ஹிஜாஸ் வழக்கில் சட்டமா அதிபர் மீதான விமர்சனங்கள்

0 337

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­ல் நடந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் அது தொடர்பான கைதுகள் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. அண்மையில், புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு வன்­மு­றை­களை தூண்டும் வகையில் விரி­வு­ரை­களை நடத்தி வந்­த­தாக கூறி இரண்டு விரி­வு­ரை­யா­ளர்கள் உட்­பட நால்­வரை சி.ஐ.டி.யினர் கைது செய்­துள்­ள சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாகும். சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் ஆலோ­ச­னைக்கு அமையவே இவர்­களைக் கைது செய்­த­தாக சி.ஐ.டி.யினர் தெரி­விக்கின்றனர்.

இந்த வழக்கில் பொலிஸார் விசா­ரணை நடத்தி மூன்று ஆண்­டு­க­ளுக்கு பின்னரே கைது செய்­துள்ளனர். இந்நிலையில் எத்தவிதமான குற்றச்சாட்டுக்களுமின்றி, சட்ட மா அதி­பரின் ஆலோ­சனை என கூறிக் கொன்டு, வெற்றுக் கட­தா­சி­களை முன் வைத்து சந்­தேக நபர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்­கக்­கோ­ரு­வது பொருத்தமற்­றது என சி.ஐ.டி.யினரை நோக்கி நீதிவான் அதிருப்தி வெளியிட்டிருந்தமை பொலிசாரின் நீதியற்ற செயற்பாட்டை உறுதிப்படுத்துவதாகவுள்ளது.

இதேவேளை, இரண்டு விரி­வு­ரை­யா­ளர்கள் உட்­பட நால்­வரை மூன்று வருடங்களின் பின்னர் சி.ஐ.டி.யினர் தற்­போது கைது செய்­துள்­ள­மை­யா­னது, சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை இறுக்­கு­வ­தற்­காக முன்­னெ­டுக்­கப்­படும் அடிப்­ப­டை­யற்ற செயற்­பாடு என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சட்­டத்­தரணியுமான ரவூப் ஹக்கீம் அண்மையில் மன்றில் ஆஜராகி வாதிட்டிருந்தார்.
இதனிடையே, சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்கு எதி­ரான அனைத்துக் குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் நீக்­கு­வ­துடன் அவ­ருக்கு எதி­ரான அனைத்து அடக்­கு­மு­றை­க­ளையும் முடி­வுக்­குக்­கொண்­டு­வ­ரு­மாறு ‘சட்­டத்­த­ர­ணி­க­ளுக்­கான சட்­டத்­த­ர­ணிகள்’ அமைப்பு சட்­டமா அதி­ப­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களை முன்­னி­றுத்தி இயங்­கி­வரும் சட்­டத்­த­ர­ணி­யான ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா, மனித உரிமை மீறல்­களால் பாதிக்­கப்­பட்ட பெரு­ம­ள­வான முஸ்­லிம்­க­ளுக்கு அவ­சி­ய­மான சட்ட உத­வியை வழங்­கி­யி­ருக்­கின்றார். ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி குற்­ற­வி­சா­ர­ணைப்­ பி­ரி­வி­னரால் பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்­தின்கீழ் கைது­செய்­யப்­பட்டார். அவர் கைது­ செய்­யப்­பட்­ட­மைக்­கான காரணம் தொடர்பில் அவ்­வே­ளையில் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்கோ அல்­லது அவ­ரது குடும்­பத்­தா­ருக்கோ கூறப்­ப­ட­வில்லை. இருப்­பினும் உயிர்த்த ஞாயி­று­ ப­யங்­க­ர­வா­தத் ­தாக்­குதல் குண்­டு­தா­ரி­க­ளுக்கு உத­வினார் என்ற குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் அவர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அவ­ரது தடுப்­புக்­காவல் உத்­த­ரவில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அத­னை­ய­டுத்து பல்­வேறு இழு­ப­றி­க­ளுக்கு மத்­தியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 7 ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்கு பிணை வழங்­கப்­பட்டு, 9 ஆம் திகதி விடு­விக்­கப்­பட்டார். இருப்­பினும் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் இன்­னமும் நீக்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் இற்­றை­வரை ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிக்கும் வகை­யி­லான எந்­த­வொரு ஆதா­ரமும் வாதிகள் தரப்­பினால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை.

பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்­தின் கீழ் மிக நீண்­ட­கா­ல­மாகத் தடுத்­து­வைக்­கப்­பட்ட முத­லா­வது சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா ஆவார். பயங்­க­ர­வா­தத்­த­டைச் ­சட்­டத்தைத் திருத்­தி­ய­மைப்­ப­தாக இலங்கை அர­சாங்கம் பல­முறை உத்­த­ர­வா­த­ம­ளித்­தி­ருக்­கின்ற போதிலும், தற்­போ­து­வரை அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்குத் தவறியிருக்கின்றது. இந்நிலையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நீக்குவதுடன் அடக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு குறித்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம், சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக சட்­டமா அதிபர் திணைக்­களம் சாட்­சி­யங்­களை இட்­டுக்­கட்­டி­யதாக குற்றம் சுமத்­தினார். 52 நாள் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் சட்டப் போராட்­டங்­களை முன்னெடுத்­த­மையே ஹிஜாஸை பழி வாங்­கு­வ­தற்­கான கார­ண­மாகும் என்றும் அர­சாங்கம் பயங்­க­ர­வாத தடை ச்சட்­டத்தை பயன்­ப­டுத்­து­வ­தில்லை என சர்­வ­தே­சத்­துக்கு வாக்­கு­றுதி அளித்­து­விட்டு, இங்கு அதனை பயன்­ப­டுத்­து­வது இலங்­கைக்கு ஜெனீவா மனித உரிமை பேரவை வரையில் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தவல்­லது என்றும் ரவூப் ஹக்கீம் அண்மையில் பாராளுமன்றில் உரையாற்றுகையில் சுட்­டிக்­காட்­டியிருந்தார்.

இவ்­வாறு சட்­டமா அதிபர் திணைக்­க­ளமும் பொலி­சாரும் இந்த விவ­கா­ரத்தில் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வையும் அவ­ரது வழக்­குடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையும் வேண்­டு­மென்றே பழி­வாங்கி வருகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது விடயத்தில் இவ்விரு தரப்பினரும் நியாயமாக செயற்படுவதுடன் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறோம்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.