அம்பாறை மாவட்டத்தில் இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றங்கள்

0 525

ஏ.ஜே. காமில்

இலங்கை நாடா­னது தேசிய, மாகாண மற்றும் உள்ளூ­ராட்சி ஆகிய மூன்று ஆட்சி நிலை­களைக் கொண்டு ஓர் ஒற்றை ஆட்­சியை மேற்­கொண்டு வரு­கின்ற ஜன­நா­யக குடி­ய­ர­சாகும். இம்­மூன்று வகை­யான ஆட்சி 5முறையில் கீழ்­மட்­டத்­தி­லி­ருந்து இயங்கும் உள்ளூ­ராட்சி நிர்­வா­க­மா­னது பொது­மக்­களின் அன்­றாட செயற்­பா­டு­க­ளுடன் பல வகை­யிலும் தலை­யிடும் ஒரு நிர்­வா­க­மாக அமைந்­துள்­ளது.

உதா­ர­ண­மாக, ஒழுங்­கு­முறை, நிர்­வாக செயற்­பா­டுகள், பொதுச் சுகா­தாரம், சுற்­றுச்­சூழல் சுகா­தாரம், பொதுப் பாதைகள், வடி­கான்கள் நூலகம், மற்றும் பொதுப் பயன்­பாட்டு செயற்­பா­டு­களை உள்­ள­டக்­கிய மக்கள் பயன்­பெறும் சேவை­களை வழங்­கு­வது உள்ளூ­ராட்சி நிரு­வ­னங்­களின் பிர­தான கட­மை­யா­க­ளாக காணப்­ப­டு­கின்­றன. இதன் முக்­கி­யத்­து­வங்­களை கருத்தில் கொண்டு அர­சியல் அமைப்பின் 13 ஆவது திருத்­தத்தில் கூட உள்ளூராட்சி அதி­காரம் இணைக்­கப்­பட்­டுள்­ளது.

தேசிய நிரு­வாக நிலை­யினை அடுத்து, இரண்டாம் நிலை மாகாண அதி­கா­ரங்கள் 1987 ஆம் ஆண்டு மாகாண சபை சட்­டத்தின் மூலம் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றது. மேலும் மூன்றாம் நிலை உள்ளூ­ராட்சி சபை தொடர்­பான முக்­கிய சட்­டங்­க­ளான நகர சபை கட்­டளைச் சட்டம் 1939 ஆம் ஆண்டும், மாந­கர சபை சட்டம் 1947 ஆம் ஆண்டும் மற்றும் பிர­தேச சபை சட்டம் 1987 ஆண்டின் 15 ஆம் இலக்க சட்­டங்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.

அதி­கார பர­வ­லாக்கம் செய்­யப்­பட்ட அர­சாங்­கத்தின் நிர்­வாக அங்­கங்­களில் ஒன்­பது மாகாண சபை­க­ளுக்குள் உள்­ள­டக்­கி­ய­தாக எமது நாட்டில் தற்­போது வரை 24 மாந­கர சபை­களும், 41 நகர சபை­களும், மற்றும் 276 பிர­தேச சபை­களும், உள்­ள­டக்­கிய 341 உள்ளூ­ராட்சி சபைகள் இயங்கி வரு­கின்­றன.

அம்­பாறை மாவட்ட உள்ளூ­ராட்சி
மன்­றங்கள்
அந்த வகையில் 1961 ஆம் ஆண்டில் மட்­டக்­க­ளப்பு தென் பகு­தி­யி­லி­ருந்து பிரிக்­கப்­பட்டு அம்­பாறை மாவட்டம் உரு­வாக்­கப்­பட்­டது. இம்­மா­வட்டம் இலங்­கையில் ஏனைய மாவட்­டங்­க­ளுடன் ஒப்­பிடும் போது இன ரீதி­யா­கவும், மத ரீதி­யா­கவும் மிகவும் வேறு­பட்ட மாவட்­டங்­களில் ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது.
அம்­பாறை மாவட்­டத்தில் 802,252 நபர்­களும் அதில் 46 வீத­மானோர் முஸ்­லிம்­களும், 36 வீத­மானோர் பௌத்­தர்­களும், 17 வீத­மானோர் தமி­ழர்­களும் மற்றும் 1 வீத­மானோர் கிறிஸ்­த­வர்­களும் வாழு­கின்­றனர். (2021 ஆம் ஆண்டின் புள்ளி விப­ரத்தின் பிர­காரம்).

