ஹஜ் 2023; யாத்திரிகர்களின் முறைப்பாடுகள், ஆலோசனைகளை ஆகஸ்ட் 10 க்கு முன்பு அனுப்பலாம்

0 192

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்­வ­ருடம் (2023) முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்ட ஹஜ் முகவர் நிலை­யங்கள் ஊடாக ஹஜ் யாத்­திரை மேற்­கொண்ட யாத்­தி­ரி­கர்கள் முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ரான முறைப்­பா­டுகள் மற்றும் ஆலோ­ச­னைகள், கருத்­து­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திக­திக்கு முன்பு அனுப்பி வைக்க முடியும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முறைப்­பா­டுகள் மற்றும் ஆலோ­ச­னைகள் தகுந்த ஆதா­ரங்­க­ளுடன் திணைக்­க­ளத்­துக்கு எழுத்து மூலம் பதி­வுத்­த­பாலில் அல்­லது திணைக்­க­ளத்தின் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்க முடியும் என திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட். ஏ.எம்.பைசல் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

ஏற்­க­னவே சில முறைப்­பா­டுகள் திணைக்­க­ளத்­துக்கு கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் கிடைக்­கப்­பெறும் முறைப்­பா­டுகள் கடந்த வரு­டங்­களில் போன்று சுயா­தீன விசா­ர­ணைக்­கு­ழு­வொன்றின் மூலம் விசா­ர­ணைக்­கு எ­டுத்­துக்­கொள்­ளப்­ப­டு­மெ­னவும் அவர் தெரி­வித்தார்.

ஹஜ் முக­வர்­க­ளுக்­கெ­தி­ரான முறைப்­பா­டுகள் நிரூ­பிக்­கப்­பட்டால் ஹஜ் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படுதல் உட்பட பல தண்டனைகள் விதிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.