பலஸ்­தீன விவ­கா­ரம் : பின்­பு­லமும் எமது கட­மை­களும்

0 822

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல்

பலஸ்­தீன விவ­காரம் இவ்­வ­ளவு தூரம் 75 வரு­டங்­க­ளாக இழுத்­த­டிக்­கப்­ப­டு­வ­தற்கு பல கார­ணங்கள் உள்­ளன.

வல்­ல­ர­சுகள் எனும் பெயர் தாங்­கிகள் மனி­தா­பி­மான எல்­லை­களை முற்­றிலும் கவ­னிக்­காமல் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை ஸ்தாபிக்க முழு­மூச்­சாக ஈடு­பட்­ட­துடன் இந்த நிமிடம் வரை அதற்கு சார்­பாக குர­லெ­ழுப்பி சகல வித­மான ஒத்­தா­சை­க­ளையும் செய்து வரு­கி­றார்கள். பல கார­ணங்­களால் அது நடக்­கி­றது.

1. ஆயுதச் சந்தை
மேற்­கு­லகில் பாரிய ஆயுதத் தொழிற்­சா­லைகள் உள்­ளன. அவற்றின் ஆயுதச் சந்­தையை தக்க வைக்க வேண்டும் என்­பதில் வல்­ல­ர­சுகள் மிகக் கவ­ன­மாக இருக்­கின்­றன. ஏனெனில் இந்த வல்­ல­ர­சு­க­ளுக்கு மனித இனத்தின் மீதான அக்­க­றையை விடவும் இந்த ஆயு­தங்­களை விற்­பது முக்­கி­ய­மாகும். அரபு பிராந்­தி­யத்தில் இஸ்ரேல் இருந்தால் தான் தொடர்ந்தும் பதட்ட நிலையும் யுத்த மேகங்­களும் இருக்கும். அப்­போ­துதான் மேற்­கு­லக ஆயுத தொழிற்­சா­லை­களில் உற்­பத்தி செய்­யப்­படும் ஆயு­தங்­க­ளுக்­கான சந்­தைகள் தொடர்ந்தும் இருந்து வரும். யுத்­தங்கள் நின்று போனால் ஆயுத தொழிற்­சா­லை­களை மூட வேண்டி வரும். அவற்றில் வேலை செய்யும் பல லட்சம் பேருக்கு தொழில் இழக்­கப்­படும். அந்த தொழிற்­சா­லை­க­ளது சொந்­தக்­கா­ரர்கள் மேற்­கத்­திய அர­சு­களை ஸ்தாபிப்­ப­தற்கு உதவி செய்­ய­மாட்­டார்கள்.
சுருங்கச் சொன்னால் வல்­ல­ர­சு­க­ளது சட­வாத, பொருள் முதல்­வாத பசிக்­காக முஸ்லிம், கிறிஸ்­தவ, யூத சமூ­கங்கள் மத்­திய கிழக்கில் பலிக்­க­டாக்­க­ளாக ஆக்­கப்­பட்­டுள்­ளன.

2. இஸ்­லா­மிய பீதி
இஸ்லாம் பற்­றிய பீதி தொடர்ந்து இருந்து வந்தால் தான் இஸ்லாம் ஒரு ஜீவ சக்­தி­யாக மாறு­வதை தடுக்க முடியும். இஸ்ரேல் தொடர்ந்தும் அங்கு இருந்து வரு­வது இனங்­க­ளுக்­கி­டை­யி­லான பதட்­டத்தை தொடர்ந்து பேணு­வ­தற்கு உதவும். ‘எரி­கிற வீட்டில் பிடுங்­கி­யது இலாபம்’ என்ற வகையில் யூதர்கள், முஸ்­லிம்கள், கிறிஸ்­த­வர்கள் ஆகியோர் மோதிக்­கொள்ளும் கால­மெல்லாம் இஸ்லாம் பற்­றிய பீதி நிலைத்து நிற்கும். அந்த பீதியை தொடர்ந்தும் தக்க வைப்­பது உலக வல்­ல­ர­சு­க­ளுக்கு தேவை­யான காரி­ய­மாகும்.