இம்­மா­வட்­டத்தில் 17 உள்ளூராட்சி மன்­றங்கள் செயற்­பட்டு வரும் நிலையில் இங்கு வாழும் மூவின மக்­களும் ஒற்­று­மை­யா­கவும், சக­வாழ்­வு­டனும் மற்றும் பாரம்­ப­ரிய கலை கலாச்­சார விழு­மி­யங்­களை பேணி சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான புரிந்­து­ணர்­வுடன் மிக நீண்ட கால­மாக வாழ்ந்து வரு­கின்­றனர். இந் நிலையில் சில அர­சியல் இலாப நோக்­கத்­திற்­காக சமூக ஒற்­றுமை கூறு­போ­டப்­பட்டு இம்­மா­வட்டம் பல்­வே­று­பட்ட முரண்­பா­டு­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது.
அம்­பாறை மாவட்­டத்தில் குறிப்­பாக சம்­மாந்­துறை, கல்­முனை மற்றும் நாவி­தன்­வெளி போன்ற உள்ளூராட்சி மன்­றங்­களில் இன­ரீ­தி­யான முன்­னெ­டுப்­புக்­களும், அர­சியல் ரீதி­யான நகர்­வு­களும் காணப்­ப­டு­கின்­றன. உதா­ர­ண­மாக கல்­முனை மாந­கர ஆட்சி முறை­மை­யினை பிரிப்­பது தொடர்­பான பிரச்­சினை மற்றும் சம்­மாந்­துறை, நாவி­தன்­வெளி பிர­தேச சபை­களின் வட்­டார பிரிப்பில் காணப்­படும் பிரச்­சி­னைகள் என இவ் உள்ளூராட்சி சபைகள் பல்­வேறு சவால்­களை எதிர் கொண்­டுள்­ளது.

இங்கு பல்­வேறு தரப்­பி­னரும் தத்­த­மது சாத­க­மான கார­ணங்­க­ளையும், கோரிக்­கை­க­ளையும் முன்­வைத்து வரு­கின்ற நிலையில் அர­சியல் கட்­சி­களின் சுய­நல போக்­குகள் மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட உள்ளூராட்சி சபை­களை திறன்­பட செயற்­ப­டுத்த முடி­யாத நிலைக்கு எதிர் கொண்­டுள்­ளது.

சம்­மாந்­துறை பிர­தேச சபை:
சம்­மாந்­துறை பிர­தேச சபை­யா­னது கடந்த 1946ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­களில் பட்­டினச் சபை­யா­கவும் அதனை அண்­டிய இரண்டு கிரா­மமும் (நாவி­தன்­வெளி, இறக்­காமம்) தனித்­தனி கிராம சபை­யா­கவும் இருந்த போது 1987 ஆம் ஆண்டின் உள்ளூ­ராட்சி அதி­கா­ர­சபை திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் அவ்­வி­ரண்டு கிராம சபை­களும் இணைந்து பிர­தேச சபை­யாக மாற்­றப்­பட்­டது. பின்னர் இணைக்­கப்­பட்ட அவ்­விரு கிராம சபை­களும், 2006ஆம் ஆண்டு நாவி­தன்­வெளி மற்றும் இறக்­காமம் 2010ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­களில் தனித்­தனி பிர­தேச சபை­யாக பிரிக்­கப்­பட்­டது.

