இனிப்பான தேயிலை! கசப்பான வாழ்க்கை!!

மலையக மக்களுக்கான நடை பயணத்திற்கு முஸ்லிம்கள் பேராதரவு

0 291

சபீர் மொஹமட்

“எங்­க­ளுக்கு இனி­மேலும் உங்­க­ளு­டைய அனு­தாபம் தேவை­யில்லை. நாங்கள் கேட்­பது இந்­நாட்­டிலே தலை நிமிர்ந்து வாழ்­வ­தற்­கான எங்­க­ளு­டைய உரி­மை­க­ளையே ஆகும்”

வேர்­களை மீட்டு உரி­மை­களை வென்­றிட மாண்­பு­மிகு மலை­யக மக்கள் ஏற்­பாடு செய்த நடைப்­ப­ய­ணத்தின் போது நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் இருந்து வருகை தந்­தி­ருந்த முதி­யவர் ஒருவர் கூறி­யதே இது.

இக்­கட்­டு­ரையில், கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி தலை­மன்­னாரில் ஆரம்­பித்து ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி மாத்­த­ளையில் நிறை­வ­டைந்த மாண்­பு­மிகு நமது சகோ­தர மலை­நாட்டு தமிழ் மக்­களின் நடைப்­ப­ய­ணத்­தையும் அவர்­களின் அடிப்­படை உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுப்­பதில் இந்­நாட்டின் ஏனைய இன மக்­க­ளுக்கு காணப்­ப­டு­கின்ற சமூக பொறுப்­புக்கள் குறித்து வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது.

நாங்கள் அருந்­து­கின்ற தேயிலை எவ்­வ­ள­வுதான் இனிப்­பாக இருந்­தாலும் அதனை பறிப்­ப­வர்­களின் வாழ்க்கை மிகவும் இருண்­ட­தா­கவே உள்­ளது. மலை­யக மக்கள் இலங்­கைக்கு வர­வ­ழைக்­கப்­பட்டு இந்த ஆண்­டுடன் 200 வரு­டங்கள் பூர்த்­தி­ய­டை­கின்­றன. எமது நாட்­டு­டைய பொரு­ளா­தா­ரத்தின் முது­கெ­லும்­பாக ஐந்து தலை முறை­க­ளாக அடிப்­படை உரி­மைகள் கூட இல்­லா­த­வர்­க­ளா­கவே இன்னும் இந்­நாட்­டிலே வாழ்ந்து வரு­கின்­றார்கள். ஒரு நாட்டின் குடி­மகன் என்றால் அந்த நாட்டின் சகல வித­மான உரி­மை­களும் அவ­னுக்கு சரி­ச­ம­மாக கிடைக்க வேண்டும். ஆனால் இலங்­கை­யிலோ மலை­நாட்டு இந்­திய வம்­சா­வளி மக்கள் தமது அடிப்­படை வாழும் உரி­மைக்­காக இன்று போராட வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. 200 வரு­டங்­க­ளாக ஒரு மனித சமூகம் இப்­ப­டிப்­பட்ட கசப்­பான வாழ்க்­கையைப் பெறு­வது ஒரு பார­தூ­ர­மான பிரச்­சினை. ஒரு நாட்­டிற்கு தொடர்ச்­சி­யாக அன்­னியச் செலா­வ­ணியை வழங்கி வரும் சமூ­கத்­திற்கே இந்­நிலை இன்னும் சோக­மா­னது.

200 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இந்­தி­யா­வி­லி­ருந்து இலங்­கைக்கு தேயிலை தோட்­டங்­களில் வேலை செய்­வ­தற்­காக மலை­யக மக்கள் வர­வ­ழைக்­கப்­பட்­டனர். அவர்­களின் முத­லா­வது தலை­முறை மன்­னாரில் இருந்து மாத்­த­ளை­வரை கால்­ந­டை­யாக கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக வர­லாறு கூறு­கின்­றது. வரு­கின்ற வழியில் பல்­வே­று­பட்ட நோய்­களை அவர்கள் எதிர்­கொண்­டார்கள். மேலும் காடு­களை துப்­ப­ரவு செய்­யவும் அவர்கள் பணிக்­கப்­பட்­டார்கள். ஆயிரம் தொழி­லா­ளர்கள் கரை­யொ­துங்கி மாத்­தளை சென்றால் அதிலே 600 பேர் மட்­டுமே இறு­தியில் எஞ்­சு­வார்கள் என புள்ளி விவ­ரங்கள் குறிப்­பி­டு­கின்­றன.

