ரி­களின் கல்­வி­யாண்­டுகள் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளன.

இதற்­காக கற்­பிக்க வேண்­டிய புத்­த­கங்­க­ளையும் இந்தக் குழு தெரிவு செய்­துள்­ளது.

அதே­போன்று, அரபுக் கல்­லூ­ரி­களில் கற்­பிக்கும் விரி­வு­ரை­யா­ளர்­களின் கல்வித் தரத்­தினை மேம்­ப­டுத்­தவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அத்­துடன், அரபுக் கல்­லூரி மாண­வர்­க­ளுக்­கான பரீட்­சை­களை பரீட்சைத் திணைக்­க­ளத்­தினால் நடத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் தற்­போது திணைக்­களம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

இவ்­வாறு பல்­வேறு சிறப்­பான விட­யங்­களைக் கொண்­டுள்ள இந்த பாடத்­திட்டம் அரபுக் கல்­லூரி மாண­வர்­களின் நலன்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

அமைச்சின் அனு­மதி கிடைத்­த­வுடன், அரபுக் கல்­லூ­ரி­களின் அதி­பர்­களை அழைத்து இது தொடர்பில் விரி­வாக கலந்­து­ரை­யாட எண்­ணி­யுள்ளேன். எவ்­வா­றா­யினும், இந்த பாடத்­திட்­டத்­தினை வினைத்­தி­ற­னாக அமுல்­ப­டுத்த அனைத்து தரப்­பி­ன­ரு­டைய ஒத்­து­ழைப்பு மிக அவ­சி­ய­மாகும்” என்றார்.
நாட­ளா­விய ரீதியில் தற்­போது 317 பதி­வு­செய்­யப்­பட்ட அரபுக் கல்­லூ­ரிகள் செயற்­ப­டு­கின்­றன. இதற்கு மேல­தி­க­மாக சுமார் 120 அரபுக் கல்­லூ­ரிகள் பதி­விற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்களத்தில் விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.