நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட விவகாரம் : ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

0 105

(ஏ.ஆர்.­ஏ.பரீல்)
தேசிய நல்­லி­ணக்கத்­திற்கு குந்­தகம் ஏற்­ப­டுத்தும் வகையில் கருத்து வெளி­யிட்ட சம்­ப­வம் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக கொழும்பு மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்கு விசா­ர­ணையை நீதிவான் ஏ.பட­பெந்தி எதிர்­வரும் 24 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தார்.

இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது பிர­­தி­வாதி ஞானசார தேரர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருக்­க­வில்லை. அவர் சுக­யீனம் கார­ண­மாக மன்றில் ஆஜ­ரா­க­வில்லை என அவ­ரது சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி சஞ்­சய ஆரி­ய­தாச மன்றுக்குத் தெரி­வித்­ததை அடுத்தே வழக்கு எதிர்­வரும் 24 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­து.

இவ்­வ­ழக்கின் சாட்­சி­யா­ள­ரான அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் பதி­யுதீன் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். அவரையும் குறிப்­­பிட்ட தினத்தில் சாட்­சி­ய­ம­ளிக்க நீதி­மன்றில் ஆஜ­ரா­கும்­படி நீதிவான் உத்­த­ர­விட்­டார்.

2016.03.30 ஆம் திகதி அல்­லது அதனை அண்­மித்த திக­தியில் நடை­பெற்ற ஊடக சந்­திப்­பொன்றில் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் இனங்­க­ளு­க்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­துக்கு குந்­தகம் ஏற்­படும் வகையில் கருத்து வெளி­யிட்­ட­தாக குற்றம் சுமத்தி சட்டமாஅ­தி­ப­ரினால் இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­ட­து.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.