ஹஜ் பதிவுக் கட்டணத்தை 2000 பேர் மீளப் பெறவில்லை

0 473

ஏ.ஆர்.ஏ.பரீல்

புனித ஹஜ் யாத்­தி­ரைக்­காக கடந்த காலங்­களில் 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்­டணம் செலுத்தி தம்மைப் பதிவு செய்து கொண்­டுள்­ள­வர்­களின் விண்­ணப்­பங்கள் அனைத்­தையும் முஸ்லிம் சமய, பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இரத்துச் செய்­துள்­ளது.

இவ்­வாறு பதிவு செய்து கொண்­டுள்ள விண்­ணப்­ப­தா­ரி­களில் 2000 பேர் இன்னும் தங்கள் கட்­ட­ணத்தை மீளப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை என தெரி­வித்­துள்ள திணைக்களம், அவற்றை மீளப் பெற்­றுக்­கொள்­ளு­மாறும் கோரிக்கை விடுத்­துள்­ளது.

“பழைய விண்­ணப்ப பதி­வு­களை தொடர்ந்தும் பேணு­வதில் திணைக்­களம் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கி­றது. இதனால் ஆள் மாறாட்­டங்­களும் இடம் பெறு­வ­தற்­கான வாய்ப்­பி­ருக்­கி­றது. விண்­ணப்­ப ப­திவுக் கட்­ட­ணங்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் இது­வரை பதிவு இரத்துச் செய்­யப்­பட்ட விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு திருப்பி வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் சுமார் 2000 விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது பதி­வுக்­கட்­ட­ணங்­களை மீள பெற்­றுக்­கொள்ள வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். அவர்கள் தங்கள் பதிவுக் கட்­ட­ணங்­களை மீளப்­பெற்­றுக்­கொள்­ளு­மாறு வேண்­டு­கிறேன் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட். ஏ.எம்.பைஸல் விடி­வெள்­ளிக்குத் தெரிவித்தார்.

மேலும் 2024 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படும் எனவும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.