காஸாவுக்காக கொழும்பில் இன மத பேதமின்றி ஒன்றிணைந்த மக்கள்

0 230

ஏ.ஆர்.எ.பரீல்

‘‘பலஸ்­தீனில் மனித படு­கொ­லைகள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­படல் வேண்டும். யுத்­தத்தை நிறுத்­து­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் சபை உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். பலஸ்­தீனில் அமை­தியும், சமா­தா­னமும் நிலை­நாட்­டப்­படல் வேண்டும்’’ என்­பதை வலி­யு­றுத்தி நேற்று முன்­தினம் கொழும்பில் அமைதி மாநாடு ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்தது.

‘வீ.ஆர்.வன்’ அமைப்பின் ஏற்­பாட்டில் யுத்தம் வேண்டாம் எனும் தொனிப் பொருளில் இந்த அமைதி மாநாடு கொழும்பில் செவ்வாய்க் கிழமை மாலை ஹைட்பார்க் மைதா­னத்தில் இடம் பெற்­றது.

இம்­மா­நாட்டில் பெருந்­தி­ர­ளான மக்கள் இன மத பேத­மின்றி கலந்து கொண்­டி­ருந்­தனர். கணி­ச­மாக அளவு பெண்­களும் பங்கு கொண்­டனர். சர்­வ­மதத் தலை­வர்­களும் கலந்து கொண்டு மாநாட்டில் உரை நிகழ்த்­தி­ய­துடன் அவர்கள் பலஸ்­தீனில் இடம்­பெறும் இனப்­ப­டு­கொ­லை­களைக் கண்­டித்­தனர்.
கட்சி பேதங்­க­ளின்றி அனைத்து அர­சியல் கட்­சி­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி அர­சியல் பிர­மு­கர்­களும் கலந்து கொண்டு மாநாட்டில் உரை நிகழ்த்­தினர்.

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிரி­சேன, எதிர்க்­கட்சித் தலைவர் சஜித்­ பி­ரே­ம­தாஸ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப்­ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் ­ப­தி­யுதீன், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மனோ கணேசன், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­ச­மா­ணிக்கம் சாணக்­கியன், ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்­தும பண்­டார, எரான் விக்­கி­ர­ம­ரத்ன, சம்­பிக்க ரண­வக்க, நளீன் பண்­டார மற்றும் ஏ.எச்.எம். பௌஸி, இரா­ஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜி­த­ ஹேரத், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பலஸ்­தீன நற்­பு­றவு சங்­கத்தின் தலை­வ­ரு­மான பிமல் ரத்­நா­யக்க, முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜி­புர் ­ரஹ்மான், முன்னாள் ஆளுனர் அஸாத் ­சாலி உள்­ளிட்ட மேலும் பலரும் கலந்து கொண்­டனர்.

இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதுவர் கலா­நிதி சுஹைர் ஹம்­தல்லாஹ் செய்ட்டும் நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்தார்.
அடை மழைக்கு மத்­தியில் பெருந்­தி­ர­ளான மக்கள் மாநாட்டின் இறு­தி­வரை கலந்து கொண்­டி­ருந்­தமை விசேட அம்­ச­மாகும்.
மாநாட்டின் ஆரம்­பத்தில் இஸ்­ரே­லிய படை­களால் காஸாவில் படு­கொலை செய்­யப்­பட்ட மக்­க­ளுக்­காக மௌன அஞ்­ச­லியும் பிரார்த்­த­னையும் மேற்­கொள்­ளப்­பட்­டது.

முன்னாள் ஜனா­தி­பதி
மைத்­தி­ரி­பால சிரி­சேன
மாநாட்டில் உரை­யாற்­றிய முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிரி­சேன, மூன்று தசாப்­த­கா­ல­மாக இலங்­கையில் இடம்­பெற்ற உள்­நாட்டு யுத்­தத்­தினால் ஏற்­பட்ட அழி­வு­க­ளையும் உயி­ரி­ழப்­பு­க­ளையும் நினை­வு­கூர்ந்தார். தான் யுத்­தத்­திற்கு எதி­ரான நிலைப்­பாட்­டையே கொண்­டி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி சுமார் அரை­ நூற்­றாண்டு காலத்­துக்கும் மேலாக பலஸ்­தீ­னத்­திற்கு ஆத­ர­வாக செயற்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் கூறினார்.
பலஸ்­தீ­னத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் உயி­ரி­ழந்­தி­ருக்­கி­றார்கள். இவர்­களில் அதி­க­மானோர் பெண்­களும் சிறு­வர்­களும் ஆவார்கள். இது பெரும் வேத­னை­ய­ளிக்­கி­றது. இந்த யுத்தம் அப்­பாவி மக்­களின் உயிர்­களைக் காவு­கொள்­கி­றது. யுத்­தத்தை நிறுத்­து­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் சபை உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். பலஸ்­தீ­னத்தில் அமை­தியும் சமா­தா­னமும் நிலை­நாட்­டப்­படல் வேண்டும். இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீது மாத்­திரம் மனித உரி­மை­களைத் திணிக்­காமல் அதனை உலகின் பலம்­பொ­ருந்­திய நாடுகள் மீதும் பிர­யோ­கிக்க வேண்டும் என்றார்.

