அக்குரணை குண்டு தாக்குதல் புரளியின் மர்மம் குறித்து மக்களுக்கு தெளிவூட்டுக

மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை

0 216

கடந்த ஏப்ரல் மாதம் நோன்பு பெரு­நாளை அண்­மித்த காலப்­ப­கு­தியில் அக்­குர­ணை­யிலும் நாட்டின் ஏனைய பகு­தி­க­ளிலும் குண்டு தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­ப­டலாம் என்று ஊட­கங்­களில் பரப்­பப்­பட்ட புரளி தொடர்பில்  உரிய விசா­ரணை மேற்­கொண்டு, அதன் உண்மைத் தன்­மையை நாட்­டுக்கும், பொது­மக்­க­ளுக்கும் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

பொது­மக்கள் பாது­காப்பு விவ­கா­ரத்­துக்­கான அமைச்சின் பாரா­ளு­மன்ற ஆலோ­சனை குழுக் கூட்­டத்­தின்­போதே அவர் மேற்­படி வேண்­டு­கோளை பிரே­ர­ணை­யாகச் சமர்ப்­பித்­துள்ளார்.

குறித்த பிரே­ர­ணையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத்தில் 22 ஆம் திகதி அல்­லது அண்­மித்த நாளொன்றில் அக்­கு­ரணை மற்றும் நாட்டின் ஏனைய பகு­தி­களில் குண்டு தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­ப­டலாம் என்ற தகவல் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் அவ­சர தொடர்பு இலக்­க­மான 118 க்குக் கிடைக்­கப்­பெற்­றதன் நிமித்தம் பொலிஸ்மா அதி­பரின் உத்­த­ர­வின்­படி நாடெங்கும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.
ஆனால், குறிப்­பிட்­ட­படி நாட்டின் எந்தப் பிர­தே­சத்­திலும் அவ்­வா­றான தாக்­கு­தல்கள் எவையும் இடம்­பெ­ற­வில்லை. அதைத்­தொ­டர்ந்து தகவல் வழங்­கிய நபர் சம்­பந்­த­மாக விசா­ர­ணைகள் நடத்த இர­க­சிய பொலி­சா­ருக்கு பொலிஸ்மா அதிபர் கட்­ட­ளை­யிட்­டதன் பிர­காரம் சாஜித் மௌலவி என்­பவர் கைது செய்­யப்­பட்­ட­தோடு,முக்­கிய சந்­தேக நப­ரா­கவும் அவர் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டார்.

“சிறிய முத­லீடு ஒன்­றினால் அதி­க­பட்ச இலாபம் அடையும் வழி ” என்ற தலைப்பில் வலை­யத்­த­ள­மொன்றைப் பயன்­ப­டுத்தி முக­நூலில் இயங்கும் திட்­ட­மிடப்பட்ட ஒரு கும்­பலின் வேண்­டுகோள் பிர­கா­ரமே மேற்­படி குண்டுத் தாக்­குதல் சம்­பந்­த­மான தக­வலை 118 ஆம் இலக்­கத்­துக்கு தொலை­பேசி ஊடாக வழங்­கி­ய­தா­கவும், அதற்கு கார­ண­மா­கிய விடயம் பூகொடை, தண்­டா­வெளி, புறக்­கோட்டை, கொட்­டாவ ஆகிய பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளை­க­ளிலும், அழுத்­கம மக்கள் வங்கி கிளை­யிலும் மேற்­படி முத­லீட்­டுக்­கான பல இலட்சம் ரூபாய் பணம் வைப்பில் இடப்­பட்­ட­தா­கவும் , பின்னர் அந்த கும்­பலின் வங்கி அட்­டையும் போலி­யா­ன­தென தெரிய வந்­ததால் தன்னால் வைப்பில் இடப்­பட்ட பணத்தை மீட்டு தரு­மாறு கோரிய போது, பணத்தை மீட்டு தர வேண்­டு­மாயின், பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் 118 ஆம் இலக்­கத்­துக்கு பிரஸ்­தாப குண்டுத் தாக்­குதல் சம்­பந்­த­மான தக­வலைத் தெரி­விக்க வேண்டும் என்­ப­தாக கூறி­ய­தா­கவும், அவ்­வாறு செய்­யு­மாறு தன்னைத் தூண்­டி­ய­தா­கவும் மேற்­படி சந்­தேக நபர் குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தின் விசா­ர­ணையின் போது வாக்­கு­மூலம் வழங்­கி­ய­தாகத் தெரிய வரு­கின்­றது.

அவ­சரத் தொலைத்­தொ­டர்பு நிலை­யத்­திற்கு குறித்த தக­வலை வழங்கும் படி தலை­யீடு செய்த தனியார் வங்கிக் கிளை­களின் மற்றும் அழுத்­கம மக்கள் வங்கி கிளையின் கணக்கு உரி­மை­யா­ளர்கள் பற்றி எவ்­வித விசா­ர­ணை­களும் இன்றி, மேற்­படி தகவல் வழங்­கிய நப­ருக்கு எதி­ராக மாத்­திரம் வெவ்­வேறு சட்­டங்­களின் பிர­காரம் பல­த­ரப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களைச் சுமத்தி,நட­வ­டிக்கை மேற்­கொள்ள வழி­கோ­லிய காரணம் என்ன?

அவ­சர தொலைத்­தொ­டர்பு நிலை­யத்­துக்கு குண்டு தாக்­குதல் சம்­பந்­த­மான தகவல் கிடைக்­கப்­பெற்ற நாளிலும்,அதனை அண்­மித்த நாட்­க­ளிலும் இது விட­ய­மாக ஊட­கங்­களின் பிர­சா­ரத்­தினால் பொது­மக்கள் மத்­தியில் ஏற்­பட்ட அச்சம் பார­தூ­ர­மா­னது.

ஒருவர் மூலம் இலக்கம் 118 க்குத் தக­வலை வழங்க வைத்து, இது சம்­பந்­த­மான ஊடகப் பிர­சா­ரத்தின் ஊடாக விஷமச் செயல்­பாட்டு கும்பல் எதிர்­பார்த்த விடயம் என்ன என்­பது பற்றி விசா­ரணை நடத்தி, இந்த பாரா­ளு­மன்ற குழு­வுக்கு அறிக்கை சமர்ப்­பித்­தலும் மேலும் இது விடயமாக உண்மை தன்மையை நாட்டுக்கும்,பொது மக்களுக்கும் தெளிவுபடுத்தலும் அவசியமாகும்.
மேலும் குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக நடுநிலையான,பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு ,குறிப்பிட்டுள்ள வங்கி வைப்பாளர்கள் உட்பட பொறுப்புக் கூற வேண்டி நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.