3. சில அரபு நாடு­க­ளது இஸ்ரேல் சார்பு நிலைப்­பாடு
பெரும்­பா­லான முஸ்­லிம்­களும் அரபு இஸ்­லா­மிய நாடு­களும் பலஸ்­தீன விவ­கா­ரத்­திற்கு தமது மான­சீக ரீதி­யான ஆத­ரவை வழங்­கி­னாலும் விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய சில அரபு நாடு­களும் அவற்றின் தலை­வர்­களும் பாலஸ்­தீன மக்­க­ளது உரி­மை­களை மதிப்­ப­தாக இல்லை. சில­போது இஸ்­ரே­லுக்கு நேர­டி­யான தமது ஆத­ரவை வழங்­கு­வ­தாக குறிப்­பிட்­டி­ருக்­கி­றார்கள். பலர் பயங்­க­ர­மாக அமைதி காக்­கி­றார்கள்.

இதுவும் அதி­ச­ய­மல்ல. இந்த வல்­ல­ரசு நாடுகள் தான் இந்த அரபு நாட்டு தலை­வர்­களை அந்த பத­வி­களில் அமர்த்­தி­யி­ருப்­ப­துடன் தொடர்ந்தும் அவர்­களை அப்­ப­த­வி­களில் தக்க வைத்­தி­ருக்­கின்­றன. இஸ்­ர­வே­லுக்கு எதி­ராக பேசினால் அவர்கள் தொடர்ந்து நிலைக்க மாட்­டார்கள். எனவே பத­வியை பாது­காத்துக் கொள்ள வேண்­டு­மானால் வல்­ல­ர­சு­க­ளது விருப்­பத்தை பூர்த்தி செய்து கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்த வேண்டும்; மேற்கு சார்பு நிலைப்­பா­டு­களை எடுக்க வேண்டும்.

இந்த அரபு ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு இஸ்லாம், மனி­தா­பி­மானம், நீதி, நியாயம் என்­ப­வற்றை விடவும் தமது ஆட்சி, அதி­காரம், பணம், சுக­போகம், சுகண்டி என்­பன முக்­கி­ய­மாக உள்­ளன. எனவே அவற்றை அவர்கள் இழக்கத் தயா­ராக இல்லை. இவ்­வு­லகில் பலர் அவர்­க­ளுக்கு ஏசி­னாலும் மறு­மையில் தண்­டனை கிடைத்­தாலும் பர­வா­யில்லை ஆட்­சியில் நிலைத்­தி­ருப்­பது தான் முக்­கியம். அவர்கள் தமது ஆட்சிக் கதி­ரை­களைப் பாது­காத்துக் கொள்ள இஸ்ரேல் சார்பு நிலைப்­பா­டு­களை எடுக்­கி­றார்கள். எனவே இது ஆச்­ச­ரி­ய­மல்ல.

4. இஸ்­லா­மிய நோக்கு இன்மை
முஸ்­லிம்­களில் பலர் பாலஸ்­தீன விவ­கா­ரத்தை ஈமா­னிய பார்­வையில் நோக்­கு­வ­தில்லை. பாலஸ்­தீனில் அமைந்­துள்ள பைதுல் முகத்தஸ் முஸ்­லிம்­க­ளது முத­லா­வது கிப்லா. நபி­ய­வர்கள் மிஃராஜ் சென்­றது அங்­கி­ருந்­துதான். அல்­குர்­ஆனின் கருத்தின் படி அது பல நபி­மார்கள் வாழ்ந்த பாக்­கி­ய­ம­ளிக்­கப்­பட்ட புனித பூமி­யாகும். இது போன்ற கருத்­து­களை அவர்கள் தெரி­யா­தி­ருப்­ப­தனால் இது விட­ய­மாக மிகுந்த பொடு­போக்­குடன் நடந்து கொள்­கி­றார்கள். தமது ஊரில் உள்ள ஒரு சாதா­ரண பள்­ளி­வா­யலை இஸ்­லாத்தின் விரோ­திகள் தமது கட்­டுப்­பாட்­டிற்குள் வைத்­தி­ருந்தால் அவர்கள் எப்­ப­டி­யான மனோ நிலையில் இருப்­பார்கள்? உலகில் உள்ள புனி­த­மான மூன்று மஸ்­ஜி­து­களில் ஒன்று முஸ்­லிம்­க­ளது கைவசம் இல்லை என்றால் எப்­ப­டி­யான கவலை வர வேண்டும்.? ‘ராவணன் ஆண்டால் என்ன ராவண் ஆண்டால் என்ன’ என்ற நிலைப்­பாடு அவர்­க­ளி­டத்தில் இருக்­கி­றது.

எனவே இதனை சிலர் வெறு­மனே ஓர் அர­சியல் விவ­கா­ர­மா­கவும் பாலஸ்­தீ­னர்­களின் உள்­வீட்டுப் பிரச்­சி­னை­யா­கவும் வெறும் நிலத்­துக்­கான போராட்­ட­மா­கவும் பார்ப்­பதில் ஆச்­ச­ரி­ய­மில்லை.