எதிர்க்­கட்சித் தலைவர்
சஜித் பிரே­ம­தாஸ
இஸ்ரேல் ஐ.நா.சபை உத்­த­ர­விட்ட யுத்த நிறுத்­தத்தை மறுத்­துள்­ள­மையை ஒரு போதும் அனு­ம­திக்க முடி­யாது. பலஸ்­தீ­னத்தில் மனி­தா­பி­மா­னத்­திற்கு இட­ம­ளிக்­கப்­பட வேண்டும். பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு யுத்­த­மாக அமையக் கூடாது. கலந்­து­ரை­யாடல் மூலமே தீர்வு முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். அனை­வரும் ஒன்­றாக வாழும் சூழல் உரு­வாக்­கப்­பட வேண்டும் என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தன­து­ரையில் குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில், முழு காஸா­வையும் நிர்­மூ­ல­மாக்கும் இஸ்­ரேலின் இலக்­கினை நாம் எதிர்க்­கிறோம். ஒரு குழு­வுக்­காக முழு பலஸ்­தீ­னத்தின் அப்­பாவி மக்­க­ளையும் அழிப்­பது அரச பயங்­க­ர­வா­த­மாகும்.
சிறு­வர்கள், பெண்கள் உட்­பட அப்­பாவி மக்­களை அழித்து அத­னையே இலக்­காகக் கொண்­டுள்ள இஸ்ரேல், மனி­தா­பி­மா­னத்­துக்கு முன்­னு­ரிமை வழங்க வேண்டும். இந்த யுத்தம் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும் என்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­ரஸின் தலைவர் ரவூப் ஹகீம்
பலஸ்­தீ­னத்தில் இஸ்ரேல் மனித படு­கொ­லை­களை அரங்­கேற்றி வரு­கி­றது. ஏகா­பத்­தி­ய­வா­திகள் இந்த பயங்­க­ர­வா­தத்தை முன்­னெ­டுத்து வரு­கி­றார்கள். இதனால் பாதிக்­கப்­பட்டு வரும் மக்­களை பயங்­க­ர­வா­தத்தினுள் தள்ளுவதே இவர்களின் இலக்கு என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹகீம் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், நாம் பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரிக்­க­வில்லை. ஆனால் இதுவே யதார்த்தம். சியோ­னிஸ சக்­திகள் என்றோ முறி­ய­டிக்­கப்­படும். ஏகா­பத்­திய சக்­திகள் ஒருநாள் இதற்கு பதி­ல­ளித்­தாக வேண்டும். அவர்கள் சர­வ­தேச நீதி­மன்றில் நிறுத்­தப்­ப­டு­வார்கள். பலஸ்­தீ­னத்­துக்கு சுதந்­திரம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிசாத் பதி­யுதீன்
பலஸ்­தீ­னத்தில் இனப்­ப­டு­கொலை நடை­பெ­று­கி­றது. பெண்கள், சிறு­வர்கள் என்­று ­பா­ராது ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் கொல்­லப்­ப­டு­கி­றார்கள். ஒவ்­வொரு நாளும் இது தொடர்­கி­றது. உலக நாடுகள் கண்ணீர் வடிக்­கின்­றன. ஆனால் இதற்கு தீர்வு கிட்­ட­வில்லை.

இலங்­கையில் நாம் இன மத பேத­மின்றி பலஸ்­தீ­னர்­க­ளுக்­காக ஒன்­று­பட்­டுள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

மேலும் அவர் இந்த அடா­வ­டித்­தனம் நிறுத்­தப்­பட வேண்டும். ஐ.நா.சபை இஸ்­ரே­லுக்கு எதி­ராக கடு­மை­யான தீர்­மானம் மேற்­கொள்ள வேண்டும் என்றார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர்
விஜித ஹேரத்
இஸ்­ரேல்-­ ப­லஸ்­தீ­னத்­துக்கு இடை­யி­லான யுத்­தத்தை நிறுத்­து­வதில் ஐ.நா.சபை தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கி­றது. இந்த யுத்தம் நீடிக்கும் நிலையில் ஐ.நா.சபைக்குப் பதி­லாக மாற்­றுக்­கட்­ட­மைப்­பொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு உலக நாடுகள் முன்­வர வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ஹேரத் குறிப்­பிட்டார்.

இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதுவர் கலா­நிதி சுஹைர்
ஹம்­தல்லாஹ் செய்ட்
பலஸ்­தீன மக்­க­ளுக்­காக இலங்கை மக்­களும் அர­சி­யல்­வா­தி­களும் எவ்­வித பேத­மு­மின்றி ஒன்­று­பட்டு ஆத­ரவு வழங்கி வரு­வது எமக்கு பலம் சேர்த்துள்ளது. எமக்கு எதிரான தடைகளை தகர்த்து நாம் எமது சுதந்திரத்தைப் பெற்றே தீர்வோம் என இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லாஹ் செய்ட் தெரிவித்தார்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பெருந்திரளான மக்கள் கூடாரத்துக்குள் காத்திருந்து நிகழ்வின் இறுதிவரை பங்கேற்றனர். பலஸ்தீனின் விடுதலைக்கான கொடிகளை பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் ஏந்தியிருந்தனர்.

பலஸ்­தீன மக்­களின் உரி­மைகள் மற்றும் போர் நிறுத்தம் என்­ப­வற்றை வலி­யு­றுத்தி பிர­க­டனம் ஒன்றும் வெளி­யி­டப்­பட்­டது. இப்­பி­ர­க­டனம் கொழும்பில் உள்ள ஐ.நா.சபை காரி­யா­ல­யத்தில் கைய­ளிக்­கப்­பட்­டது. சமா­தா­னத்தை வலி­யு­றுத்தி மாநாட்டில் வெண்­ பு­றாக்­களும் பறக்கவிடப்பட்டன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.