பலஸ்தீனத்தைப் போன்று ஏகாதிபத்தியங்களின் பிடியில் உலகில் பல நாடுகள் சிக்கியுள்ளன

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

0 195

பலஸ்­தீ­னத்தைப் போன்று உலகில் பல நாடுகள், ஏகா­தி­பத்­தி­யங்­களின் பிடி­க­ளுக்குள் சிக்­கி­யுள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும்,பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் விசனம் தெரி­வித்தார்.

“போரை நிறுத்தி சுதந்­திர பலஸ்­தீன அரசை அமைப்போம் ” என்ற தொனிப்­பொ­ருளில் இலங்கை கம்­யூனிஸ்ட் கட்சி ஏற்­பாடு செய்­தி­ருந்த மக்கள் பேரணி கொழும்பு புதிய நகர மண்­ட­பத்தில் செவ்­வாய்க்­கி­ழமை (14) மாலை நடை­பெற்­ற­போது, அதில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.
மு.கா.தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

இன்று காஸாவில் நாம் கண்­டு­கொண்­டி­ருப்­பது நவீன கால­னித்­து­வத்தின் அடை­யா­ள­மாக ஆகி­யுள்­ளது. இந்த நவீன உலகில் பலஸ்­தீ­னத்தைப் போன்று பல நாடுகள், ஏகா­தி­பத்­தி­யங்­களின் பிடி­க­ளுக்குள் சிக்­கி­யுள்­ளன.

மீண்டும், மீண்டும் ஏகா­தி­பத்­தி­யத்தின் அடை­யா­ள­மா­கவும், அடிச்­சு­வ­டா­கவும் மாறி­யுள்ள பயங்­க­ர­மான இனப்­ப­டு­கொ­லை­களின் கோரத்தை கடந்த பல நாட்­க­ளாக காஸா தீரத்­திலும், பலஸ்­தீ­னத்தின் இதர பிர­தே­சங்­க­ளிலும் தொலை­காட்­சியில் நாம் பார்க்கும் இறந்த ஆண்­க­ளி­னதும், பெண்­க­ளிதும்,சிறு­வர்­க­ளி­னதும் குழந்­தை­களும் சிதைந்து ,சித­றிய உடல்கள் நம் அனை­வ­ரி­னதும் மன­சாட்­சியில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.
இவை போன்ற சம்­ப­வங்கள் தடுக்­கப்­பட வேண்டும் என்ற அடிப்­ப­டையில், 2005ம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. ஆங்­கி­லத்தில் அதனை Responsibility to protect (R2P)என்று சொல்­வார்கள்.ருவாண்டா, பொஸ்­னி­யாவில் போன்ற நாடு­களில் நடந்த அதிர்ச்­சி­யூட்­டிய பேர­வ­லங்­க­ளுக்குப் பிறகு உரு­வான இந்தக் கருத்­துகோள் (Concept) ஒட்­டு­மொத்த சர்­வ­தே­சத்தின் கவ­னத்­தையும் ஈர்த்­தது.ஓர் அர­சாங்கம் தனது கட்­டுப்­பாட்டில் உள்ள குறிப்­பிட்ட மக்கள் தொகை­யினர் மீது பெரும் குற்றம் இழைத்தால் அதற்கு எதி­ராக எந்த நாடும் போர் பிர­க­டனம் செய்­யலாம் ;படை­யெ­டுக்­கலாம் என்ற கருத்­து­ரு­வாக்கம் அதற்கு வித்­தி­யா­ச­மான முறையில் சுய­ந­லத்­திற்­காகப் பிழை­யாகப் பாவிக்­கப்­ப­டு­கி­றது.சக்தி வாய்ந்த அமெ­ரிக்கா பிரிட்டன், பிரான்ஸ் போன்­றவை, குறிப்­பாக ஏகா­தி­பத்­தி­யங்கள், இதனைப் பாவித்து, இஸ்­ரே­லுக்கு துணிச்­சலைக் கொடுத்து அதைப் பாது­காக்க முற்­ப­டு­கி­றார்கள்.

அவர்கள் பல நாடு­களின் தலை­வர்­களை கொன்­று­விட்­டார்கள். லிபி­யாவின் கடா­பியும், ஈராக்கில் சதாம் ஹுசைனும் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள்.சிரி­யாவில் அசாத்தை கொல்ல முயற்­சித்­தார்கள். அதனால் அவர்கள் தங்கள் சொந்த பொரு­ளா­தா­ரத்தை வளர்க்­கவும், மத்­திய கிழக்கில் இஸ்­ரேலைக் காப்­பாற்­றவும் இவற்­றை­யெல்லாம் செய்­கி­றார்கள். அதனால் இந்தக் கருத்­து­ரு­வாக்கம் முற்­றிலும் பய­னற்­றுப்­போ­னது. பலஸ்தீன் விட­யத்தில் சுற்­றிலும் உள்ள முஸ்லிம் நாடுகள் அதை செய்ய முன்­வ­ரு­வ­தில்லை. சக்தி வாய்ந்த எமது அண்டை நாடும் கூட சமா­தா­னத்­துக்­காக கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணை­யையும் தவிர்த்து விட்­டது கவ­லைக்­கு­ரி­யது.இதுதான் நிலைமை.
ஆனால், இவ்­வா­றி­ருக்க நம்மைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் இது­போன்ற கொடூர கொலை­யா­ளி­க­ளுக்கும், அவர்கள் புரிந்து வரும் போர்க்குற்றங்களுக்கும் எதிராக அனைத்து கட்சி தலைவர்களையும் ஒன்று திரட்டிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி செலுத்துகின்றேன்.

சுதந்திரமான பலஸ்தீன அரசாங்கத்தை உருவாக்கி, இந்த அவலத்தை முடிவுக்குக் கொண்டு வருவோமாக.- -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.