மேலும் சம்­மாந்­துறை பிர­தேச சபை­யா­னது 22,097 குடும்­பங்­களை கொண்டு காணப்­ப­டு­கின்ற மிகவும் பழமை வாய்ந்த சபை­களில் ஒன்­றாகும். இங்கு வாழ்­கின்ற முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் பல்­வேறு வர­லாற்று கலா­சா­ரத்தை பேணு­கின்ற மக்­க­ளாக உள்­ளனர். இதன் பின்­ன­ணியில் 2013 ஆம் ஆண்டின் தேசிய உள்ளூ­ராட்சி எல்லை நிர்­ணய ஆணைக் குழுவின் தீர்­மா­னத்­தின்­படி 77,284 மக்கள் தொகை­யையும் அதில் (முஸ்­லிம்கள் 87 வீத­மா­னோரும் தமிழர்கள் 13 வீத­மா­னோரும்) 51 கிராம சேவகர் பிரி­வு­களைக் கொண்­ட­மைந்த சம்­மாந்­துறை பிர­தேச சபைக்கு 09 ஒற்றை அங்­கத்­தவர் தேர்தல் வட்­டா­ரமும் 01 மூன்று அங்­கத்­தவர் தேர்தல் வட்­டா­ர­மாக மொத்தம் பத்து வட்­டா­ரங்­களும் காணப்­ப­டு­கின்­றன. இதில் 12 தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­களும் 8 பட்­டியல் உறுப்­பி­னர்­க­ளு­மாக மொத்தம் 20 உறுப்­பி­னர்கள் பரிந்­து­ரைக்­கப்­பட்டு தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றார்கள். எனினும் 2022ஆம் ஆண்டின் புதிய எல்லை நிர்­ணய ஆணைக் குழு­விற்கு இச்­சபை வட்­டா­ரத்தின் உறுப்­பி­னர்­களை குறைப்­ப­தற்­கான சாத்­தி­யப்­பாடு அமை­யப்­பெ­ற­வில்லை.

இதில் சின்­னப்­பள்ளி, தைக்­காப்­பள்ளி, சம்­மாந்­துறை, விளி­னி­யடி, மலை­யடி மற்றும் மல்­கம்­பிட்டி போன்ற 06 வட்­டா­ரங்­களில் 99 வீத­மானோர் முஸ்­லிம்கள் கணி­ச­மாக வாழும் வட்­டா­ர­மாக காணப்­ப­டு­கின்­றது. அதனை அடுத்து 4ஆம் வட்­டா­ர­மான மட்­டக்­க­ளப்­புத்­த­ரவை எல்­லைக்குள் 88 வீத­மானோர் முஸ்லிம் தரப்­பி­னர்­களும் 12 வீத­மானோர் தமிழ் தரப்­பி­னர்­களும் வாழும் ஒரு வட்­டா­ர­மாகும்.

இதே போன்று, மீத­மாக இருக்­கின்ற மூன்று வட்­டா­ரங்­களில் மல்­வத்தை வட்­டார எல்­லைக்குள் 69 வீத­மானோர் தமிழ் தரப்­பி­னர்­களும் 31 வீத­மானோர் முஸ்லிம் தரப்­பி­னர்­களும் இணைந்து வாழ்­கின்ற வட்­டா­ர­மாகும். மேலும் 10ஆம் வட்­டா­ர­மா­கிய வளத்­தாப்­பிட்டி எல்­லைக்குள் 77 வீத­மானோர் தமிழர்களும் 23 வீத­மானோர் முஸ்­லிம்­களும் வாழ்­கின்ற வட்­டா­ர­மாக காண முடி­கின்­றது.

