வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்­க இரு முக்­கிய தீர்ப்­பு­கள்

0 255

உயர் நீதி­மன்றம் நேற்று முன்­தினம் இரண்டு முக்­கிய தீர்ப்­பு­களை வழங்­கி­யுள்­ளமை அனை­வ­ரதும் கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளது. நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு அதி­கா­ரத்தில் இருந்த ராஜ­பக்ச சகோத­ரர்­களும் அவர்­களின் கீழ் பணி­பு­ரிந்த அதி­கா­ரி­க­ளும்தான் காரணம் என உயர்­நீ­­தி­­மன்றம் தனது தீர்ப்பில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது. அதே­போன்­றுதான் சமூக வலைத்­த­ளத்தில் பதி­­வொன்றை இட்­ட­­மைக்­காக ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சமூக செயற்­பாட்­டாளர் ரம்ஸி ராஸிக் தொடர்ந்த அடிப்­ப­டை உரிமை மீறல் வழக்கில் வழங்­கப்பட்ட தீர்ப்பும் மிக முக்­கி­ய­மா­ன­தாகும். ரம்­ஸி ராஸிக்கை கைது செய்­­ததன் மூலம் அவ­ரது அடிப்­ப­டை உரிமைகள் மீறுப்­பட்­டு­ள்­ள­தாக கண்­ட­றிந்­துள்ள நீதி­­மன்­றம் அவ­ருக்கு நஷ்­டயீடு வழங்­கு­மாறு பொலி­சா­ருக்கும் அர­சாங்­கத்­திற்கும் உத்­த­ர­விட்­டுள்­ளது. இவ்­விரு தீர்ப்­பு­களும் நாட்டில் சம­கால சூழலில் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வை­யாக நோக்­கப்­ப­டு­கின்­ற­ன.

உண்­மையில் கடந்த பல வரு­டங்­க­ளாக ஆட்­சி­யி­லி­ருந்த ராஜ­பக்ச குடும்பத்­தினர் நாடு பல்­வேறு வழி­க­ளிலும் பின்­ன­டைவைச் சந்­திப்­ப­தற்கு கார­ண­மாக இருந்­தனர் என்­பது வெளிப்­ப­டை­யா­ன­தாகும். அபி­வி­ருத்தி என்ற போர்­வை­யில் தேவைக்­க­தி­க­மா­க வெளி­நா­டு­க­ளி­டம் கடன் பெற்­று அதில் கணி­ச­மான தொகையில் ஊழல் மோச­டி­களைச் செய்து நாட்டை வங்­கு­ரோத்து நிலை­மைக்குத் தள்­ளி­ய­வர்கள் இவர்­களே என்பது உல­க­றிந்த உண்மை. இந்­நி­லை­யில்தான் பொறு­மை­யி­ழந்த மக்கள் வீதிக்கு இறங்கி போராடி இவர்­களை வீட்­டுக்கு அனுப்­பினர். எனினும் இவர்கள் தமது பத­வி­க­ளை மாத்­திரம் இழந்­தார்­களே தவிர நாட்டை இந்­த­ளவு தூரம் சீர­ழித்­த­மைக்கு பொறுப்புச் சொல்லும் எந்­த­வி­த­மான கடப்­பாட்­டையும் கொண்­டி­ருக்­க­வில்லை. இந்­நி­லை­யில்தான் சிவில் செயற்­பாட்­டா­ளர்­களும் சில நிறு­வ­­னங்­களும் தாக்­கல் செய்த அ­டிப்­படை உரி­மை மீறல் மனுக்­களை விசா­ர­ணைக்கு எடுத்துக் கொண்ட போதே பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு வித்­திட்­டதன் மூலம் நாட்டு மக்­க­ளின் அடிப்­படை உரி­மை­களை மீறி­யுள்­ள­தாக உயர்­நீ­தி­­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. இருப்­பினும் இத்­தீர்ப்­பில் பெயர்­கு­றிப்­பிட்ட ராஜ­பக்­சாக்­களுக்­கோ அல்­லது அவர்­க­­ளோடு இணைந்து தவ­றான கொள்­கை­களை இயற்­றிய உய­ர­தி­கா­ரி­களுக்கோ எந்­த­வித தண்­ட­­னை­களும் விதிக்­கப்­ப­ட­வில்­லை. அதே­போன்று நஷ்­ட­யீ­டு­களைச் செலுத்­து­மாறும் பணிக்­க­வில்லை. மாறாக மனு­தா­ரர்­க­ளுக்கு வழக்­குத் தொடர்ந்­ததால் ஏற்­பட்ட செல­வாக ஒன்­றரை இலட்சம் ரூபாவை வழக்கு கட்­ட­ண­மா­க செலுத்­துமாறே உத்­த­ர­விட்­டுள்­ளது.

