ஒரு தனி நாடு உருவாவதே தீர்வு

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ ஹலீம்

0 757

எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்

பலஸ்­தீன மக்­க­ளுக்கு முழு­மை­யான சுய நிர்­ணய உரிமை உண்டு. அவர்­களின் சுதந்­திரம் கட்­டா­ய­மாக பேணப்­பட வேண்டும். அத்­துடன், இந்தப் பிரச்­சி­னைக்கு மிகச் சிறந்த தீர்­வாக அமையக் கூடி­யது இரு நாட்டுத் தீர்­வாகும். குறிப்­பாக, பலஸ்­தீன மக்­க­ளுக்கு கிழக்கு ஜெரூ­ச­லத்தை மைய­மாகக் கொண்ட ஒரு தனி நாடு உரு­வா­வதே இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமையும் என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், பலஸ்­தீன பிரச்­சி­னையை இலங்கை அர­சாங்கம் ஏன் ஆத­ரிக்க வேண்டும் என்­கி­ற­போது, நாங்கள் மிகப் பெரிய பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு ஆளாகி இருக்­கிறோம். இந்த நேரத்­திலும் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் நாம் நீதியின் பக்கம் நிற்க வேண்டும்.

அத்­தோடு, கடந்­த­கா­லங்­களில் இஸ்­லா­மிய நாடு­களின் வெறுப்பை நாம் சம்­பா­தித்­தி­ருக்­கிறோம். தற்­போது பொரு­ளா­தார நெருக்­க­டி­மிக்க கால­கட்­டத்தில், அரபு இஸ்­லா­மிய நாடு­களின் நன்­மதிப்பை பெற்­றுக்­கொள்­வது அவ­சி­ய­மா­ன­தாகும்.

இதனால், இலங்கை பொரு­ளா­தா­ரத்தில் பல வகையில் தாக்­கத்தை செலுத்தும். அரபு நாடு­க­ளு­ட­னான உறவு மேம்­படும். அதேபோல், அர­பு­ நா­டு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு வரும் உல்­லாசப் பய­ணி­களின் வருகை அதி­க­ரிக்கும். அரபு இஸ்­லா­மிய நாடு­களின் உத­வி­க­ளையும் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்­காக பெற்­றுக்­கொள்ள முடியும்.

பலஸ்­தீ­னத்­திற்கு சக­ல­ வி­தத்­திலும் ஒத்­தாசை புரிந்து எமது இரா­ஜ­தந்­திர ஆத­ரவை அவர்­க­ளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதையும் இந்த விடயத்தில் அரசாங்கம் கூடுதலான கரிசனை காட்ட வேண்டும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.