மேலும் அவ்­வாறு வர­வ­ழைக்­கப்­பட்ட மக்கள் பெரி­யம்மை, கொலரா, மற்றும் மலே­ரியா போன்ற கொடிய நோய்­க­ளுக்கும் முகம் கொடுத்து உயிரை விட்­ட­தா­கவும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. மலைய மக்கள் தொகை கணக்­கெ­டுப்­பின்­படி 1891 ஆம் ஆண்­ட­ளவில் 235,000 இந்­திய தமி­ழர்கள் இந்த நாட்­டிற்கு வந்­துள்­ளனர். அந்த எண்­ணிக்கை 1911 கணக்­கெ­டுப்பில், 530,983 ஆக மாறி­ய­துடன் 1931 கணக்­கெ­டுப்பின் போது இலங்கை வாழ் இந்­திய தமி­ழர்­களின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட 7 இலட்­சத்தைத் தாண்­டி­யுள்­ளது.

இழைக்­கப்­பட்ட பாரிய துரோகம்
அது ஒரு கணித சிக்­கலைத் தீர்ப்­பது போல் வெறும் எண்­களின் அடிப்­ப­டையில் எடுக்­கப்­பட்ட ஒரு இரா­ஜ­தந்­திர முடிவு. ஆனால் அந்த இலக்­கங்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­யது உயி­ரற்ற பொருட்­களை அல்ல, மாறாக சுவா­சிக்­கக்­கூ­டிய என்­னையும் உங்­க­ளையும் போன்ற மனி­தர்­களை, பெண்­களை மேலும் குழந்­தை­களை. சில வர­லாற்று ஆசி­ரி­யர்­களின் கூற்­றுப்­படி, கடந்த நூற்­றாண்டின் உலகின் நிகழ்ந்த மிகப்­பெ­ரிய இன வெளி­யேற்றம் இது­வாகும். 1964ஆம் ஆண்டு சிறிமா – சாஸ்­திரி ஒப்­பந்தம் மற்றும் 1974 சிறிமா – இந்­திரா ஒப்­பந்தம் ஆகிய இந்­தியா மற்றும் இலங்கை அரச தலை­வர்கள் கைச்­சாத்­திட்ட இரு­த­ரப்பு ஒப்­பந்­தங்கள் மூலம் ஆயி­ரக்­க­ணக்­கான மனித உயிர்­களின் எதிர்­காலம் நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டது. அவ்­வாறு கலைக்­கப்­பட்ட ஏரா­ள­மான மனித உற­வு­களின் புராணக் கதைகள் இன்றும் மலை நாட்டு மக்­களின் மனதில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

நவீன அடி­மைத்­த­ன­மா­னது பல்­வேறு இன பரி­மா­ணங்­களைக் கொண்­டுள்­ளது. 200 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இலங்­கைக்கு தோட்­டங்­களில் வேலை செய்­வ­தற்­காக அழைத்து வரப்­பட்ட மலை­யகத் தமிழ்த் தொழி­லா­ளர்கள் தற்­போது பெய­ர­ள­வி­லான குடி­மக்­க­ளாக இருந்­தாலும் இலங்­கையின் நவீன கால அடி­மைத்­த­னத்தின் அடை­யா­ள­மாக உள்­ளனர். பிரித்­தா­னியப் பேர­ரசின் கீழ் உரு­வாக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய நலன்­புரி அர­சான இலங்கை, இந்த மலை­யகத் தமிழ்ப் பழங்­கு­டி­யி­னரின் வரு­மா­னத்தில் கட்­டப்­பட்ட ஒரு ராஜ்­ய­மாகும்.
ஆனால் பிரித்­தா­னியர் இலங்­கைக்கு சுதந்­திரம் வழங்­கி­யதன் மூலம் மலை­யகத் தமிழ் சமூ­கத்தின் குடி­யு­ரி­மையை உள்ளூர் தலை­வர்கள் இல்­லா­தொ­ழித்­தனர். 1964ஆம் ஆண்டு கையெ­ழுத்­தான ‘சிறிமா சாஸ்­திரி ஒப்­பந்தம்’ மூலம் மலை­யகத் தமி­ழர்­களில் ஒரு பகு­தி­யி­னரை இலங்­கையில் இருந்து வெளி­யேற்ற முடிவு செய்­யப்­பட்­டது.

