இஸ்ரேலுக்கு அழுத்தங்களை வழங்க சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்

0 83

எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்

சர்­வ­தேச நாடுகள் இஸ்­ரேலின் இந்த வன்­மு­றை­களை சகித்துக் கொண்டு அத­னுடன் தொடர்ச்­சி­யாக தேனி­லவு கொண்­டாடி வரு­கின்­றன. இந்­நிலை மாற வேண்டும். இஸ்­ரே­லுக்கு அழுத்­தங்­களை வழங்க முன்­வர வேண்டும் என திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் தெரி­வித்தார்.

வர் மேலும் உரை­யாற்­று­கையில், உலக நாடுகள் அனைத்தும் இஸ்­ரேலின் இந்த காட்­டு­மி­ராண்­டித்­த­னத்­துக்கு எதி­ராக கிளர்ந்­தெழ வேண்டும். எவ்­வாறு தீவி­ர­வாத இயக்­கங்­களை தடை செய்து அவற்­றுக்கு எதி­ராக ஒன்­றி­ணைந்து போரா­டு­கின்­ற­னவோ அதே­போன்று மனித குலத்­துக்கு எதி­ரான தீவி­ர­வா­தத்தில் கடந்த ஆறு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக ஈடு­பட்டு வரும் இஸ்­ரே­லுக்கு எதி­ரா­கவும் ஒன்­று­பட வேண்டும்.

பலஸ்­தீன மக்கள் மீதான ஆக்­கி­ர­மிப்­புகள் முடி­வுக்கு வரவும் அம்­மக்கள் நிம்­ம­தி­யுடன் வாழ்­வ­தற்­கான சூழல் பிறக்­கவும் குரல் கொடுக்க வேண்டியதும் சக தேசங்களில் வாழும் மக்கள் ஒவ்வொருவரதும் கடப்பாடாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.