குர்ஆன் இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வதில் கெடுபிடிகள்

0 661

ஏ.ஆர்.ஏ.பரீல்

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து குர்ஆன் மற்றும் இஸ்­லா­மிய இறக்­­கு­மதி நூல்­களை அரசு விடு­விப்­ப­தற்கு நீண்ட காலம் செல்­கி­றது. இதனால் முஸ்லிம் சமூகம் பெரிதும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளது என அகில இலங்கை ஜம்­ இய்­யத்துல் உலமா முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் முறைப்­பா­டு­களை முன்­வைத்­த­துடன் இது தொடர்பில் பாரா­ளு­மன்ற அமர்வில் பேசு­மாறும் வேண்­டிக்­கொண்­டது.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும், அகில இலங்கை ஜம்­ இய்­யத்துல் உலமா சபையின் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்­கி­யுள்ள பிரச்­சி­னைகள் தொடர்­பன கலந்து­ரை­யா­ட­லொன்று உலமா சபையின் தலை­மைக்­ காரி­யா­ல­யத்தில் இடம் பெற்­றது. அக்­க­லந்­து­ரை­யா­டலின் போதே உலமா சபை­ முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் மேற்­ கு­றிப்­பிட்ட கோரிக்­கையை முன்­வைத்­தது.

மேலும் அர­புக்­கல்­லுரி மத்­ரஸா விவ­கா­ரங்­களில் உள­வுப்­பி­ரி­வி­னரின் தலை­யீ­டுகள் குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இஸ்­லாம் பாட­நெ­றியில் சில பாடங்கள் நீக்­கப்­ப­டு­வது தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­ட­ப்­பட்­ட­து.

நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குறிப்­பிட்ட விட­யங்கள் தொடர்பில் தங்­க­ளது பாரா­ளு­மன்ற உரையின்போது கவனத்தை ஈர்ப்பதாகத் தெரி­வித்­தனர்.

சந்­திப்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீம், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிசாத் பதி­யு­தீன், ஏ.எச்.எம்.பெ­ள­ஸி, இஷாக் ரஹ்மான் மற்றும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்­டனர். அகில இலங்கை ஜம்­இ­ய்­யத்துல் உலமா சார்பில் அதன் பொதுச் செய­லாளர் அர்­கம் நூராமித் தலை­மை­யி­லான குழு­வினர் பங்கு கொண்­ட­னர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.