தீர்ப்பு முக்­கி­ய­த்­து­வம்­ வாய்ந்­த­து என்ற போதிலும் எதிர்­பார்க்­கப்­பட்ட தண்­ட­னை­களை அல்­லது உத்­த­ர­­வு­களை உயர்­நீ­திமன்றம் வழங்­காமை ஏமாற்­ற­ம­ளிப்­ப­தாக மனு­தாரர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர். அந்த வகையில் இத் தீர்ப்பை சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி இதில் பெயர் குறிப்­பி­டப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக மேல­திக சட்ட நட­வ­டிக்­கை­ககளை எடுப்­பது குறித்து சம்­பந்­தப்­பட்ட தரப்­புகள் ஆராய வேண்­டி­யது அவ­சியம் என வலி­யு­­றுத்த விரும்­பு­கி­றோம்.

அதே­போன்­றுதான் ரம்ஸி ராஸிக் விவ­கா­ரத்தில் ஐசி­சி­பிஆர் சட்­டத்தை தவ­றா­கப் பயன்­ப­டுத்தும் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு நீதி­மன்றம் சாட்­­டை­­யடி வழங்­கி­யுள்­ளது என்றே கூற வேண்டும். கடந்த காலங்­களில் சிங்­கள சிறு­கதை எழுத்­தாளர் ஷக்­திக சத்­­கு­மார மஹி­யங்­க­­னையில் தர்மச்­சக்­கர ஆடை அணிந்­த­தாக பொய்க் குற்­றச்­சாட்டின் கீழ கைது செய்­யப்­பட்ட மஸா­ஹினா எனும் முஸ்லிம் பெண் உட்­­பட பல­ருக்கு எதி­ராக இந்த சட்­டத்தின் கீழ் பொலிசார் வழக்குத் தொட­ர்ந்­தி­ருந்­த­னர். இச் சட்டம் பற்­றிய சரி­யான புரி­த­லின்றி கடந்த பல வரு­டங்­க­ளாக பொலிசார் செயற்­பட்டு வரு­­கின்­றனர். அந்த வகையில் ரம்ஸி ராசிக்கை கைது செய்த பொலிஸ் அதி­கா­ரி­களை தமது சொந்தப் பணத்­தி­லி­ருந்து நஷ்­ட­யீடு செலுத்­து­மாறும் அதற்கு மேலதி­க­மாக அர­சாங்கம் 1 மில்­லி­யன் ரூபா நஷ்­ட­யீடு செலுத்த வேண்டும் என்­றும் நீதிமன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. மேலும் இத் தீர்ப்பின் பிர­தியை பொலிஸ் மா அதிபர் ஊடாக சகல பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் நீதி­­மன்றம் பணித்­துள்­ளது. அந்த வகையில் இத் தீர்ப்­பா­ன­து எதிர்­கா­லத்தில் இச்­ச­ட்­டத்தை பொலிசார் துஷ்­பி­ர­யோ­கம் செய்­யா­தி­ருக்க பெரிதும் துணை­பு­ரியும் என்­பதில் சந்­தே­க­மில்லை. இது விட­யத்தில் தனது அடிப்­­படை உரி­மைக்­காக போரா­டிய சகோ­தரர் ரம்ஸி ராஸிக் மற்றும் அவ­ருக்கு தேவை­யான சட்ட உத­வி­களை வழங்­கிய அனை­வரும் பாராட்­டுக்­கு­ரி­ய­ர்கள். மேற்­படி இரு தீர்ப்­புகளும் நாட்­டின் நீதித்­துறை மீதான நமது நம்­பிக்­கையை இன்­னமும் உயிர்ப்­புடன் வைத்­தி­ருக்­கின்­றன என்­ப­தற்கு நல்ல உதா­ர­ண­மாகும்.

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.