கோத்தாவின் வழியில் ஜனாதிபதி ரணிலும் கிழக்கு முஸ்லிம்களை புறக்கணிக்கிறார்

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அதிருப்தி

0 148

(ஏ.எஸ்.பரூஸ்)
முன்னாள் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் வழியில் தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவும் கிழக்கு மாகாண முஸ்­லிம்­களைப் புறக்­க­ணித்து வரு­கின்றார் என திரு­கோ­ண­மலை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் தெரி­வித்­துள்ளார்.

திரு­கோ­ண­ம­லையில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லொன்­றின்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில், இலங்­கையில் கிழக்கு மகா­ணத்தில் தான் முஸ்­லிம்கள் அதி­க­மாக வாழ்­கின்­றனர். இந்­நி­லையில் கோத்­தா­பய ரா­ஜபக்ஷ­வினால் நிய­மிக்­கப்­பட்ட ஆளுநர் இம்­மா­காண முஸ்­லிம்­களை பல்­வேறு வகை­யிலும் புறக்­க­ணித்து வந்தார்.

கிழக்கு மாகா­ணத்தில் உள்ள அதி­கா­ர­ ச­பைகள், ஆணைக்­கு­ழுக்கள் என்­ப­வற்­றுக்­கான தவி­சாளர் மற்றும் பொது­ மு­கா­மை­யா­ளர்கள் நிய­ம­னத்தில் முஸ்­லிம்கள் எவ­ரையும் அவர் நிய­மிக்­காமல் புறக்­க­ணித்­தி­ருந்தார். அதே­போல அமைச்­சுக்­களின் செய­லா­ளர்­க­ளிலும் முஸ்­லிம்­களை அவர் நிய­மிக்­க­வில்லை. இது குறித்து நான் பாரா­ளு­மன்­றத்­திலும் பிரஸ்­தா­பித்­தி­ருந்தேன்.
தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் ஆட்­சிக்­கா­லத்­திலும் அது­போன்றே கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் புறக்­க­ணிப்பு தொடர்ந்து வரு­கின்­றது.

தற்­போதும் கிழக்கு மாகாண அதி­கா­ர­ ச­பைகள், ஆணைக்­கு­ழுக்கள் என்­ப­வற்­றுக்­கான தவி­சாளர் மற்றும் பொது­ மு­கா­மை­யா­ளர்கள் நிய­ம­னத்தில் முஸ்­லிம்கள் எவரும் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. அமைச்­சுக்­களின் செய­லாளர் நிய­ம­னத்தில் முஸ்லிம் உத்­தி­யோ­கத்­தர்­களின் சிரேஸ்ட தரம் கருத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை.

எனவே, கோத்­தா­ப­யவின் அதே வழியில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் ஆட்­சி­யிலும் அதே முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்ந்து வரு­கின்­றது. எனினும், முஸ்லிம் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இது விட­யத்தைக் கண்டு கொள்­ளாமல் இருப்­பது குறித்து நான் மிகவும் கவ­லை­ய­டை­கின்றேன்.

நிலைமை இப்­ப­டியே நீடிக்­கு­மாக இருந்தால் கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் எதிர்­கா­லத்தில் இன்னும் பல வழிகளிலும் புறக்கணிக்கப்படுவார்கள் என்பது உறுதி. எனவே, சகல முஸ்லிம்களும் இது தொடர்பில் கவனத்தில் கொண்டு எல்லா வழிகளிலும் ஜனாதிபதிக்கு எமது அதிருப்தியை தெரிவிக்க முன்வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.