சவூதி அரேபிய மக்காவில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு

0 247

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
தீவி­ர­வாத குழுக்­களின் சிந்­த­னைகள், ஒழுங்­கீ­ன­மான அதன் போக்­குகள் என்­ப­ன­வற்றால் இஸ்­லாத்­துக்கு ஏற்­படும் பிரச்­சி­னைகள் என்­ப­ன­வற்றை எடுத்­து­ரைக்க வேண்டும். அவைகள் தங்கள் செயற்­பா­டு­களின் மூலம் பித்­னாக்­க­ளையும், பிள­வு­க­ளையும் தோற்­று­விக்­கின்­றன. சமூ­கங்­க­ளுக்­கி­டையில் பாது­காப்­பின்மை மற்றும் நிலை­யற்ற தன்­மை­யை­யுமே பரப்­பு­கின்­றன என்­பது தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்­பன உட்­பட 11 கோரிக்­கைகள் சவூதி அரே­பியா மக்­காவில் நடை பெற்ற இஸ்­லா­மிய சர்­வ­தேச மாநாட்டில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

இம்­மா­நாடு கடந்த 13,14 ஆம் திக­தி­களில் நடை­பெற்­றன. மாநாட்டில் உல­கெங்­கு­மி­ருந்து இலங்கை உட்­பட 85 நாடு­களின் 150 பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டி­ருந்­தனர். இதற்­கான அனு­ச­ர­னை­யினை சவூதி அரே­பியா அரசு வழங்­கி­யி­ருந்­தது.தொடர்­பாடல் முழுமை பெறல் எனும் தலைப்பில் இம்­மா­நாடு மக்­காவின் ஹரம்­ஷ­ரீ­புக்கு அருகில் நடை­பெற்­றது.

மாநாட்டில் ஏழு பிர­தான தலைப்­பு­களில் ஆய்வுத் தலைப்­புக்கள் உலகின் தலை சிறந்த உல­மாக்­களால் முன்­வைக்­கப்­பட்­டன. மார்க்க தீர்ப்­பா­யங்­களின் தலைமை முப்­திகள், மார்க்க அறி­ஞர்கள், சிரேஷ்ட ஆளு­மைகள் எனப் பலரும் இம்­மா­நாட்டில் கலந்து கொண்­டனர். இம்­மா­நாடு தொடர்ந்தும் எதிர்­வரும் காலங்­களில் நடாத்­தப்­ப­ட­வேண்டும் எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

மாநாட்டில் நிறை­வேற்­றப்­பட்ட ஏனைய கோரிக்­கை­க­ளா­வன உலக முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் கருத்­தொற்­றுமை, உடன்­பாடு என்­ப­வற்றை உறு­திப்­ப­டுத்தும் வகையில் இஸ்­லா­மிய விவ­கா­ரங்­களில் அறி­ஞர்கள், மார்க்கத் தீர்ப்­பா­யங்கள், இஸ்­லா­மிய விவ­காரத் திணைக்­க­ளங்கள் தொடர்ச்­சி­யான உற­வையும், அ-னு­ப­வப்­ப­கிர்­வையும் ஒத்­து­ழைப்­பு­க­ளையும் வழங்­க­வேண்டும்.
குர்­ஆ­னையும் ஸுன்­னா­வையும் பற்றிப் பிடிப்­பதே மார்க்­கத்தின் அடிப்­படை. அதில் வழி­கேடு நெறி­பி­றழ்­வு­க­ளி­லி­ருந்து பாது­காப்பு உள்­ளது என்­பதை மாநாடு உறு­திப்­ப­டுத்­து­கி­றது. பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்ள அவற்றை சரி­யான அடிப்­ப­டையில் விளங்கி அவை இரண்­டையும் பற்­றிப்­பி­டித்துக் கொள்­வது இன்­றி­ய­மை­யா­தது என்­பதை மாநாடு வலி­யு­றுத்­து­கி­றது.
பாடத்­திட்­டங்கள், கற்­பித்தல் முறைகள், மார்க்க உப நியா­சங்­களில் நடு­நிலை, நீதம் என்­ப­வற்றை மிக உயர்ந்த அடிப்­ப­டையில் பேணு­வது இஸ்­லா­மிய உலகின் அறி­ஞர்கள், மார்க்­கத்­தீர்ப்­பா­யங்கள், இஸ்­லா­மிய விவ­கார அமைச்­சுக்கள் மற்றும் திணைக்­க­ளங்­களின் பொறுப்­பாகும். பண்­பாட்டு சிதைவு, எல்லை மீறல், தீவி­ர­வாதம் என்­ப­வற்­றுக்கு எதி­ராக போரா­டுதல் மற்றும் திட்­ட­மி­டப்­பட்ட நிகழ்ச்சி நிரல் மூலம் இமாம்கள், கதீப்­களை தயார்ப்­ப­டுத்­து­வதின் ஊடாக இதை சாத்­தி­யப்­ப­டுத்­தலாம் என்­பதை இம்­மா­நாடு உறு­திப்­ப­டுத்­து­கின்­றது.

