பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்ட மூலம் பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்­தினை விட கொடி­ய­து

0 581

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

அண்­மையில் அரசு வர்த்­த­மா­னியில் வெளி­யிட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்ட மூலம் தற்­போது அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்­தினை விட மிகக் கொடி­ய­தாகும். இந்த சட்ட மூலத்தை வன்­மை­யாக எதிர்ப்­ப­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம்.சுஹைர் தெரி­வித்­துள்ளார்.

அர­சாங்­கத்­தினால் கொண்டு வரப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் எம்.எம்.சுஹைர் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது: ‘பயங்­க­ர­வாதம் தொடர்­பான சட்ட மூலம் 2017 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 17 ஆம் திகதி வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டது. இந்த சட்ட மூலத்­துக்கு மக்கள் பாரிய எதிர்ப்­பினை வெளி­யிட்­டனர். இத­னை­ய­டுத்து இந்தச் சட்­ட­மூலம் கைவி­டப்­பட்­டது.
இத­னை­ய­டுத்து கடந்த மார்ச்­மாதம் பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்டம் சில திருத்­தங்­க­ளுடன் கொண்டு வரப்­பட்­டது.இதற்கும் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டது. இத­னை­ய­டுத்து நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ சட்ட மூலத்தில் சில கொடிய விட­யங்­களை நீக்­கு­வ­தாகக் கூறி திரும்­பவும் பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மூலம் என்ற பெயரில் கடந்த 15 ஆம் திகதி வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யிட்­டுள்ளார்.

இன்று நாடு அந்­நிய முத­லீ­டு­களை எதிர்­பார்த்­தி­ருக்­கி­றது. மற்றும் ஏற்­று­மதி, உல்­லாசப் பய­ணத்­துறை என்­ப­வற்றை நம்­பி­யி­ருக்­கி­றது. இந்­நி­லையில் பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­டத்தைக் கொண்டு வந்தால் எமது நாட்டில் தொடர்ந்து பயங்­க­ர­வாதம் இருப்­ப­தா­கவே சர்­வ­தேசம் கருதும்.
‘அர­க­லய’ போன்ற போராட்­டங்­களை தடுத்து நிறுத்­து­வ­தற்கும், சமூக ஊட­கங்கள் உட்­பட ஊட­கங்­களை ஒடுக்­கு­வ­தற்கும் டயஸ்­போரா மற்றும் முஸ்லிம் பயங்­க­ர­வாதம் என்­ப­வற்றைத் தடுப்­ப­தற்­கு­மா­கவே இச்­சட்ட மூலம் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளது.

இச்­சட்ட மூலத்தின் மூலம் விவ­சா­யிகள் தங்­க­ளுக்குத் தேவை­யான உரத்­தினைக் கோரி போராட்டம் நடத்­தினால் அப்­போ­ராட்டம் நாட்டின் சட்­டத்தை சீர்­கு­லைத்­துள்­ள­தாகக் கூறி விவ­சாய போராட்­டக்­கா­ரர்­களின் தலை­வரைக் கைது செய்து குறைந்­தது ஒரு வருட காலம் சிறையில் அடைக்க முடியும்.
அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்டம் சர்­வ­தேச ரீதியில் கொடிய சட்டம் எனக் கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதை­விட கொடிய சட்டம் தற்ேபாது கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மூலமாகும்.

நாடு கட்டியெழுப்பப்பட வேண்டியுள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சட்டங்கள் சர்வதேசம் எம்மைத் தூரப்படுத்திவிடுவதற்குச் சாதகமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.