முஸ்­லிம்கள் உலகின் எந்த மூலை முடுக்கில் வாழ்ந்­தாலும் அவர்கள் அனை­வரும் ஈமா­னிய கயி­றினால் கடு­மை­யாக பிணைக்­கப்­பட்ட உணர்வை கொண்­டி­ருக்க வேண்டும். அவர்­களில் யாருக்கு ஒரு துன்பம், கஷ்டம் வந்­தாலும் அதனை முழு முஸ்லிம் சமூ­கமும் உணர்ந்து அக்­கஷ்­டத்தை நீக்­கு­வதில் பங்­கெ­டுக்க வேண்டும். இதே பார்வை பலஸ்­தீன முஸ்­லிம்கள் விட­ய­மா­கவும் உலகில் உள்ள ஒவ்­வொரு முஸ்­லி­முக்கும் வர வேண்டும். எனவே இந்த ஈமா­னிய உணர்வு இல்­லாமல் இருந்தால் பலஸ்­தீன விவ­காரம் இழுத்­த­டிக்­கப்­ப­டு­வதில் ஆச்­ச­ரி­ய­மல்ல.

5. பிரித்தால் தான் ஆழலாம்.
அரபு இஸ்­லா­மிய நாடு­களில் பெற்­றோ­லிய வளம் உட்­பட பல வகை­யான வளங்­களும் காணப்­ப­டு­கின்­றன. அவற்றை அவை மிகக்­க­வ­ன­மாக, திட்­ட­மிட்டுப் பயன்­ப­டுத்­தினால் அல்­லாஹ்வின் உத­வியால் உலகின் வல்­ல­ர­சு­க­ளாக நிச்­ச­ய­மாக மாறலாம். அதற்கு இஸ்­லா­மிய நாடு­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையும் பரஸ்­பரம் ஒத்­து­ழைப்பும் அவ­சியம். அத்­துடன் இந்த நிலையை அடைய யுத்­தங்கள், சில்­லறைப் பிரச்­சி­னைகள் போன்ற ‘கவனக் கலைப்­பான்கள்’ இல்­லாத அமை­தி­யான சூழல் காணப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.இஸ்­லா­மிய நாடு­க­ளது எழுச்­சியும் பலமும் ஐக்­கி­யமும் வல்­ல­ர­சு­க­ளுக்கு பெரும் சவா­லாகும். ஆகவே தான் வல்­ல­ர­சுகள் அரபு இஸ்­லா­மிய நாடு­களை இரு வேறு துரு­வங்­க­ளாக பிரித்­துக்­கொண்டு அவற்றை தமது கைப்­பி­டிக்குள் வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றன. அந்தப் பிரிப்பால், பிள­வு­களால் அந்த முஸ்லிம் நாடுகள் உள்­நாட்டுப் போர்கள், எல்லைச் சண்­டைகள், அங்­கி­ருக்கும் முற்­போக்கு சக்­தி­களை ஒடுக்­கு­வது என்­ப­வற்றில் மூழ்கி அவற்­றி­லேயே தமது கால­நே­ரங்­களை விரயம் செய்து கொண்­டி­ருக்­கின்­றன. இந்த சந்­தர்ப்­பத்தை வல்­ல­ர­சுகள் கன­கச்­சி­த­மாக பயன்­ப­டுத்தி முஸ்லிம் நாடு­க­ளது வளங்­களை சுரண்­டு­கின்­றன.

பலஸ்­தீன விவ­கா­ரத்தை உன்­னிப்­பாக நோக்­கினால் அதனை வைத்தும் அரபு உல­கத்தை வல்­ல­ர­சுகள் கூறு போட்­டி­ருக்­கின்­றன. ஒர் அரபு நாடு பாலஸ்­தீ­னர்­க­ளுக்கு சார்­பாக இருக்­கி­றது. மற்­றொன்று இஸ்­ரேலை நியா­யப்­ப­டுத்­து­கி­றது. இன்­னு­மொன்று கருத்து வெளி­யிட்டால் வில்­லங்­கத்தில் மாட்ட வேண்டி வருமோ என்று மெளனம் காக்­கின்­றது.