மன்னார் முதல் மாத்­தளை வரை
“நாங்கள் வரு­கின்ற வழியில் முஸ்­லிம்கள் எங்­களை கட்டி அணைத்­தார்கள். எமது பெண்­களின் கைகளைப் பிடித்து ஆறுதல் கூறி­னார்கள். பள்­ளிக்­குள்ளே எங்­களை வர­வ­ழைத்து எமக்­காக பிரார்த்­தனை செய்­தார்கள். நாங்கள் ஒரு­போதும் முஸ்­லிம்­க­ளிடம் இவ்­வா­றான ஒரு ஆத­ரவை எதிர்­பார்க்­க­வில்லை. அது கள்­ளங்­க­ப­ட­மற்ற உள்­ளார்ந்த ஒரு ஆத­ர­வாக இருந்­தது. தலை­மன்னார் முதல் மாத்­தளை வரை­யான நடை­ப­ய­ணத்தில் தொடர்ந்து 15 நாட்கள் பய­ணித்த சமூக ஆர்­வலர் வீர­சிங்கம் இவ்­வாறு கூறினார். மேலும் வீர­சிங்கம் கூறு­கையில், நாங்கள் பேசா­லை­யி­லி­ருந்து வரு­கின்ற சந்­தர்ப்­பத்தில் தோட்­ட­வெ­ளிக்கு பக்­கத்தில் காணப்­ப­டு­கின்ற ஒரு முஸ்லிம் கிரா­மத்தின் மக்கள் நாங்கள் வரு­கின்­றதை அறிந்து கையில் இருக்­கின்ற நீரையும் உண­வையும் எடுத்து வந்து எம்­மக்­களை கட்­டி­ய­ணைத்­தார்கள்.

நாங்கள் மதத்தில் இரு வேறு பிரி­வி­ன­ராக இருந்­தாலும் மொழியில் ஒன்­று­பட்­ட­வர்கள் என்­பதை அம்­மக்கள் எமக்கு உணர்த்­தி­னார்கள்.

மேலும் மடுவில் இருந்து செட்­டி­குளம் வரு­கின்ற வழியில், ‘வாழ­வைத்த குளம்’ மக்கள் எங்­களை தொட்டுத் தழுவி நாங்­களும் இந்­நாட்டின் சிறு­பான்மை மக்­களே, உங்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை நாங்­களும் உணர்­கின்றோம் என்­பதை உணர்வு பூர்­வ­மாக எமக்கு உணர்த்­தி­னார்கள். மேலும் அவர் குறிப்­பி­டு­கையில் “உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு பின்னர் முஸ்லிம் சமூகம் பல பாடங்­களை கற்றுக் கொண்­டுள்­ள­தா­கவும் தமிழ் மக்­களும் முஸ்­லிம்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் பற்றி ஓர­ளவு தெளிவு பெற்­றுள்­ள­தாக தான் உணர்­வ­தா­கவும்” வீர­சிங்கம் கூறினார்.

மலைய எழுச்சிப் பய­ண­மா­னது அம்­மக்­களின் எதிர்­காலம் பற்­றி­ய­தாகும். மேலும் மலை­யக மக்கள் இலங்­கையின் சுதந்­தி­ர­மான சம­மான பிர­ஜை­க­ளாக அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும் எனும் கோரிக்­கையை பற்­றி­ய­தாகும். தமது வரு­கையின் 200 வது வருட பூர்த்­தியை மிகப்­பெ­ரிய ஒரு போராட்­டத்­துக்கு மத்­தியில் நினைவு கூறும் மலை­யக தமிழ் சமு­தா­யத்­தினர் முழு­மை­யான மற்றும் சம­மான பிர­ஜை­க­ளாக இலங்கை வாழ்வில் முழு­மை­யா­கவும் அர்த்த பூர்­வ­மாக பங்­கேற்­ப­தற்­காக 11 கோரிக்­கை­களை முன் வைத்­துள்­ளார்கள்.

