நேசிக்கும் உறவுகளின் அன்பை கண்டு கண்ணீர் சிந்தி சந்தோசத்தை உணர்கிறேன்

0 178

(எம்.வை.எம்.சியாம்)
குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையில் நேற்­று­முன்­தினம் கட­மையில் இணைந்­து­கொண்ட வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் உருக்­க­மான குரல்­ப­திவு ஒன்றை வெளி­யிட்­டுள்ளார்.
4 வரு­டங்கள், 6 நாட்­களின் பின்னர் மீண்டும் தான் குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையில் கட­மை­களை ஆரம்­பித்­ததன் மூலம் துன்­பத்­துக்கு பிறகு அல்லாஹ் மாபெரும் வெற்­றியை தந்­தி­ருப்­ப­தை உணர்­த்துவதாக தெரி­வித்­துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,
எங்­கி­ருந்து என்னை பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து அழைத்துச் சென்­றார்­களோ இன்று அதே இடத்­துக்கு திரும்­பவும் சுமார் 4 வரு­டங்­களும் 6 நாட்­க­ளுக்கும் பிறகு உங்­க­ளு­டைய பிரார்த்­த­னைகள் மூலம்­ வ­ர­வ­ழைக்­கப்­பட்­டுள்ளேன்.

பணிக்கு திரும்­பிய பின்னர் என்­னு­டைய நண்­ப­ருக்கு பத­வியை பொறுப்­பேற்­றதன் சந்­தோ­ஷத்தை வெளிப்­ப­டுத்தி புகைப் பட­மொன்றை அனுப்­பினேன். பின்னர் அந்த புகைப்­படத்தை நாட்­டி­லுள்­ள­வர்கள் மற்றும் உல­க­ளா­விய ரீதியில் என்னை விரும்­பு­கின்ற அனை­வரும் வாட்ஸ்அப், பேஸ்புக் என சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்­தி­ருந்­தார்கள். அதி­க­ள­வானோர் தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு உரை­யா­டி­னார்கள். வாழ்த்­துக்கள் தெரி­வித்­தார்கள். அதனை பார்க்கும் போது துன்­பத்­துக்கு பிறகு அல்லாஹ் மாபெரும் வெற்­றியை வைத்­தி­ருக்­கிறான் என்­பதை உணர்ந்து கொண்டேன். அந்த வகையில் நான் பாக்­கி­ய­சாலி.

நான் காணாத தொலை­தூ­ரத்தில் இருந்து பல உற­வுகள் எனக்­காக துஆ செய்­தனர். அவர்­க­ளுக்கு எனது நன்­றியை தெரி­வித்துக் கொள்­கிறேன். இதற்கு முன்னர் நான் அனு­ப­வித்த துன்­பத்தின் போது­கூட கண்ணீர் சிந்­த­வில்லை. அல்­லாஹ்­வி­டத்தில் பிரார்த்­த­னை­களை மாத்­தி­ரமே செய்தேன். இருப்­பினும் இன்று என்னை நேசிக்கும் உற­வு­களை நினைத்து அவர்கள் என் மீது கொண்­டுள்ள அன்பை கண்டு கண்ணீர் சிந்­து­கிறேன். எனக்­காக பிரார்த்­தித்த உற­வு­க­ளுக்­காக எப்­போதும் நான் கட­மைப்­பட்­டுள்ளேன்.

என்­னு­டைய சந்­தோஷம், துன்­பங்­களை தங்­க­ளு­டைய சந்­தோ­ச­மா­கவும் துக்­கங்­க­ளா­கவும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளதை கண்டு பூரிப்­ப­டை­கிறேன். அல்லாஹ் ஒரு­வரை கண்­ணி­யப்­ப­டுத்த வேண்டும் என்றால் அதனை எவ்வாறாவது நிறைவேற்றுவான் என்பதை உணர்கிறேன். எனக்காக பிரார்த்தனைகளை செய்த நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.