மத்ரஸாக்களுக்கான பாடத்திட்டம் : இஸ்லாமிய இயக்கங்களின் கருத்துக்களை கோருகிறது திணைக்களம்

0 391

ஏ.ஆர்.ஏ.பரீல்

நாட்டில் இயங்­கி­வரும் அனைத்து குர்ஆன் மத்ர­ஸாக்­க­ளுக்­கு­மான ஒரு பொது­வான பாடத்­திட்டம் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அப்­பா­டத்­திட்டம் தொடர்பில் இஸ்­லா­மிய இயக்­கங்­களின் கருத்­துகள் கோரப்­பட்­டுள்­ளன.

பொது­வான பாடத்­திட்­டத்தில் ஏதும் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டுமா என்­பதை இயக்க ரீதி­யான அமைப்­புகள் முன்­மொ­ழிய முடியும் எனவும் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.
குர்ஆன் மத்­ர­ஸாக்­க­ளுக்குப் பொது­வான பாடத்­திட்டம் தொடர்பில் இயக்க ரீதி­யான அமைப்­பு­களின் கருத்­துக்­களைப் பெறு­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் செப்­டெம்பர் மாதம் 28 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள தேசிய மீலாத் நிகழ்வினையடுத்து இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.