 • எமது வர­லாறு போராட்டம் மற்றும் பங்­க­ளிப்­பினை ஏற்று அவற்றை அங்­கீ­க­ரித்தல்
 • ஏனைய பிர­தான சமூ­கங்­க­ளுக்கு இணை­யான ஒரு தனித்­து­வ­மான அடை­யா­ளத்தை கொண்ட, சுதந்­தி­ரத்­திற்கு பின்­ன­ரான இலங்­கையின் ஒரு பகுதி மக்­க­ளாக அங்­கீ­க­ரித்தல்
 • தேசிய சரா­ச­ரி­க­ளுடன் சம­நி­லையை எட்­டு­வ­தற்­காக விசே­ட­மாக இச் சமூ­கத்தை இலக்கு வைத்து விசேட செயற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்தி கல்வி சுகா­தார மற்றும் சமூக பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் மீதான உறு­தி­யான நட­வ­டிக்கை
 • வாழ்­விற்­கான ஓர் ஊதியம், கண்­ணி­ய­மான வேலை, தொழி­லா­ளர்­க­ளுக்கு சட்டப் பாது­காப்பு மற்றும் ஆண் மற்றும் பெண் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம­மான ஊதியம்.
 • வீட­மைப்பு மற்றும் வாழ்­வா­தா­ரங்­க­ளுக்­கான பாது­காப்­பான உரி­மைக்­கா­லத்­து­ட­னான காணி உரிமை
 • தமிழ் மொழிக்கு சம­மான பயன்­பாடு மற்றும் சம அந்­தஸ்து
  அர­சாங்க வேலை­களை சம­மாக அணு­கு­வ­தற்­கான வாய்ப்பு
  பெருந்­தோட்­டங்­களில் உள்ள மனிதக் குடி­யேற்­றங்­களை புதிய கிரா­மங்­க­ளாக நிர்­ணயம் செய்தல்
 • வீட்டுப் பணி­யா­ளர்­களின் முழு­மை­யான பாது­காப்பு
  மலை­யக கலாச்­சா­ரத்தை பேணுதல் மற்றும் மேம்­ப­டுத்தல்
  அர­சாங்­கத்தின் அனைத்து மட்­டங்­க­ளிலும் ஆளு­கையில் ஓர் அர்த்­த­முள்ள வகி­பங்கை வழங்கும் ஒப்­பு­ர­வான மற்றும் உள்­ள­டங்­க­லான தேர்தல் முறை மற்றும் அதி­காரப் பகிர்வு

இந்தக் கோரிக்­கைகள் எதுவும் புதிய அதி­கா­ரங்­களை கேட்ட கோரிக்­கைகள் அல்ல. மாறாக இலங்கை வாழ் அனைத்து இன மக்­களும் அனு­ப­விக்­கின்ற சம­மான அந்­தஸ்தை கோரு­கின்ற ஒரு நியா­ய­மான கோரிக்­கையே.

பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஓய்வு பெற்ற தமிழ் துறை பேரா­சி­ரியர் எம் ஏ நுஹ்மான் இது பற்றி குறிப்­பி­டு­கையில், இலங்கை வாழ் சகல இன மக்­க­ளுக்கும் ஏதோ ஒரு அடிப்­ப­டையில் பல பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. அதிலே மிகவும் மோச­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் இந்த மலை­யக மக்கள்.

அவர்­களில் பெரும்­பா­லானோர் இன்னும் தோட்­டங்­க­ளுக்­குள்­ளே­யேதான் வாழ்ந்து வரு­கின்­றார்கள். மேலும் கணி­ச­மான அளவு முஸ்­லிம்­களும் மலை­ய­கத்தில் வாழ்ந்து வரு­வ­தோடு அவர்கள் மலை­யக மக்கள் என அழைக்­கப்­ப­டு­வ­தில்லை. தோட்­டங்­க­ளிலே வேலை செய்­கின்ற இந்­திய வம்­சா­வளி தமிழ் மக்­களே மலை­யக மக்கள் என அழைக்­கப்­ப­டு­கின்­றனர். மழை­நாட்­டிலே வாழ்ந்து வரு­கின்ற சகல மக்­க­ளுக்கும் அவர்­க­ளு­டைய அடிப்­படை உரி­மை­களை பெற்றுக் கொடுப்­பதில் இலங்கை வாழ் சகல முஸ்­லிம்­க­ளுக்கும் மிகப்­பெ­ரிய ஒரு பொறுப்பும் கட­மையும் இருக்­கின்­றது. மலை­யக தொழிற்­சங்க இயக்­கத்தின் வர­லாற்றை எடுத்து நோக்­கினால் “அஸீஸ்” போன்ற முஸ்லிம் தலை­வர்கள் அம்­மக்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுத்­துள்­ளார்கள். இலங்கை முஸ்­லிம்­க­ளிடம் காணப்­ப­டு­கின்ற மிகப்­பெ­ரிய ஒரு பின்­தங்­கிய நிலைமை தான், முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்­சி­னை­க­ளுக்கு மாத்­திரம் குரல் கொடுப்­பது. சர்­வ­தேச ரீதி­யிலும் கூட முஸ்லிம் நாடு­களில் ஏதேனும் பிரச்­சி­னைகள் என்றால் மாத்­தி­ரமே இலங்கை வாழ் முஸ்­லிம்கள் அவற்­றுக்கு எதி­ராக கொதித்­தெ­ழு­வார்கள். ஏனைய சமூக மக்­க­ளுக்கு ஏதேனும் பிரச்­சி­னைகள் ஏற்­பட்டால் ஒன்­றுமே தெரி­யா­த­வர்கள் போல் இருப்­பார்கள். இது மிகவும் வேதனை அளிக்­கக்­கூ­டிய யதார்த்தம் எனக்­கூ­றினார். மேலும் அவர் கருத்து தெரி­விக்­கையில், 30 வருட உள்­நாட்டு சிவில் யுத்­தத்தின் போது கூட அதனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இலங்கை வாழ் முஸ்­லிம்கள் பெரி­தாக குரல் கொடுக்­க­வில்லை. மாறாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அநீ­திகள் இழைக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் மாத்­தி­ரமே அவர்கள் குரல் கொடுத்­தார்கள். நாம் எதிர்­பார்க்­கின்ற புதிய அர­சியல் கலாச்­சார மறு­ம­லர்ச்சி இந்­நாட்­டிலே ஏற்­பட வேண்­டு­மானால் இந்த நிலைமை முஸ்லிம் மக்­க­ளிடம் இருந்து மாற வேண்டும் என்­பதை பேரா­சி­ரியர் வலி­யு­றுத்­தினார்.

