எஞ்சியுள்ள வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? ஜெனீவாவில் இணங்கியதை நிறைவேற்றவும்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டு

0 120

வடக்­கி­லி­ருந்து புலம்­பெ­யர நேரிட்ட முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் சவால்­க­ளுக்கு தீர்­வு­காண முறை­யான வேலைத்­திட்­டத்தை அர­சாங்கம் ஆரம்­பிக்க வேண்­டு­மென அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

“வடக்­கி­லி­ருந்து புலம்­பெ­யரச் செய்­யப்­பட்ட முஸ்­லிம்­களின் சவால்கள் இன்னும் தீர்ந்­த­பா­டில்லை. 33 வரு­டங்கள் கடந்தும் முறை­யான வேலைத்­திட்­டங்கள் வகுக்­கப்­ப­டவும் இல்லை. மீளக்­கு­டி­யேறும் இம்­மக்­களின் முயற்­சி­களை அங்­குள்ள அரச அதி­கா­ரி­களும் ஒரு சில அர­சி­யல்­வா­தி­களும் தடுத்து நிறுத்­தவே முயற்­சிக்­கின்­றனர்.

மன்னார் மாவட்­டத்­தி­லுள்ள முஸ்­லிம்­களின் வாக்­காளர் இடாப்­பி­லி­ருந்து அவர்­களின் பெயர்­களை நீக்கும் முயற்­சிகள் இடம்­பெ­று­கின்­றன. அரச அதி­கா­ரி­களின் இத்­த­கைய செயல்கள் அப்­பட்­ட­மான இனச்­சுத்­தி­க­ரிப்­பாகும். 1990 இல், வடக்­கி­லி­ருந்து புலிகள் இதே பாணி­யில்தான் முஸ்­லிம்­களை வெளி­யேற்­றினர். இன்னும், இதே சிந்­த­னையில் அரச அதி­கா­ரிகள் செயற்­ப­டு­வது வெட்­கக்­கே­டா­னது.

நான் அமைச்­ச­ராக இருந்­த­வேளை, முப்­ப­தா­யிரம் தமி­ழர்­களை மீளக்­கு­டி­யேற்­றினேன். ஆனால், முஸ்­லிம்­களை குடி­யேற்ற வடக்­கி­லுள்ள அதி­கா­ரிகள் விரும்­ப­வில்லை. எனினும், அரபு நாடு­களின் உத­வி­களைப் பெற்று பலத்த சவால்­க­ளுக்கு மத்­தி­யி­லேதான், ஏழா­யிரம் வீடு­களை நிர்­மா­ணித்து முஸ்­லிம்கள் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டனர்.

முல்­லைத்­தீவில் முஸ்­லிம்­களை குடி­யேற்ற காணி­களை துப்­பு­ரவு செய்­த­போது, எங்­க­ளது முயற்­சி­க­ளுக்கு குறுக்­காக நின்ற சிலர், எங்­களை கொன்­று­விட்­டுத்தான் முஸ்­லிம்­களை குடி­யேற்ற வேண்டும் என்­றனர். எங்­க­ளிடம் அதி­காரம் இல்­லாத நிலையில், முஸ்­லிம்­களின் காணி­களை இலஞ்சம் பெற்று வேறு பல­ருக்கு விற்கும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெ­று­கின்­றன. எனவே, எஞ்­சி­யுள்ள வடக்கு முஸ்­லிம்­களை மீளக்­கு­டி­யேற்ற முறை­யான வேலைத்­திட்­டத்தை கோரு­கின்றேன். இவ்­வா­றான வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­போ­ருக்கே எதிர்­வரும் தேர்­தலில் எமது ஆதரவு.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு ஜெனீவாவில் வழங்கப்பட்ட உறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவர்கள் மீள்குடியேறும் வரை எதிர்கொள்ளும் தொழில்ரீதியான சவால்களை தீர்ப்பதற்கும் நடவடிக்ககைள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.