இறு­தி­யாக உள்ள மூன்று அங்­கத்­தவர் கொண்ட தேர்தல் வட்­டா­ர­மா­க­வுள்ள வீர­முனை 2ஆம் வட்­டா­ரத்தில் 77 வீத­மானோர் முஸ்லிம் தரப்­பி­னர்­களும் 23 வீத­மானோர் தமிழ் தரப்­பி­னர்­களும் வாழ்­கின்ற வட்­டா­ர­மாக காண முடி­கின்­றது.

03 அங்­கத்­தவர் கொண்ட வட்­டா­ரத்­தினை இல்­லாமல் செய்து அதற்குப் பக­ர­மாக மூன்று ஒற்றை அங்­கத்­தவர் கொண்ட வட்­டா­ரங்­க­ளாக மாற்­று­வ­தற்­கான ஆலோ­ச­னை 2022 ஆம் ஆண்டு புதிய எல்லை நிர்­ணய ஆணை குழு­விற்கு முன்­வைக்­கப்­பட்­டது. இதன்­படி 10 வட்­டா­ரங்கள் 12 வட்­டா­ரங்­க­ளாக அமையப் பெறு­வ­துடன், சனத்­தொகை விகி­தா­சா­ரத்­திற்கு ஏற்ப வட்­டா­ரங்­களை ஒதுக்­கீடு செய்யும் போது 13 வீதம் தமிழ்த் தரப்­பி­னர்க்கு 01 வட்­டா­ரமும் (1.43 வீதம்), 87 வீதம் முஸ்லிம் தரப்­பி­னருக்கு 11 வட்­டா­ரங்­களும் (10.54 வீதம்) அமையப் பெறும்.

எனினும் இவ்­விரு சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் நல்­லு­றவை பேணும் நோக்­குடன் தமிழ் தரப்­பி­னர்­க­ளுக்கு 02 வட்­டா­ரங்கள் ஒதுக்­கீடு செய்­யப்­பட முடியும் என இவ்­வாணைக்குழு­விற்கு சம்­மாந்­துறை பிர­தேச மக்கள் சார்பில் பல பொது அமைப்­புக்கள் மற்றும் அர­சி­யல்­வா­தி­களின் தரப்­பி­லி­ருந்து ஆலோ­சனை முன்­வைக்­கப்­பட்­டது.

ஆனால் இப்­பி­ர­தே­சத்தில் வாழும் பெரும்­பா­லான தமிழ் தரப்­பி­னர்­களும் மற்றும் முன்னாள் பிர­தேச சபையின் சில உறுப்­பி­னர்­களும் தற்­போது வரை நடை­மு­றை­யி­லுள்ள வட்­டார எல்­லை­க­ளையும் குறிப்­பாக மூன்று அங்­கத்­தவர் கொண்ட 2 ஆம் வட்­டா­ர­மா­கிய வீர­முனை வட்­டா­ரத்­தினை எவ்­வித மாற்றம் செய்­யாமல் நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு இவ் ஆணைக் குழு­விற்கு தமது பரிந்­து­ரை­களை பிர­தேச சபையின் ஊடாக சமர்ப்­பித்­துள்­ளார்கள்.

இந் நிலையில் தமிழ் தரப்­பினர் தமக்கு 12 வட்­டா­ரங்­களில் 03 வட்­டா­ரங்கள் ஒதுக்­கீடு செய்­யப்­பட வேண்டும் என்ற பரிந்­து­ரை­களை தொடர்ந்து சமர்ப்பித்த வண்­ணமே உள்­ளனர். இவ்­வா­றான இரு வேறு­பட்ட கருத்­தா­டல்கள் நீடித்த வண்­ணமே உள்­ளது.

நாவி­தன்­வெளி பிர­தேச சபை:
நாவி­தன்­வெளி, கல்­ஓயா திட்டம் மற்றும் 2004 ஆண்டு சுனாமி அனர்த்­தத்தின் பின்னர் பல்­வேறு கிரா­மங்­களில் இருந்து இடம்­பெ­யர்ந்த சமூ­கங்­களைக் கொண்­ட­தாக அறி­யப்­பட்ட ஒரு கிரா­ம­மாகும்.

