ரணில் விக்ரமசிங்க அறிக்கைவிடட்டும்

விஜித ஹேரத்

0 88

எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்

ரணில் விக்­கி­ர­ம­சிங்க சுவீ­டனில் குர்ஆன் எரிப்­புக்­கெ­தி­ராக அறிக்கை வெளி­யிட்டார். இது வர­வேற்­கத்­தக்­கது. ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க இய­லு­மென்றால் பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெறும் அரா­ஜ­கங்­க­ளுக்கு எதி­ராக அறிக்­கை­வி­டட்டும். ஆனால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவ்­வா­றான அறிக்­கை­யொன்று விட­மாட்டார் என மக்கள் விடு­தலை முன்­னணி உறுப்­பினர் விஜித ஹேரத் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், ஏனென்றால் அவர் இஸ்ரேல் மற்றும் அமெ­ரிக்­கா­வுக்கு சார்­பா­ன­வ­ரா­கவே இருக்­கிறார். நாம் இங்கு விவா­திப்­பதை விட நாட்டின் தலைவர் என்ற வகையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே பலஸ்­தீனை ஆத­ரித்து அறிக்­கை­வி­ட­வேண்டும். அதுவே நாட்டு மக்களினதும் நாட்டினதும் நிலைப்பாடாக அமையும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.