திரு­கோ­ண­மலை ஷ­ண்­முகா விவ­காரம் : பாட­சா­லை­களில் ஹபாயா ஆடை அணி­வ­தற்கு தடை­யில்லை என பிர­தி­வா­திகள் நீதி­மன்றில் எழுத்து மூலம் உத்­த­ர­வா­த­ம­ளிப்பு

0 424

பாட­சா­லை­களில் அபாயா ஆடை அணி­வ­தற்கு எவ்­வித தடை­யு­மில்லை என பிர­தி­வா­தி­களி நீதி­மன்­றுக்கு எழுத்து மூலம் உத்­த­ர­வா­த­ம­ளித்­த­தை­ய­டுத்து ஷண்­முகா ஹபாயா விவ­கா­ரத்தில் ஆசி­ரியை பஹ்­மிதா றமீஸ் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­தி­ருந்த வழக்கு நேற்­று­முன்­தினம் முடி­விற்கு வந்­தது.

தனது கலாச்­சார ஆடை­யோடு பாட­சா­லைக்குச் செல்ல அனு­ம­திக்­கப்­பட வேண்டும் என ஆசி­ரியை பஹ்­மிதா மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்­தி­ருந்தார். அதே­நேரம் தனது அரச கட­மையைப் பொறுப்­பேற்கச் சென்ற வேளை அதனைத் தடுத்­த­மைக்கு எதி­ராக ஷண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியின் அதிபர் லிங்­கேஸ்­வரி ரவி­ரா­ஜ­னுக்கு எதி­ராக குற்­ற­வியல் வழக்­கொன்றை திரு­கோ­ண­மலை நீதவான் நீதி­மன்­றிலும் தாக்கல் செய்­தி­ருந்தார்.

பாட­சாலை அதிபர் சமூகம் ஷண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரிக்கு ஹபாயா அணிந்து வரத் தடை­யில்லை என்ற உத்­த­ர­வா­தத்தைத் தந்­ததைத் தொடர்ந்து அதி­ப­ருக்கு எதி­ராகத் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு சம­ரச அடிப்­ப­டையில் முடி­விற்கு வந்­த­தி­ருந்­தது. எனினும் நீதவான் நீதி­மன்­றத்தில் கொடுக்­கப்­பட்ட ன் உத்­த­ர­வாதம் அப்­பா­ட­சா­லை­யினை மாத்­தி­ரமே கட்­டுப்­ப­டுத்தும்.

ஆனால் கொழும்பு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற வழக்கில் பிர­தி­வா­தி­க­ளான கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் செய­லாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்­பாளர், ஷண்­முகா அதிபர், திரு­கோ­ண­மலை வலயக் கல்விப் பணிப்­பாளர், அரசைப் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்­திய சட்­டமா அதிபர் திணைக்­களம் என்­பன பாட­சா­லை­களில் ஹபாயா அணிந்து செல்­வதில் எந்தத் தடையும் இல்லை என உத்­த­ர­வாத்­தினை எழுத்து மூலம் வழங்­கி­யி­ருந்தார். இத­னை­ய­டுத்து இவ்­வ­ழக்கு முடி­விற்கு வந்­தது.

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி விரான் கொறேயா, குரல்கள் இயக்­கத்தின் சட்­டத்­த­ரணி றாஸி முஹம்மத் மற்றும் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகி இருந்தனர்.

குரல்கள் இயக்கம் (Voices Movement) பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஆதரவாக ஆரம்பம் முதல் போராடி வந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.