புனித குர்­ஆனின் பிர­தி­களை தொடர்ச்­சி­யாக எரித்து கோபத்தை ஊட்டும் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வதை இம்­மா­நாடு வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. நிச்­ச­ய­மாக இவ்­வா­றான படு­மோ­ச­மான செயற்­பா­டுகள் வெறுப்­பு­ணர்­வையும், காழ்ப்­பு­ணர்ச்­சி­யையும், இனப்­பா­கு­பாட்­டையும் தூண்­டு­வ­தாகும். அத்­தோடு மனித சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் இணைந்து வாழ்­வ­தற்­கான விழு­மி­யங்­க­ளுக்கும் முர­ணா­ன­தாகும் என இம்­மா­நாடு வலி­யு­றுத்­து­கி­றது.

இஸ்­லாத்­திற்­கா­கவும் முஸ்­லிம்­க­ளுக்­கா­கவும் சேவை செய்­வ­திலும் மார்க்க விவ­கார திணைக்­க­ளங்கள், மார்க்கத் தீர்ப்­பா­யங்கள், அறி­ஞர்­க­ளுக்கு மத்­தியில் தொடர்ச்­சி­யான உற­வைப்­பேணி அவர்­க­ளுக்­கி­டையில் முழு­மைத்­து­வத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக சவூதி அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்­டு­வரும் முயற்­சி­களை இம்­மா­நாடு பெரிதும் மதிக்­கி­றது.

நாஸ்­தீகம், பண்­பாட்டு சீர­ழிவு என்­பற்­றி­லி­ருந்து சமூ­கங்­களின் பாது­காப்பைக் கட்­டியம் கூறும் அடிப்­ப­டையில் குடும்­பத்தை பாது­காப்­பதும், இளம் தலை­மு­றை­யி­னரை முறை­யாக வளர்ப்­பதும் இன்­றி­ய­மை­யா­த­தாகும். முறை­யான பரி­காரம், பாது­காப்பு என்­ப­வற்றை இலக்­காகக் கொண்ட பல்­வேறு செயற்­திட்­டங்­களின் ஊடாக இவை மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

மார்க்க ஆதா­ரங்­க­ளுக்கு ஏற்ப அதன் அடிப்­ப­டை­யி­லேயே பத்­வாக்கள் வழங்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். குழப்­பங்­களைத் தவிர்த்து நன்­மை­களை அவை கொண்­டு­வர வேண்டும். பத்­வாக்கள் வழங்­கு­வ­தற்கு தகு­தி­யா­ன­வர்­க­ளி­ட­மி­ருந்தே பத்­வாக்கள் பெறப்­ப­ட­வேண்டும்.

சமூ­கங்­க­ளுக்­கி­டையில் சக­வாழ்வு, சகிப்­புத்­தன்­மையை வலுப்­ப­டுத்தல், கருத்து முரண்­பாடு மற்றும் பிரி­வி­னையை ஒழித்தல், இஸ்­லா­மிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்தல், இஸ்­லாத்­திற்­கா­கவும் முஸ்­லிம்­க­ளுக்­கா­கவும் சேவை செய்தல் என்­ப­வற்றில் அறி­ஞர்­க­ளாலும், பத்வா அமைப்­பு­க­ளாலும் இஸ்­லா­மிய விவ­கார அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்­க­ளாலும் செய்­யப்­பட்­டி­ருக்கும் முயற்­சி­களை மாநாடு பாராட்­டு­கி­றது.

இம்­மா­நாடு நடை­பெ­று­வ­தற்கு ஒப்­புதல் வழங்­கிய மன்னர் ஸல்மான், இள­வ­ரசர் பின் ஸல்மான் இரு­வ­ருக்கும் இம்­மா­நாடு நன்­றி­களைத் ளைத் தெரிவிக்கிறது எனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.