ஹஜ் யாத்திரை 2024: இலங்கைக்கு 3500 கோட்டா

0 161

(ஏ.ஆர்.ஏ..பரீல்)
2024 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் யாத்­தி­ரைக்கு இலங்­கைக்கு 3500 கோட்டா வழங்­கு­வ­தற்கு சவூதி அரே­பி­யாவின் ஹஜ் அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது.
இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான ஹஜ் விசாக்கள் எதிர்­வரும் நோன்பு மாதத்தில் வழங்­கப்­ப­டு­மெ­னவும் சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை 2024 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­றாஹிம் அன்சார் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், சவூதி அரே­பியா இலங்­கைக்கு 3500 ஹஜ் கோட்டா வழங்­க­வுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டில் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்கு இது­வரை 1300 பேரே விண்­ணப்­பித்­துள்­ளனர்.

கடந்த காலங்­களில் ஹஜ் யாத்­தி­ரைக்கு விண்­ணப்­பித்­த­வர்­களின் விண்­ணப்­பங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ரத்து செய்து செலுத்­தப்­பட்ட பதிவுக் கட்­ட­ணங்­களை விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு திருப்பிச் செலுத்­தி­யுள்­ளது.

2024 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் முக­வர்கள் நிய­ம­னத்­துக்­கான நேர்­மு­கப்­ப­ரீட்­சைகள் தற்­போது நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன. அடுத்த வருட ஹஜ் யாத்­தி­ரையில் ஹஜ் முக­வர்கள் பலர் ஒன்­றி­ணைந்து யாத்­தி­ரி­கர்­களை அழைத்துச் செல்­வது நிறுத்­தப்­ப­ட­வுள்­ளது. 50 யாத்­தி­ரி­கர்­களை கொண்ட முக­வர்­க­ளுக்கே அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­படும்.

ஹஜ் கட்­டணம் தொடர்பில் ஹஜ் முக­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி நியா­ய­மான கட்­ட­ண­மொன்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­னாலும், அரச ஹஜ் குழு­வி­னாலும் தீர்­மா­னிக்­கப்­படும்.

அடுத்த வருடம் ஹஜ் கட­மை­யினை நிறைவேற்றத் தீர்மானித்துள்ளவர்கள் தாமதியாது பதிவுக்கட்டணம் 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி திணைக்களத்தில் பதிவுசெய்து கொள்ளுமாறு கோரப்படுகின்றனர் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.