ஞானசார தேரருக்கு மன்னிப்பு வேண்டும்

ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்குமாறு பெளத்த பீடங்களிடம் கோரிக்கை

0 643

நீதி­மன்­றினை அவ­ம­தித்த குற்­றச்­சாட்டின் கீழ் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு மன்­னிப்பு வழங்கி விடு­தலை பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்­கை­யொன்­றினை முன்­வைக்­கும்­படி பொது­ப­ல­சேனா அமைப்பு உட்­பட பௌத்த குருமார் அமைப்­புகள் சில, அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீட மகா­நா­யக்க தேரர்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளன. அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடா­தி­ப­தி­களைச் சந்­தித்து நேற்று முன்­தினம் இக்­கோ­ரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. சிங்­கள ராவய அமைப்பின்  பொதுச் செய­லாளர் மாகல்­கந்தே சுதத்த தேரர், போரே ஸ்ரீ மகா விகாரை அதி­பதி கொத்­மலே தம்­ம­கித்தி தேரர்  என்போர் தலை­மை­யி­லான பௌத்த குருமார் குழு­வி­னரும் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்­களும் இச்­சந்­திப்பில் கலந்து கொண்­டனர்.

அஸ்­கி­ரிய  மகா­நா­யக்க வர­கா­கொட ஸ்ரீ ஞான­ர­தன தேரர் மற்றும் மல்­வத்து மகா­நா­யக்க திப்­பட்­டு­வாவே ஸ்ரீ சித்­தார்த்த சுமங்­கல தேரர் ஆகி­யோரைச் சந்­தித்து ஞான­சார தேர­ருக்கு ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பு பெற்­றுக்­கொ­டுப்­பதில் ஒத்­து­ழைக்­கு­மாறு வேண்டிக் கொண்­டனர்.  அது தொடர்­பாக மகஜர் ஒன்­றி­னையும் கைய­ளித்­தனர்.

சந்­திப்பின் போது சிங்­கள ராவய அமைப்பின் பொதுச் செய­லாளர் மாகல்­கந்தே சுதத்த தேரர் மகா­நா­யக்க தேரர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கையில் அர­சியல் கைதி­யாக சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் ஞான­சார தேர­ருக்கு பொது மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­யு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் பல தட­வைகள் எழுத்து மூலமும் நேரிலும் கோரிக்கை விடுத்­தி­ருக்­கிறோம். அது தொடர்­பாக தங்­க­ளது ஒத்­து­ழைப்பைக் கோரியே  இங்கு வந்­துள்ளோம்.

அநீ­தி­யான முறையில் எங்­க­ளது தேரர்கள் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரு­கி­றார்கள். இவ்­வா­றான நிலை­மைகள் பௌத்த தேரர்­க­ளுக்கு ஏற்­ப­டா­வண்ணம் ஜனா­தி­பதி செயற்­ப­டுவார் என நம்­பு­கிறோம். நாங்கள் ஜனா­தி­ப­தி­யு­டனே இருக்­கிறோம். அவரைத் தனி­மைப்­ப­டுத்தி விட­வில்லை.

பிரதீப் எக்­னெ­லி­கொட தற்­போது டுபாய் நாட்டில் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எக்­னெ­லி­கொட காணாமற் போனமை தொடர்பில் இரா­ணுவ வீரர்கள்  சிறைப்­ப­டுத்­தப்­பட்­டார்கள். ஞான­சார  தேரரும் அவ்­வாறே சிறை வைக்கப்பட்டுள்ளார். சர்வதேச பொலிஸாரின்  உதவியுடன்  உடனடியாக எக்னெலிகொட கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு அது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்கு  ஜனாதிபதி முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.