வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் இங்கு திருமணம் செய்வதற்கு தடை

0 483

ஏ.ஆர்.ஏ.பரீல்

‘வெளி­நா­டு­களில் பிர­ஜா­வு­ரிமை பெற்று வாழ்ந்­து­வரும் இலங்கை முஸ்லிம் ஒருவர் இலங்கை வந்து இலங்­கையில் விவாகப் பதிவு செய்து கொள்­வ­தற்கு தடை இருக்­கி­றது. இலங்­கையில் வாழும் ஒரு பெண்ணை அவரால் திரு­மணம் செய்து கொள்ள முடி­யாது. இந்­ந­டை­முறை முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ரமே தடை செய்­யப்­பட்­டுள்­ளது. இதனால் முஸ்­லிம்கள் பல அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­கின்­றனர். எனவே இவ்­வி­ட­யத்தில் விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்டும்
என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் பதி­யுதீன் நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்ற விவா­தத்தில் கலந்து கொண்டு வேண்­டுகோள் விடுத்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இத்­தடை கார­ண­மாக வெளி­நாட்டில் பிர­ஜா­வு­ரிமை பெற்­றி­ருக்கும் இலங்கை முஸ்­லிம்கள் இந்­தி­யா­வுக்குச் சென்று அங்கு தங்கள் விவா­கப்­ப­தி­வினை நடத்திக் கொள்­கின்­றார்கள். இலங்­கை­யி­லி­ருந்து திரு­ம­ணப்­ப­தி­விற்­காக இந்­தி­யா­வுக்குச் செல்­வதால் எமது பணம் வீணாக செல­வா­கி­றது. எனவே இது தொடர்­பாக ஆக்­க­பூர்­வ­மான திருத்­தத்தை அமைச்சர் மேற்­கொள்ள வேண்டும்.

2013 ஆம் ஆண்டு சுற்று நிருபம் ஒன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அச்­சுற்று நிருபம் இங்கு திரு­மணம் செய்து கொள்ளும் வெளி­நாட்­டவர் ஒருவர் இலங்கை முஸ்­லி­மாக இருக்க வேண்டும் என்று தெரி­விக்­கி­றது. இத­ன­டிப்­ப­டையில் திரு­மணம் செய்து கொள்­பவர் இலங்­கையில் பிறந்­த­வ­ராக இருந்­தாலும் அவர் வேறொரு நாட்டில் பிரஜா உரிமை பெற்­றி­ருந்தால் இலங்கைப் பெண்ணை முஸ்லிம் விவாக பதிவு செய்து கொள்ள முடி­யாது. முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ரமே இந்த நடை­முறை அமுலில் உள்­ளது. ஏனைய மதத்­த­வர்­க­ளுக்கு இது விதி­வி­லக்­காகும்.

அத்­தோடு விவாக பதி­வா­ளர்­க­ளுக்கு மிகக் குறைவான கட்டணமே அறவிடப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் இக்கட்டணம் போதாததாகும். இதிலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என்­றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.