மாடுகளுக்கு அம்மை நோய் பரவல்: குர்பான் விடயத்தில் அவதானம் தேவை

0 994
  • மாற்றுவழி குறித்து உலமா சபை அவசரமாக பத்வா வழங்க வேண்டும்
  • சுகாதார நடைமுறைகள் அமுல்படுத்தப்படுவதை அமைச்சும் திணைக்களமும் கண்காணிக்க வேண்டுமென வலியுறுத்துகிறார் ஹலீம் எம்.பி

(எஸ்.என்.எம்.சுஹைல்)
நாட­ளா­விய ரீதியில் மாடு­க­ளுக்கு அம்மை நோய் பர­வுதல் தீவி­ர­ம­டைந்­தி­ருக்­கி­றது. நோய் தொற்று கார­ண­மாக வடமேல், வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட பல இடங்­களில் மாடுகள் அறுப்­ப­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இன்னும் மூன்று வாரங்­களில் ஹஜ் பெரு­நா­ளு­டைய தினம் வரு­வதால் முஸ்லிம் மக்கள் குர்­பா­னிக்­காக தயா­ராகிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

எனவே, குர்பான் விட­யத்தில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் மத ­வி­வ­கார அமைச்சும் கூடுதல் கரி­சனை செலுத்த வேண்டும் என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ.ஹலீம் வலி­யு­றுத்­தினார்.

கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உபுல் மஹேந்­திர ராஜ­பக்ச தலை­மையில் மத விவ­கா­ரங்கள் மற்றும் சக­வாழ்வு பற்­றிய துறைசார் மேற்­பார்வைக் குழு கூட்டம் நேற்று பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் இடம்­பெற்­றது. இதன்­போது, ஹலீம் எம்.பி. மேற்­கண்­ட­வாறு வலி­யு­றுத்­தினார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில், கொரோனா பெருந்­தொற்று ஏற்­பட்­ட­போது சமய அனுஷ்­டா­னங்­களை மேற்­கொள்ள சில கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டன. அதனை அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­மையால் பல்­வேறு ஆபத்­து­க­ளி­லி­ருந்து தவிர்ந்­து­கொள்ள முடிந்­தது. இது­போன்றே, தற்­போது குர்பான் கட­மை­களை நிறை­வேற்றும் ஹஜ்­ஜு­டைய காலம் நெருங்­கு­கி­றது. இந்­நி­லையில் முஸ்லிம் மக்கள் அதற்­காக தயா­ராகிக் கொண்­டி­ருக்­கின்­றனர். இந்­நி­லையில், மாடு­க­ளுக்கு அம்மை நோய் பர­வி­யி­ருக்­கி­றது. குரு­நா­கலில் இந்த தொற்று பரவ ஆரம்­பித்து கிழக்கு, வடக்கு, மத்திய மாகா­ணங்­க­ளிலும் பரவல் தீவி­ர­ம­டைந்­தி­ருக்­கி­றது. அத்­தோடு, பல இடங்­க­ளிலும் மாட­றுப்­புக்­கான தடையை அர­சாங்கம் விதித்­தி­ருக்­கின்­றது.

இந்த சூழலில், குர்பான் விட­யத்தில் மாற்று தீர்­மா­னங்­களை எடுக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. அதற்­கான வழி­காட்­டல்­களை வழங்கும் விட­யத்தில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் மத விவ­கார அமைச்சும் கரி­சனை காட்ட வேண்டும்.

குறிப்­பாக இஸ்­லா­மிய அறி­ஞர்­களின் வழி­காட்­டலில் மார்க்கத் தீர்ப்பு ஒன்று வழங்­கப்­ப­ட­வேண்டும். அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா மற்றும் மக்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஏனைய அமைப்­பு­க­ளுடன் கலந்­து­ரை­யாடி இதற்­கான அவ­சர தீர்­மா­ன­மொன்றை எடுக்க வேண்டும். இத்­தோடு, இவ்­விடயம் தொடர்­பாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஒருங்­க­மைக்­கப்­பட்ட குழு­வொன்றை நிய­மித்து மக்­க­ளுக்கு சரி­யான மார்க்கத் தீர்ப்பை வழங்கி வீணான குழப்­பங்­களில் இருந்தும் முரண்­பா­டு­களில் இருந்தும் தவிர்ந்­து­கொள்ள விரைந்து செயற்­பட வேண்டும்.

அத்­தோடு, சுகா­தார அமைச்சு மாடு­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அம்மை நோய் தொடர்பில் விசேட சுற்­று­நி­ரு­பங்­களை வெளி­யிட்­டி­ருக்­கி­றது. குர்பான் விடயம் தொடர்­பாக மத விவ­கார அமைச்சு சுகா­தார அமைச்­சுடன் இணைந்து மக்­க­ளுக்கு சரி­யான தெளி­வூட்­டல்­களை வழங்கி கண்­டிப்­பான சுகா­தார நடை­மு­றை­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

இவ்­வி­டயம் தொடர்பில் கால­தா­மதங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மானல் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்குள் மக்கள் தள்­ளப்­ப­டு­வார்கள் என்­பதை புரிந்­து­கொண்டு திணைக்­க­ளமும் அமைச்சும் விரைந்து செயற்­ப­டு­வதுடன் மக்­க­ளுக்கு மாற்று தீர்­வொன்­றையும் சிறந்த வழி­காட்­டல்­க­ளையும் வழங்க வேண்டும்.

அத்­தோடு, மாடு­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அம்மை நோய் பற்­றியும் இது குறித்த எமது தீர்­மா­னத்­தையும் மக்­க­ளுக்கு வெள்­ளிக்­கி­ழமை ஜும்­ஆவின் போது தெளி­வூட்­டு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் எனவும் ஹலீம் எம்.பி. இதன்­போது கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதி­ல­ளித்த முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் மொஹமட் பைஸல், இது­வி­ட­ய­மாக கவனம் செலுத்­து­வ­தா­கவும் அதற்­கான பொறி­மு­றை­யொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் தெரி­வித்தார். மேலும், மத விவகார அமைச்சின் செயலாளரும் இதுவிடயத்தில் தனது உடன்பாட்டை தெரிவித்தார்.

மேற்படி துறைசார் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக, வேலுகுமார் மற்றும் மதவிவகார அமைச்சின் செயலாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.