முகவர்களுக்கு எதிராக 13 முறைப்பாடுகள்

0 198

(ஏ.ஆர்.ஏ.பரீல், றிப்தி அலி)
இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொண்ட யாத்­தி­ரி­கர்­க­ளி­ட­மி­ருந்து தாம் பய­ணித்த ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ராக 13 முறைப்­பா­டுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.
ஹஜ் முக­வர்கள் உறு­தி­ய­ளித்­த­படி சவூதியில் தங்­கு­மிட வச­தி­களை வழங்­காமை, மற்றும் அடிப்­படை வாதி­களை உரிய முறையில் வழங்­காமை, மினாவில் கூடார வச­திகள் உரிய முறையில் வழங்­கப்­ப­டாமை போன்ற குற்­றச்­சாட்­டுக்கள் முக­வர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரையில் ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ரான முறைப்­பா­டுகள், மற்றும் ஆலோ­ச­னைகள் இருப்பின் அவற்றை அனுப்பி வைக்­கு­மாறு முஸ்லிம் சமய  பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் விளம்­பரம் செய்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

‘ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ராக கிடைக்கப் பெற்­றுள்ள முறைப்­பா­டுகள் ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் ஒருவர் தலை­மை­யி­லான சுயா­தீன குழு­வொன்­றினால் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. விசா­ர­ணையின் பின் குற்­றச்­சாட்­டுக்கள் நிரூ­பிக்­கப்­பட்டால் சம்­பந்­தப்­பட்ட ஹஜ் முக­வர்­க­ளுக்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். முக­வர்­களின் அனு­ம­திப்­பத்­திரம் தற்­கா­லி­க­மாக தடை செய்­யப்­படும் அல்­லது அனுமதிப்பத்திரம் முற்றாக இரத்துச் செய்யப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.