கிழக்கு ஆளுநரும் முஸ்லிம் தரப்பும் தேவை புரிந்துணர்வு

0 388

கிழக்கு மாகாண ஆளு­ந­ராக இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் செந்தில் தொண்­டமான் கடந்த மே மாதம் நிய­மிக்­கப்­பட்டார். இத­னை­ய­டுத்து புதிய ஆளுநர் மாகா­ணத்தின் பல்­வேறு பகு­தி­க­ளுக்கும் விஜயம் செய்து வரு­வ­துடன் அபி­வி­ருத்திப் பணி­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கிறார். மக்­களின் பிரச்­சி­னை­களைக் கேட்­ட­றிந்து தீர்வு வழங்­குதல், புதிய நிய­ம­னங்­களை வழங்­குதல், அர­சி­யல்­வா­திகள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­தித்து உற­வினை வலுப்­ப­டுத்­துதல் என அவ­ரது அன்­றாட வேலைத்­திட்­டங்கள் தொடர்ந்து வரு­கின்­றன.

இந்­நி­லையில் ஆளு­ந­ருக்கும் மாகா­ணத்­தி­லுள்ள முஸ்லிம் அமைச்சர் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கு­மி­டையில் அவ்­வப்­போது கருத்து முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­வ­தையும் அவை ஊட­கங்­களில் பேசு­பொ­ரு­ளா­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

குறிப்­பாக மத்­திய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்கும் சுற்­றா­டல்­துறை அமைச்சர் நஸீர் அகமட், ஆளு­நரை வெளிப்­ப­டை­யா­கவே விமர்­சித்து வரு­கிறார். சில வாரங்­க­ளுக்கு முன்னர் காத்­தான்­குடி பிர­தேச செய­ல­கத்தில் இடம்­பெற்ற பிர­தேச அபி­வி­ருத்திக் குழுக் கூட்­டத்தில் கலந்து கொண்ட அவர், ஆளுநர் செந்தில் தொண்­ட­மானை கடு­மை­யான வார்த்­தை­களைப் பயன்­ப­டுத்தி விமர்­சித்­தி­ருந்தார். அமைச்­சரின் இந்தக் கருத்தை பலரும் கண்­டித்­தி­ருந்­தனர்.

அதே­போன்று நேற்று முன்­தினம் மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­ல­கத்தில் இடம்­பெற்ற மாவட்ட அபி­வி­ருத்திக் குழுக் கூட்­டத்­திலும் அமைச்சர் நஸீர் அக­மட்டும் ஆளுநர் செந்தில் தொண்­ட­மானும் கலந்து கொண்­டி­ருந்­தனர். இதன்­போது அர­சாங்க அதி­கா­ரி­க­ளிடம் அமைச்சர் நஸீர் அகமட் கடுந்­தொ­னியில் நடந்து கொண்­ட­போது ஆளுநர் தலை­யிட்டு, அதி­கா­ரி­க­ளுக்கு கால அவ­காசம் வழங்­கு­மாறு கோரி­யி­ருந்தார்.

இத­னி­டையே, கிழக்கு மாகாண ஆளுநர் தனது அதி­கா­ரத்­திற்­குட்­பட்டு வழங்கும் உயர் அரச பத­வி­க­ளுக்­கான நிய­ம­னங்­களில் முஸ்­லிம்கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தாக பல்­வேறு தரப்­பு­களும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். குறிப்­பாக திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் இது குறித்து ஊடக அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டி­ருந்தார். அதில் புதிய ஆளுநர் முஸ்­லிம்­களைப் புறக்­க­ணிப்­ப­தாக சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். எனினும் இதற்கு பதி­ல­ளித்­துள்ள ஆளு­நரின் செய­லாளர், இது­வரை உயர்­ப­த­வி­க­ளுக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­களின் பெயர் விப­ரங்­களைக் குறிப்­பிட்டு இம்­ரானின் குற்­றச்­சாட்­டுக்கள் உண்­மைக்குப் புறம்­பா­னவை என பதி­ல­ளித்­துள்ளார்.

இவ்­வாறு ஆளு­ந­ருடன் ஓரிரு முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் முரண்­பட்டுக் கொண்­டி­ருக்­கையில், முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சாஹிர் மௌலானா ஆகியோர் ஆளு­நரைச் சந்­தித்து தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் சில விவ­கா­ரங்­க­ளுக்கு சுமுக தீர்வு காண்­பது குறித்தும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். அதே­போன்று அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஷர்ரப் முது­நபீன், கிழக்கு மாகாண ஆளு­ந­ருடன் நெருக்­க­மான உறவைக் கொண்­டி­ருப்­ப­துடன் அவர் மூல­மாக அரச நிய­ம­னங்­களை வழங்­குதல், மக்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுத்தல் என காய்­களை நகர்த்தி வரு­கிறார்.

கிழக்கு மாகாண ஆளுநர் மலை­யக மற்றும் தமிழ் சமூ­கத்தைப் பிர­தி­நி­தி­தித்­து­வப்­ப­டுத்­து­பவர் என்ற வகையில் அவரும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் முரண்­பட்டுக் கொள்­வ­தா­னது இரு சமூ­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவில் பாதிப்­பு­களைக் கொண்டு வரும் என்ற யதார்த்­தத்தை நாம் விளங்கிக் கொள்­வது அவ­சி­ய­மாகும்.

கிழக்கில் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் விட்டுக் கொடுப்­புடன் இணைந்து வாழ்­வதன் மூலமே அங்கு திட்­ட­மிட்டு முன்­னெ­டுக்­கப்­படும் சிங்­க­ள­ம­ய­மாக்­க­லி­லி­ருந்து மாகா­ணத்தைப் பாது­காக்க முடியும். மாறாக இரு தரப்பும் முரண்பட்டுச் செல்வதானது, அல்லது அதிகார ரீதியாக மோதிக் கொள்வதானது இரு சமூகங்களுக்கும் ஆரோக்கியமற்ற விளைவுகளையே கொண்டு வரும்.

எனவே கிழக்கு மாகாண ஆளுநரும் மேற்படி அரசியல்வாதிகளும் அரசியல் ரீதியான முரண்பாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மத்திய அரசாங்கம் ஊடாகவும் மாகாண ஆளுநர் ஊடாகவும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். அதே போன்று நியமனங்களில் இன ரீதியான கண்ணோட்டத்தை விட சேவை மூப்பு மற்றும் தகுதி ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் தேவையற்ற விமர்சனங்களுக்கு வித்திடாது அரச நிர்வாகத்தை முன்னெடுக்கலாம். இவை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.