நாவி­தன்­வெளி பிர­தேச சபை 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சம்­மாந்­துறை பிர­தேச சபையின் வடக்கு பகு­தி­யி­லி­ருந்து பிரித்து ஸ்தாபிக்­கப்­பட்­டது.
2013ஆம் ஆண்டு தேசிய எல்லை நிர்­ணய ஆணைக்குழுவின் தீர்­மா­னத்­தின்­படி 24,262 மக்கள் தொகை­யையும் (அதில் தமி­ழர்கள் 64.8 வீத­மா­னோரும், முஸ்­லிம்கள் 34.2 வீத­மா­னோரும், பௌத்­தர்கள் மற்றும் கிறிஸ்த­வர்கள் 1 வீத­மா­னோரும் காணப்­ப­டு­வ­தோடு) 20 கிராம சேவகர் பிரி­வு­களை கொண்­ட­மைந்த நாவி­தன்­வெளி பிர­தேச சபைக்கு 07 ஒற்றை அங்­கத்­தவர் கொண்ட தேர்தல் வட்­டா­ரத்தில் தெரிவு செய்­யப்­படும் 7 உறுப்­பி­னர்­களும் 5 பட்­டியல் உறுப்­பி­னர்­க­ளு­மாக மொத்தம் 13 உறுப்­பி­னர்கள் மாத்­தி­ரமே பரிந்­து­ரைக்­கப்­பட்டு பதிவு செய்­யப்­ப­டு­கின்­றார்கள்.

ஆனால், 2022ஆம் ஆண்டு புதிய எல்லை நிர்­ண­யான குழுவின் கட்­ட­ளையின் பிர­காரம் உள்ளூராட்சி சபை­களின் வட்­டார உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 50 வீத­மாக குறைத்து நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்ற நோக்­குடன் செயற்­பட்ட போது இப் பிர­தேச சபையின் வட்­டா­ரத்­தையும் மற்றும் உறுப்­பி­னர்­க­ளையும் குறைக்கும் நோக்­குடன் ஏழு வட்­டா­ரத்­தி­லி­ருந்து ஆறு வட்­டா­ர­மாக குறைத்து அமைத்­துள்­ளார்கள்.

இதன் பிர­காரம் அண்­ணா­மலை, அண்­ணா­மலை வடக்கு மற்றும் நாவி­தன்­வெளி ஆகிய இம் மூன்று வட்­டா­ரங்­க­ளிலும் 99 வீத­மானோர் தமி­ழர்கள் கணி­ச­மாக வாழும் வட்­டா­ரங்­க­ளாகும். இதனை அடுத்து, 6ஆம் வட்­டா­ர­மா­கிய சொறிக்­கல்­மு­னையில் முஸ்­லிம்கள் 16 வீத­மா­னோரும், 84 வீத­மானோர் தமி­ழர்கள் கணி­ச­மாக வாழும் வட்­டா­ர­மாக காணப்­ப­டு­கின்­றது.

அதே­போன்று சாலம்­பெக்­கனி 5ஆம் வட்­டா­ரத்தில் முஸ்­லிம்கள் 98.5 வீத­மா­னோரும், 1.5 வீத­மானோர் தமி­ழர்­களும் உள்ள நிலையில், 2ஆம் வட்­டா­ர­மா­கிய மத்­தி­ய­ மு­காமில் 88.6 வீத­மானோர் முஸ்­லிம்­களும் 10 வீத­மானோர் தமி­ழர்­களும் 1.4 வீத­மானோர் பௌத்­தர்­களும் இணைந்து வாழு­கின்ற இவ்­விரு வட்­டா­ரங்­களில் கிட்­டத்­தட்ட 90 வீத­மானோர் முஸ்­லிம்கள் கணி­ச­மாக வாழும் வட்­டா­ர­மாக காணப்­ப­டு­கின்­றது.

