நிலைப்பாட்டில் மாற்றமில்லை

முஸ்லிம் கவுன்சில் திட்டவட்டம்

0 234

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை தயா­ரித்து நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­வுக்கு கைய­ளிக்­க­வுள்ள அறிக்­கைக்கு அனு­ம­தி­ய­ளிப்­ப­தில்லை என்ற நிலைப்­பாட்டில் எவ்­வித மாற்­ற­மு­மில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தெரி­வித்­துள்­ளது.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் தொடர்பில் முஸ்லிம் சிவில் அமைப்­புகள் சார்பில் உல­மா­சபை நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­வுக்கு கைய­ளிக்­கப்­ப­ட­வுள்ள முன்­மொ­ழிவை தாம் நிரா­க­ரிப்­ப­தாக ஏற்­க­னவே ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தெரி­வித்­தி­ருந்­தது. இந்­நி­லையில் இது தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸில் தெளி­வு­ப­டுத்­த­வேண்டும் என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை கோரி­யிருந்­த­து.

இந்­நி­லையில் இவ்­வி­வ­காரம் தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை பிர­தி­நி­தி­க­ளுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் கொழும்பில் உலமா சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் இடம் பெற்­றது. நேற்று முன்­தினம் மாலை இடம் பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது ‘ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தனது நிலைப்­பாட்டில் எவ்­வித மாற்­ற­மு­மில்லை எனத் தெரி­வித்­த­துடன் ‘முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் சுமு­க­மான தீர்­வு­க­ளுக்கு முஸ்லிம் கவுன்ஸில் பூரண ஒத்­து­ழைப்பு வழங்கும் எனத் தெரி­வித்­தது என முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம். அமீன் தெரி­வித்தார்.

இந்தச் சர்ச்சை தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலும் இணைந்து கூட்டறிக்கையொன்றினை வெளியிடத் தீர்மானித்துள்ளன.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.