இன்­ற­ளவில் பெருந்­தோட்ட குடி­யி­ருப்­பு­களில் கிட்­டத்­தட்ட 5 லட்­சத்­துக்கும் அதி­க­மான மக்கள் வாழ்ந்து வரு­கின்­றார்கள். மேலும் அந்த சமு­தா­யத்தின் பெரும் பகு­தி­யினர் இன்று வரை மிக மோச­மான அடிப்­படை சுகா­தார வச­திகள் கூட இல்­லாத நிலையில் லயன்­க­ளி­லேயே தமது ஜீவி­யத்தை கழிக்­கி­றார்கள். சிசு இறப்பு, பிறப்பு, நிறை மற்றும் வளர்ச்­சி­யின்மை உள்­ளிட்ட பெரும்­பா­லான சுகா­தார மற்றும் போசாக்கு குறி­காட்­டிகள் தேசிய சரா­ச­ரி­க­ளுடன் ஒப்­பி­டும்­போது பாரிய பின்­ன­டைவை எடுத்­துக்­காட்­டு­கின்­றன. பெருந்­தோட்­டங்­களில் உள்ள சிறு­வர்கள் பல தசாப்­தங்­க­ளாக தேசிய கல்வி முறைக்கு வெளியே காணப்பட்டதுடன் தற்போது வரை முழுமையாக இந்நிலை மாற்றப்படாத ஒன்றாகவே உள்ளது. தோட்ட மக்களுக்கு சேவை வழங்கும் சுகாதார வசதிகள் தற்போது வரை தேசிய சுகாதார சேவைக்குள் கொண்டு வரப்படவில்லை. இம் மக்கள் பலருக்கும் இன்றுவரை முகவரி கூட இல்லை. இச்சமுதாயத்தின் உறுப்பினர்கள் இடையேயான வறுமை விகிதம் தேசிய சராசரியை விட கணிசமான அளவிற்கு அதிகமாக உள்ளது. இவர்கள் அனர்த்தங்களினால் மிகவும் பாதிக்கக்கூடிய நிலையில் உள்ளவர்களாக காணப்படுகின்ற போதும் அரசாங்கத்தின் அனர்த்த தயார் நிலை மற்றும் அனர்த்த கணிப்பு நடவடிக்கைகளில் குறைந்த அளவிலேயே ஒருங்கிணைக்கப்படுகின்றார்கள்.

தன்னிச்சையாக திருப்பி அனுப்பப்பட்டமை, திணிக்கப்பட்ட நாடற்ற நிலை, பிரஜா உரிமை பற்றிய நிச்சயமற்ற தன்மை மற்றும் வாக்குரிமை இல்லாமல் ஆக்கப்பட்டமை ஆகியன அம்மக்களுடைய கசப்பான வரலாறாக உள்ளது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்நாட்டின் சிறுபான்மை மக்களாகிய நாமும் அம்மக்களின் அந்த அடிப்படை உரிமை மீறல்களுக்கு துணை நின்றுள்ளோம். மலையக தமிழ் மக்களின் இன்றைய இந்த பின் தங்கிய வாழ்க்கை முறையானது வரலாற்றில் நம் நாட்டு தலைவர்கள் அவர்களுக்கு இழைத்த அநீதியின் நேரடி வெளிப்பாடே ஆகும். எமது கடந்தகால தலைவர்களும் முன்னோர்களும் விட்ட இந்த வரலாற்று தவறை நம் தலைமுறை சரி செய்ய வேண்டும். எந்தவொரு இன மத பேதமும் இன்றி நாம் அனைவருக்கும் இந்த சமூகப் பொறுப்பு காணப்படுகின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.