தொழி­நுட்­பத்தில் உச்சம்
ஆழ­மான ஈமான், பரஸ்­பர ஒற்­றுமை என்­ப­ன­வற்­றோடு ஒரு நாட்டின் ஸ்திரப்­பாட்டில் தொழில்­நுட்ப, விஞ்­ஞான முன்­னேற்றம் மிக முக்­கி­ய­மா­னது. இஸ்­ரேலைப் பொறுத்­த­வ­ரையில் அது இந்த துறை­களில் உச்­ச­கட்­டத்தை அடைந்­தி­ருக்­கி­றது. இஸ்­ர­வே­லர்கள் கல்வி, ஆராய்ச்சி, விஞ்­ஞானம் தொழில்­நுட்பம் போன்ற துறை­களில் முன்­ன­ணியில் திகழ்­கி­றார்கள். இஸ்லாம் கல்­விக்கு முன்­னு­ரிமை வழங்­கி­யது மட்­டு­மன்றி உல­க­வாழ்வின் மேம்­பாட்­டுக்­கான கார­ணி­யா­கவும் அதனை வலி­யுத்­தி­யுள்­ளது. அரபு, இஸ்­லா­மிய நாடு­களில் கல்­விக்கு ஆராய்ச்­சிக்கு தொழில் நுட்ப வளர்ச்­சிக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட்டு இஸ்­ரேலை விடவும் அந்­நா­டுகள் முன்­ன­ணியில் திகழும் வரைக்கும் அல்­லாஹ்­வி­னு­டைய ஏற்­பாட்டின் படி வெற்றி வரு­வது சாத்­தி­ய­ம­மில்லை.
வெறும் ஈமானும் ஒற்­று­மையும் மாத்­திரம் பல­ன­ளிக்­காது. அல்லாஹ் கூறி­ய­படி முஸ்­லிம்கள் வெற்­றிக்­கான ஏற்­பா­டு­களைச் செய்­து­விட்டுத் தான் அல்­லாஹ்­வி­டத்­திலே பொறுப்பு சாட்ட வேண்டும்;தவக்குல் வைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தனது எல்லா முயற்­சி­க­ளையும் திட்­ட­மிட்டு தயா­ராகி,சகல வளங்­க­ளையும் திரட்­டிய வண்­ணமே செய்­தி­ருக்­கி­றார்கள் என்­பது எமக்கு நல்ல முன்­மா­தி­ரி­யாகும்.

“எமது பாதையில் யார் கடு­மை­யாக முயற்சி செய்­கி­றார்­களோ அவர்­களை நிச்­ச­ய­மாக எமது பாதை­களில் வழி நடத்­துவோம். நிச்­ச­ய­மாக அல்லாஹ் எந்த ஒரு காரி­யத்­தையும் திறம்­பட செய்­ப­வர்­களை விரும்­பு­கிறான்.”(அல்­குர்ஆன்)
முயற்சி செய்­யாமல் வெற்­றியை எதிர்­பார்ப்­பது சாத்­தி­ய­மில்லை. அப்­போது வெற்றி வராமல் இருப்­பது அதி­ச­ய­மு­மல்ல.
எனவே மேற்­படி கார­ணங்கள் இருக்கும் வரைக்கும் பாலஸ்­தீன பிரச்­சினை தொடர்ந்தும் பிரச்­சி­னை­யா­கவே இருக்கும்.

பலஸ்தீன் மக்­க­ளுக்­கான எமது கட­மைகள்
உட­ன­டி­யாக செய்ய வேண்­டி­யவை:
1. தொழு­கை­களின் போதும் அவற்றின் பின்­னரும் சாதா­ரண நேரங்­க­ளிலும் நோன்பு திறக்கும் பொழுதும் அவர்­க­ளுக்­காக துஆச் செய்ய வேண்டும்.
2. ஒவ்­வொரு தொழு­கை­யிலும் குனூத் ஓதலாம்.

