குர்ஆன் மத்ரஸாக்களின் கட்டமைப்பையும் பாடத்திட்டத்தையும் ஒழுங்குபடுத்த திட்டம்

திணைக்களத்தால் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

0 169

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்டு இயங்­கி­வரும் குர்ஆன் மத்­ர­ஸாக்­களின் கட்­ட­மைப்பு மற்றும் பாடத்­திட்டம் என்­பன மீள் ஒழுங்­குப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான நட­வ­டிக்­கை­களை திணைக்­களம் முன்­னெ­டுத்­துள்­ளது.

குர்ஆன் மத்­ர­ஸாக்­க­ளுக்­கான பொது­வான பாடத்­திட்டம் அதற்­கான வழி­காட்­டல்கள் விரைவில் தேசிய ரீதியில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்த ஒழுங்கு திட்டம் தொடர்­பான முழு­மை­யான வழி­காட்­டல்கள் பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யா­ளர்கள், பொறுப்­பா­ளர்கள் மற்றும் அல்­குர்ஆன் அதி­பர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

திணைக்­களம் மேற்­கொள்­ள­வுள்ள குர்ஆன் மத்­ரஸா மீள் ஒழுங்­கு­ப­டுத்தும் திட்­டங்கள் மற்றும் அது தொடர்­பான வேலைத்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு தயார் நிலையில் இருக்­கு­மாறு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளார்கள்.

அத்­தோடு அல்­குர்ஆன் மத்­ர­ஸாவின் பெயர் மற்றும் முக­வரி, பதி­வி­லக்கம், நிர்­வாக அமைப்பு மாண­வர்கள் மற்றும் ஆசி­ரி­யர்கள் விபரம், மாவட்டம், தொலை­பேசி இலக்கம் போன்ற விப­ரங்­களை திணைக்­க­ளத்தின் கள உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு வழங்குமாறும் அல்லது திணைக்களத்துக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறும் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.எஸ்.அலா அஹமத் கோரியுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.