தாஜுதீனின் கொலை பின்னணி குறித்து இப்போதாவது உண்மையை கூறுங்கள்

நீதியை பெற்றுக்கொடுக்காத மைத்திரி வெட்கப்பட வேண்டும் என சாடுகிறார் முஜிபுர்

0 234

(எம்.வை.எம்.சியாம்)
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி என்ற வகையில் வசீம் தாஜுதீன் கொலை விவ­கா­ரத்தில் நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யா­த­மை­யிட்டு மைத்­தி­ர­ிபால சிறி­சேன வெட்­கப்­பட வேண்டும். இவ்­வி­வ­கா­ரத்தை வைத்து மீண்டும் அர­சியல் நாட­கத்தை அரங்­கேற்ற வேண்டாம். கொலையின் பின்­ன­ணியில் உள்ள உண்­மை­களை இப்­போ­தா­வது கூறுங்கள். நீங்கள் கூற­வில்லை என்றால் நாங்கள் கூறுவோம் என ஐக்­கிய மக்கள் சக்­தியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.

நேற்­று­முன்­தினம் எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட முஜிபுர் ரஹ்மான், வசீம் தாஜுதீன் கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  வெளி­யிட்ட கருத்­துக்கு பதி­ல­ளிக்கும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,
தாஜுதீன் மரணம் தொடர்பில் மைத்­திரி இன்று வாயை திறந்­தி­ருக்­கிறார். 2015 ஆம் ஆண்­டுக்கு முன்­ன­தாக தாஜுதீன் கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் பல்­வேறு பிரச்­சி­னைகள் எழுந்­தன. இருப்­பினும் மைத்­திரி ஜனா­தி­ப­தி­யாக வெற்­றி­ய­டைந்த பின்னர் அவரின் உடல் மீண்டும் தோண்டி எடுக்­கப்­பட்­டது. பிரேத பரி­சோ­த­னை­யின்­போது இது விபத்து அல்ல எனவும் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­மை­யா­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும்  வைத்­திய அறிக்­கைகள் மூலம் வெளிக்­கொ­ண­ரப்­பட்­டன. இருப்­பினும் அதன் பின்னர் மரணம் தொடர்பில் பர­வ­லாக பேசப்­பட்­டது. பல உண்­மைகள் வெளி­யா­கின. இருப்­பினும் சாட்­சி­யங்கள் மறைக்­கப்­பட்­ட­துடன் சில­வற்றை நீதி­மன்­றத்­துக்கும் சமர்ப்­பிக்­க­வில்லை.

இது தொடர்பில் தாஜு­தீனின் தந்தை உட்­பட சட்­டத்­த­ர­ணிகள் மைத்­தி­ரியை சந்­தித்து ‘இந்த வழக்கு தொடர்­பி­லான சாட்­சி­யங்­களை சிலர் மறைப்­ப­தற்கு முயற்­சிக்­கின்­றனர். அதை வெளிப்­ப­டுத்த முடி­யா­துள்­ளது. இதன் கார­ண­மாக நீங்கள் இதில் தலை­யிட்டு தாஜு­தீனின் மர­ணத்­திற்கு நீதியை பெற்­றுத்­தர வேண்டும்’ என  கோரி­னார்கள். ‘தாஜு­தீனின் மரணம் விபத்து’ என மரண பரி­சோ­தனை அறிக்­கையை வழங்­கிய  நீதி­மன்ற வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­க­ரவை கைது செய்­தி­ருக்க முடியும். ஆனால் அவ்­வாறு அன்று செய்­ய­வில்லை.

இந்த கொலையின் பின்­ன­ணியில் அரச குடும்பம் இருக்­கி­றது என முன்னாள் ஜனா­தி­ப­திதான் கூறினார். அன்று அரச குடும்­பத்தில் இருந்­த­வர்­களை கைது செய்ய வேண்டாம் என கூறி­ய­வர்கள் யார் என்­பதும் முழு நாட்­டுக்கும் தெரியும். இந்த சம்­பவம் தொடர்­பாக வழக்கு விசா­ர­ணை­களின் கோப்­பு­களை எடுத்­துக்­கொண்டு உங்­க­ளு­டைய வீட்­டுக்கு வந்­தது யார்? யாரைக் காப்­பாற்­று­வ­தற்­காக எல்­லா­வற்­றையும் மூடி மறைக்க பார்க்­கி­றார்கள்?
தாஜுதீன் கொலையின் பின்­ன­ணயில் உள்ள விட­யங்­களை மைத்­திரி பத­வி­யி­லி­ருந்த போதே வெளிப்­ப­டுத்தி இருக்­கலாம்.

இருப்­பினும் உண்­மை­களை ஆராய்ந்து உரிய விசா­ர­ணை­களை மைத்­தி­ரியால் முன்­னெ­டுக்க முடி­யாமல் போனது. இன்று தாஜு­தீனின் மர­ணத்தை கொண்டு மைத்­திரி அர­சியல் நாட­கத்தை அரங்­கேற்­று­கிறார். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக இருந்த நீங்கள் அந்த அப்­பாவி குடும்­பத்­துக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனமையையிட்டு வெட்கப்பட வேண்டும். இப்போதாவது கூறுங்கள். நீங்கள் கூறவில்லை என்றால் நாங்கள் உண்மையை கூறுவோம். என்ன நடந்தது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். தெரிந்தவற்றை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். வீணான பாவங்களை சுமக்க வேண்டாம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.