எப்­போதும் செய்ய வேண்­டி­யவை:-
3. பலஸ்­தீன வர­லாற்றை எவ்­வித திரி­பு­கழும் இல்­லாமல் நடு­நி­லை­யாக இருந்து படிக்­கலாம்.
4. அந்தப் பூமி எவ்­வ­ளவு அருள்­பா­ளிக்­கப்­பட்­டது என்­பதை குர்ஆன் ஹதீஸ் வச­னங்­களின் ஊடா­கவும் அங்கு இடம்­பெறும் நட­வ­டிக்­கைகள் தொடர்­பா­கவும் ஹதீஸ்­களில் வந்­தி­ருக்­கின்ற முன்­ன­றி­விப்­புகள் தொடர்­பா­கவும் படிக்­கலாம்.
5. எமது தப்ஸீர் விளக்­கங்­களில் ‘இஸ்­ரா­யீ­லிய்யாத்’துகளை முற்று முழு­தாக தவிர்க்­கலாம்.
6. தற்­கால உலகில் முஸ்­லிம்­களின் முதல்­தர எதி­ரி­யான – பாலஸ்­தீ­னத்தின் எதி­ரி­க­ளது உற்­பத்­தி­களை புறக்­க­ணித்து எமது நாட்டின் உற்­பத்­தி­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கலாம்.
7. உலகில் முஸ்­லிம்­க­ளுக்கும் இஸ்­லாத்­திற்கும் எதி­ரான சிந்­தனைப் படை­யெ­டுப்பு அரங்­கேறி வரு­கி­றது. குறிப்­பாக இஸ்­லாத்தின் எதி­ரி­க­ளது நாஸ்­தி­க­வாத, சட­வாத சுய­நல, இன்ப நுகர்ச்சி இலக்கு கொண்ட இராட்­சத தொடர்பு சாத­னங்கள் வாயி­லாக மிகப் பிர­மாண்­ட­மான ஊட­க­வியல் யுத்­த­மொன்று பல வகை­யான தொடர்பு சாத­னங்கள் வாயி­லா­கவும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. பலஸ்­தீன விவ­கா­ரத்­திலும் பல உண்­மைகள் இருட்­ட­டிப்புச் செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த நிலையை எதிர்­கொள்ள முஸ்­லிம்கள் மீடியா உலகில் கால் பதிக்க வேண்டும். உலகில் உள்ள நடு­நி­லை­யாக, நியா­ய­மாக சிந்­திக்கும் முஸ்லிம் அல்­லாத பல தனி­ம­னி­தர்­களும் நிறு­வ­னங்­களும் மன­சாட்­சிக்கு விரோ­த­மில்­லாமல், நடு­நி­லை­யாக சிந்­தித்து மீடி­யாக உலகில் பிர­கா­சிக்­கி­றார்கள். அவர்­க­ளுடன் இணைந்து இந்த முயற்­சி­களை மேற்­கொள்­ளலாம். நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் பின் தாபித் (ரழி) போன்ற கவி­ஞர்­களை தமது தூதைப் பலப்­ப­டுத்த பயன்­ப­டுத்­தி­யதை முன்­னு­தா­ர­ண­மாகக் கொள்ள வேண்டும்.

7. இஸ்­லாத்­துக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் மனித இனத்­திற்கும் வெற்­றியும் விமோ­ச­னமும் கிடைக்க வேண்­டு­மாயின் நாம் கடை­பி­டித்தே ஆக­வேண்டும் என அல்­லாஹ்வும் ரஸூல் (ஸல்) அவர்­களும் கூறிய நிய­தி­களை, நிபந்­த­னை­களை நாம் தெரிந்து கொண்டு அவற்­றிற்கு ஏற்ப எமது வாழ்க்­கையை ஒழுங்­கு­ப­டுத்த வேண்டும்.

அந்த நிபந்­த­னை­களிற் சில:

அ. ஆழ­மான தெளிந்த ஈமான்
ஆ. முஸ்லிம் சமூ­கத்தின் ஐக்­கி­யமும் பரஸ்­பர விசு­வா­சமும்
இ. இஸ்லாம் பற்­றிய தெளிந்த அறிவும் அதனை பின்­பற்­று­வதும்
ஈ. அவ்­வக்­கா­லத்தில் உள்ள அறிவு ஞானங்­களை துறை­போகக் கற்­பதும் அவற்றில் ஈடு­பாடு காட்­டு­வதும்.
உ. முஸ்லிம் சமூ­கத்தின் பண்­பாட்டுப் பலம்
சாந்தி, சமாதானம், நிம்மதி, மதசகிப்புத்தன்மை என்பன இந்த உலகத்தில் நிலவ நாம் எல்லோரும் முயற்சிப்போமாக!
தற்போதைய நிகழ்வுகள் எமக்கு பல படிப்பினைகளையும் பாடங்களையும் கற்றுத் தருகின்றன.

அல்லாஹ் நிச்சயமாக இறுதி வெற்றியை சத்தியத்திற்கே கொடுப்பான்.
பலஸ்தீன சகோதரர்களுக்காக நாம் துஆச் செய்வோம்.
வல்லவன் அல்லாஹ் அவனது கருணையால் எம்மை அரவணைத்து பாலஸ்தீன மக்களுக்கு ஒளிமயமான, கெளரவமான வாழ்வைக் கொடுப்பானாக!

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.