இப் புதிய எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழு­வினால் இறு­தி­யாக முன்­மொ­ழி­யப்­பட்ட வட்­டார பிரிப்பில் பெரும்­பா­லான முஸ்லிம் மற்றும் தமிழ் தரப்­பி­னர்கள் இதற்கு உடன்­பட்ட போதிலும், ஒரு சில தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்­பி­னர்கள் இவ் வட்­டார எல்­லை­களின் பெயர்கள் மற்றும் சில முஸ்லிம் கிராம சேவகர் பிரி­வுகள் தமிழ் வட்­டார பிரி­வு­க­ளோடு இணைத்து வட்­டா­ர­மாக பிரிக்­கப்­பட்­டதும் இரு சாரார்­க­ளுக்கு மத்­தியில் வேறு­பட்ட கருத்து முரண்­பா­டு­களை தோற்றுவித்துள்ளதை காண முடி­கின்­றது. தற்­போ­தைய எல்லை நிர்­ண­ய­மா­னது இங்கு வசிக்கும் இனங்­க­ளுக்­கி­டையில் ஒரு­மித்த ஒப்­பு­தலை பெறாத நிலையில் இங்கும் இப்­பி­ரச்­சினை­களை காணக் கூடி­ய­தாக உள்­ளது.

கல்­முனை மாந­கர சபை
கல்­முனை, கிழக்­கி­லங்­கை­யி­லுள்ள அம்­பாறை மாவட்­டத்தில் நெரிசல் மிகுந்த நகரப் பகு­தி­களில் ஒன்­றாகும். நாட்டில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக உள்ள சில மாந­க­ராட்­சி­களில் இதுவும் ஒன்­றாகும். அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள உள்ளூராட்சி மன்­றங்­களில் கல்­முனை மாந­கரம் முதன்­மை­யான சபை­யா­கவும் பண்­டைய நக­ரங்­களில் ஒன்­றா­கவும் கரு­தப்­ப­டு­கின்­றது. மேலும் கல்வி, வர்த்­தகம் மற்றும் போக்­கு­வ­ரத்­துக்­கான மைய­மா­கவும் திகழ்­கின்­றது.
கடந்த 1946ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­களில் கல்­முனை பட்­டிண சபை­யா­கவும் கல்­மு­னையை அண்­டிய மூன்று கிரா­மங்­களும் தனித்­தனி கிராம சபை­க­ளாக இருந்த போது 1987 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி அதி­கா­ர­சபை திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் அம்­மூன்று கிராம சபை­க­ளையும் இணைத்து ஒரு பிர­தேச சபை­யா­கவும், பின்னர் 1998ஆம் ஆண்டு நகர சபை­யா­கவும், 2002ஆம் ஆண்டு மாந­கர சபை­யா­கவும் தர­மு­யர்த்­தப்­பட்­டது.

2013 ஆம் ஆண்டின் தேசிய உள்ளூராட்சி எல்லை நிர்­ணய ஆணைக் குழுவின் தீர்­மா­னத்­தின்­படி, கல்­முனை மாந­கர சபை 122,203 மக்கள் தொகை­யையும் இதில் (முஸ்­லிம்கள் 74.32 வீத­மா­னோரும் தமி­ழர்கள் 25 வீத­மா­னோரும், கிறிஸ்­த­வர்­களும் பௌத்­தர்­களும் 0.68 வீத­மா­னோரும் உள்ள நிலையில்) 35,951 குடும்­பங்­க­ளுடன் 71 கிராம சேவகர் பிரி­வு­களைக் கொண்­ட­மைந்­துள்­ளது. இம்­மா­ந­கர சபைக்கு 22 ஒற்றை அங்­கத்­தவர் கொண்ட தேர்தல் வட்­டா­ரங்­களும் 01 இரட்டை அங்­கத்­தவர் கொண்ட தேர்தல் வட்­டா­ர­மாக மொத்தம் 23 வட்­டா­ரங்­களும், 24 தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளுடன் 16 பட்­டியல் உறுப்­பி­னர்­க­ளு­மாக மொத்தம் 40 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றார்கள்.

