இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா 88 முகவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

0 30

(றிப்தி அலி)
சவூதி அரே­பி­யா­வினால் இலங்­கைக்கு வழங்­கப்­பட்ட 3,500 ஹஜ் கோட்­டாக்கள் 88 ஹஜ் முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

2023 ஹஜ் யாத்­தி­ரைக்கு பின்னர் கிடைக்கப் பெற்ற முறைப்­பா­டுகள் மற்றும் நேர்­மூகப் பரீட்சை பெறு­பேறு ஆகி­ய­வற்­றினை அடிப்­ப­டை­யாகக் கொண்டே இந்த 3,500 ஹஜ் கோட்­டாக்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக திணைக்­களம் தெரி­விக்­கின்­றது.

இதில் ஆகக்­கூ­டிய 96 புள்­ளிக்­களைப் பெற்ற ஹஜ் முகவர் நிறு­வ­னங்களுக்கு 75 கோட்­டாக்­களும் ஆகக் குறைந்த 52 புள்­ளி­களைப் பெற்ற ஹஜ் முகவர் நிறு­வ­னத்­திற்கு 15 ஹஜ் கோட்­டாக்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை, முதல் ஆறு அதி­கூ­டிய புள்­ளி­களைப் பெற்ற ஹஜ் முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கு 75 ஹஜ் கோட்­டாக்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஏனைய ஹஜ் முக­வர்கள் பெற்­றுக்­கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் ஹஜ் கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.