இஸ்ரேல் தாக்­கு­தல்­களை உடன் நிறுத்த வேண்­டும்

ரியாதில் ஒன்றுகூடிய அரபு – இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை

0 113

காஸாவில் இஸ்ரேல் முன்­னெ­டுத்­துள்ள இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை உடன் நிறுத்­து­மாறு சவூதி அரே­பி­யாவில் ஒன்­று­கூ­டிய இஸ்­லா­மிய நாடுகள் கூட்­டா­க வலி­யு­றுத்­தி­யுள்­ளன. அத்­துடன் பலஸ்தீன் மீது தற்­காப்­புக்­காகவே தாம் தாக்­குதல் நடத்­து­கிறோம் என இஸ்ரேல் கூறும் நியாயத்தை ஏற்றுக் கொள்ள முடி­யாது எனவும் இந்­நா­டுகள் தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ள­ன.

சவூ­தியின் ரியாத் நகரில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற விசேட அரபு – இஸ்­லா­மிய உச்சி மாநாட்­டி­லேயே இத்­தீர்­மா­னங்கள் நிறை­வேற்றப்­பட்­டுள்­ளன. பலஸ்­தீனில் இஸ்ரேல் நிகழ்த்­து­கின்ற மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ரா­ன குற்­றங்கள் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் விசா­ரணை நடாத்த வேண்டும் என்றும் இந்­நா­டுகள் கோரி­யுள்­ள­ன.
யுத்த நிறுத்­தத்­தை அமுல்­­ப­டுத்­து­மாறு இஸ்­ரே­லுக்கும் அமெ­ரிக்­காவுக்கும் அழுத்தம் வழங்கும் வகையில் சவூ­தி அரே­பிய இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்­மானின் ஏற்­பாட்டில் அர­பு மற்றும் இஸ்­லா­மிய நாடு­களின் தலை­வர்கள் பங்­கு­பற்­றிய விசேட மாநாடு இடம்­பெற்­றது. இதில் பலஸ்தீன்,துருக்கி, கட்டார், ஈரான், எகிப்து, சிரியா, ஜோர்தான் உட்­பட பல இஸ்­லா­மிய மற்றும் அரபு நாடு­களின் தலை­வர்கள் கலந்து கொண்­ட­னர்.

“பலஸ்தீனத்தில் உள்ள எமது சகோதரர்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான போரை கண்டித்து, திட்டவட்டமாக நிராகரிக்­கி­றோம்” ­என இங்கு உரை­யாற்­றிய சவூதி இள­வ­ரசர் குறிப்­பிட்டார். ‘‘நாங்கள் ஒரு மனிதாபிமான பேரழிவை எதிர்கொள்கிறோம், சர்வதேச சட்டங்களை இஸ்ரேல் அப்பட்டமாக மீறி வரு­வ­தற்­கு முற்றுப்புள்ளி வைக்க பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச சமூகம் தவறிவிட்­ட­ன” என்றும் அவர் குறிப்­பிட்­டார்.

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இங்கு உரை­யாற்­று­கை­யில் ‘‘பலஸ்தீனியர்கள் “இனப்படுகொலைப் போரை” எதிர்கொள்வதாகவும், இஸ்ரேலின் “ஆக்கிரமிப்பை” நிறுத்துமாறு அமெரிக்காவிடம் அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேலுக்கு எதிராக போரிடும் ஹமாஸைப் பாராட்டிய ஈரான் அதி­பர் இப்­ராஹிம் ரைசி, இஸ்ரேல் மீது எரி­பொ­­­ருள் மற்றும் பொருட்கள் ஏற்­று­மதி தடைகளை விதிக்க இஸ்லாமிய நாடுகள் முன்­வர வேண்டும் என்­றார்.
“இஸ்ரேலை எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை, இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் கரங்­க­ளை நாங்கள் முத்தமிடுகிறோம்” என்று ரைசி தனது உரையில் கூறினார். இஸ்ரேலுக்கு நிதி மற்றும் இராணுவ ஆதரவை வழங்குவ­தற்­காக அமெரிக்காவையும் அவர் கண்­டித்­தார்.

“சியோனிச ஆட்சியின் போர் இயந்திரம் அமெரிக்கர்களுக்கு சொந்­த­மா­ன­து­’’ என்று அவர் கூறினார், “சந்தேகத்திற்கு இடமின்றி, அமெரிக்க அரசாங்கம் இந்த குற்றத்திற்கு தலைமை தாங்­கு­கி­றது என்றும் அவர் சாடி­னார்.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனியர்களுக்கும் இடையே நிலவும் மோதலுக்கு நிரந்தர தீர்வு காண சர்வதேச அமைதி மாநாட்டை கூட்ட வேண்டும் என துருக்கி அதிபர் அர்­து­கான் அழைப்பு விடுத்தார்.

“காசாவில் எங்களுக்கு தேவை இரண்டு மணி நேர இடைநிறுத்தம் அல்ல, மாறாக ஒரு நிரந்தர போர் நிறுத்தமே’ என அவர் வலி­யு­றுத்­தி­னார்.
பல ஹமாஸ் தலைவர்கள் தங்கியுள்ள தனது நாடு, இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க மத்தியஸ்தம் செய்ய முயல்வதாகவும், விரைவில் மனிதாபிமான போர்நிறுத்தம் எட்டப்படும் என்று நம்புவதாகவும் கத்தாரின் அமீர் ஷேக் தமீம் கூறினார். “சர்வதேச சமூகம் இஸ்ரேலை சர்வதேச சட்டங்களுக்கு அப்பாற்பட்டது போல் எவ்வளவு காலத்திற்கு நடத்தும்” என்றும் அவர் கேள்வி எழுப்­பி­னார்.

காசா முற்றுகையை நிறுத்துமாறும் மனிதாபிமான உதவிகளை அனு­ம­திக்­கு­மா­றும் இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் என­வும் உச்சிமாநாட்டில் ஏக­ம­ன­தாக வலி­யு­­றுத்­தப்­பட்­ட­து.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அரபு லீக்கின் இரண்டு அவ­ச­ர உச்சி மாநாடுகளை நடாத்த சவூதி அரேபியா திட்­ட­மிட்­டி­ருந்­தது. எனி­னும் “அசாதாரண” காசா நிலைமை காரணமாக ஒரு மாநாடே நடாத்­தப்­பட்­ட­தாக சவூதி வெளி­­வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.