இதன் பிர­காரம் வட்­டார இலக்­க­மா­கிய 1ஆம், 6ஆம், 8ஆம், 9ஆம் மற்றும் 11ஆம் ஆகிய 5 வட்­டா­ரங்­க­ளிலும் கணி­ச­மாக தமி­ழர்கள் வாழ்­கின்­றார்கள். அதனைத் தொடர்ந்து இரட்டை உறுப்­பினர் கொண்ட 12ஆம் இலக்க வட்­டா­ரத்தில் 60 வீத­மானோர் தமி­ழர்­களும் 40 வீத­மானோர் முஸ்­லிம்­களும் வாழ்­கின்ற வட்­டா­ர­மாக பார்க்க முடி­கின்­றது. மீத­மாக உள்ள 17 வட்­டா­ரங்­களில் கணி­ச­மாக முஸ்­லிம்கள் வாழ்­கின்ற வட்­டா­ர­மாக திகழ்­கின்­றது.

ஆனால் 2022ஆம் ஆண்டு புதிய எல்லை நிர்­ணய ஆனைக் குழுவின் கட்­ட­ளையின் பிர­காரம் உள்ளூராட்சி சபை­களின் வட்­டார உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 50 வீத­மாக குறைத்து நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்ற நோக்­குடன் செயற்­பட்ட போது இந் நகர சபையின் வட்­டா­ரத்­தினை குறைப்­பது சாத்­தி­ய­மாக அமை­ய­வில்லை.

இரட்டை உறுப்­பி­னர்கள் கொண்ட 12ஆம் இலக்க வட்­டா­ரத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்­பி­னர்­க­ளுக்கு இடையில் ஒரு முரண்­பாட்டு நிலை காணப்­ப­டு­கின்­றது. அதா­வது தமிழ் தரப்­பி­ன­ர்கள் இரண்டு அங்­கத்­தவர் கொண்ட 12ஆம் இலக்க வட்­டா­ரத்­தினை தனித்­தனி வட்­டா­ர­மாக பிரிக்க வேண்டும் என்று பரிந்­துரை செய்­துள்­ளார்கள். மாறாக முஸ்லிம் தரப்­பி­னர்கள் இவ் வட்­டா­ரத்தில் கல்­மு­னை­யி­லுள்ள தலைமை வர்த்­தக தளங்­களும் போக்­கு­வ­ரத்து மற்றும் முக்­கிய அரச மற்றும் தனியார் காரி­யா­ல­யங்­களும் இருப்­ப­தனால் இதனை இரண்­டாகப் பிரிக்கும் போது முஸ்­லிம்­க­ளுக்கு பாத­க­மான விளை­வு­க­ளையும், இன ரீதி­யான முரண்­பா­டு­க­ளையும் தோற்­று­விக்கும் என்ற ஐயப்­பாட்­டிற்­காக இதனை இரட்டை உறுப்­பினர் கொண்ட வட்­டா­ர­மாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற கோரிக்­கை­யையும் இந்த ஆணைக்குழு­விற்கு பரிந்­துரை செய்­துள்­ளார்கள்.

இதே­வேளை 3 தமிழ் கிராம சேவகர் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய 9ஆம் இலக்க வட்­டார நிலப்­ப­ரப்பில் குறிப்­பாக விவ­சாய நிலப்­ப­ரப்­புக்கள் சாய்ந்­த­ம­ருது எல்லை வரை அமையப் பெற்­றி­ருப்­பது பாத­க­மான விளை­வுகள் எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டலாம் என்ற கார­ணத்­தினால், இந் நிலப்­ப­ரப்பை உரிய வட்­டார எல்­லை­க­ளுக்குள் உள்­வாங்க வேண்டும் என்ற ஒரு முன்­மொ­ழிவும் இப் புதிய ஆணைக்குழு­விற்கு பரிந்­துரை செய்யப்­பட்­டுள்­ளது.

அதே­ச­மயம், 1987 ஆம் ஆண்டு உள்ளூராட்சி அதி­கார சபை திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் கல்­முனை பட்­டிணச் சபை பிர­தேச சபை­யாக மாற்றம் பெற்ற போது அதன் தெற்கு எல்­லை­யாக காரை­தீவு, அம்­பாறை பிர­தான வீதியில் நடுப்­புள்ளி வழி­யாக மாவ­டிப்­பள்ளி வயல் காணி­களை உள்­ள­டக்­கி­ய­தாக எல்லை வரை­ப­டம் 1987.12.05 ஆம் திக­திய வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்ட போதிலும் காரை­தீவை தனிப் பிர­தேச சபை­யாக 2011ஆம் ஆண்டு உரு­வாக்கும் போது, இப்­பி­ர­தேச சபைக்கு வடக்கு எல்லையாக கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான மாளிகைக்காடு பிரதான வீதி தொடக்கம் அதன் நேர் கோடாக உள்ள விவசாய காணிகளையும் இணைத்து இச்சபை உருவாக்கப்பட்டது. இவ்வாறாக பல முரண்பாடுகள் கல்முனை மாநகர சபைக்குள் காணப்படுகின்றன. இந் நிலையில் சாய்ந்தமருது பிரதேச மக்கள் கல்முனை மாநகர சபையிலிருந்து விடுபட்டு தமக்கான தனியான உள்ளூராட்சி சபை ஒன்றினை மிக நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.

பரிந்துரை:
மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட இம்­மூன்று உள்ளூராட்சி சபை­க­ளு­டைய பிரச்­சி­னைகள் தனித்­த­னி­யாக ஆரா­யப்­ப­டு­வ­தோடு இவ் அர­சா­னது இரு­த­ரப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் ஆக்­கபூர்­வ­மான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு ஒரு சிறந்த தீர்­வினை பெற்றுக் கொடுப்­பதே சாமா­னிய மக்­களின் எதிர்­பார்ப்­பாகும். இந்த நிலையில் உள்ளூராட்சி சபையின் ஆட்சிக் காலம் முடிந்த நிலையில் அதனை உரிய நேரத்தில் நடாத்­தாமல் பிற்­போ­டு­வதும் மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட பிரச்­சி­னையை அதி­க­ரிப்­ப­தோடு, கீழ்­மட்ட ஜன­நா­யக ஆட்சி முறை­யினை மறுக்­கின்ற ஒரு போக்­கா­கவும் இது அமைந்து விடு­கின்­றது.

எனவே அர­சாங்­க­மா­னது இங்கு காணப்­ப­டு­கின்ற பிர­தான 2 பிரச்­சி­னை­க­ளான எல்லை மற்றும் வட்­டார நிர்­ணயம் போன்­ற­வற்­றினை சரி செய்­யப்­பட வேண்­டும். அத்­தோடு உரிய நேரத்தில் தேர்­தலை நடாத்தி பொது­மக்­களின் சக­வாழ்­வுக்கும் ஜன­நா­யக உரி­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கும் அரசு நட­வ­டிக்கை எடுப்­பது இன்­றி­ய­மை­யா­த­தாகும்.

எனவே இவ்­வாறு கிராம மட்­டங்­களில் புரை­யோடிக் கிடக்கும் சமூக, கலாச்­சார மற்றும் அர­சியல் ரீதி­யான விட­யங்கள் உரிய முறையில் தீர்க்­கப்­ப­டாத விடத்து நாட்டில் நாம் எதிர்பார்க்கும் சமாதானம் மற்றும் அபிவிருத்தி என்பன வெறும் கனவாகவே மாறிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.