மூத்த முஸ்லிம் தலைமைகளை நம்பி அர்த்தமில்லை, 6 முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்றிணைந்து புதிய குழுவாக செயல்படுகின்றோம்

இஷாக் ரஹுமான் எம்.பி தெரிவிப்பு

0 133

நாட்டில் முஸ்லிம் மக்கள் முகம்­கொ­டுத்து வரும் முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை எட்­டு­வ­தற்­காக தாம் 6 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒரு குழு­வாக செயல்­பட்டு வரு­வ­தாக அனு­ரா­த­புர மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இஷாக் ரஹுமான் தெரி­வித்தார்.

கஹட்­ட­கஸ்­தி­கி­லிய பிர­தே­சத்தில் அர­புக்­கல்­லூரி ஒன்றின் பட்­ட­ம­ளிப்பு விழாவில் அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இவ்­வாறு தெரி­வித்தார்.

கஹட்­ட­கஸ்­தி­கி­லிய ஹம்­தா­னியா அர­புக்­கல்­லூ­ரியின் இரண்­டா­வது அல் ஆலிம் பட்­ட­ம­ளிப்பு விழா கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கல்­லூ­ரியின் பணிப்­பாளர் எஸ்.எம். சமீர் (ரஷீதி) தலை­மையில் கல்­லூரி வளா­கத்தில் நடை­பெற்­றது.

இந்­நி­கழ்வில் கௌரவ அதி­தி­க­ளாக அனு­ரா­த­புர மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இஷாக் ரஹுமான், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் மார்க்க அறி­ஞர்கள் பலரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். இப்­பட்­ட­ம­ளிப்பு விழாவில் 13 மாண­வர்கள் அல் ஆலிம் சான்­றி­தழை பெற்­றுக்­கொண்­டனர். இந்­நி­கழ்வில் தொடர்ந்தும் உரை­யாற்­றிய இஷாக் ரஹுமான் கருத்து தெரி­விக்­கையில்,

இலங்கை வாழ் முஸ்லிம் சமூ­கத்தில் காலம் கால­மாக தீர்த்து வைக்­கப்­ப­டாத பிரச்­சி­னைகள் பல இருந்­து­வ­ரு­கின்­றன. அவற்றுள் முக்­கி­ய­மா­ன­தொரு பிரச்­சினை தான் முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள், மத்­ர­சாக்­களை பதிவு செய்­து­கொள்­வது தொடர்­பான பிரச்­சினை. இது­வரை 317 பதிவு செய்­யப்­பட்ட மத்­ர­சாக்­களும், 137 பதிவு செய்­யப்­ப­டாத மத்­ர­சாக்­களும் இயங்கி வரு­கின்­றன. அவற்றுள் 70 மத்­ர­சாக்­களின் பதிவு செய்­வ­தற்­கான ஆவ­ணங்கள் முறை­யாக வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் கூட முஸ்லிம் சமைய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் இன்னும் அவை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு பதி­வு­செய்­யப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் எந்த ஒரு மூத்த முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் கண்­டு­கொள்­வ­து­மில்லை.

பிச்­சைக்­கா­ர­னுக்கு புண் இருந்தால் தான் பிச்சை எடுக்­கலாம் என்­ப­து­போல முஸ்லிம் சமூ­கத்தில் தொடர்ந்தும் பிரச்­சி­னைகள் இருந்தால் தான் அர­சியல் செய்­யலாம் என்­ற­வொரு வங்­கு­ரோத்து அர­சியல் நோக்­கத்­திற்­காக காலம் கால­மாக முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் மூத்த அர­சியல் தலை­மை­க­ளினால் கண்­டு­கொள்­ளப்­ப­டாமல் இருப்­ப­தனை எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இவற்றை கருத்­திற்­கொண்டு இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை எட்டும் நோக்­கில் நானும், அம்­பாறை மாவட்­டத்தை சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஹரீஸ், பைசல் காசிம், முஷாரப், திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தௌபீக், களுத்­துறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மர்ஜான் பளீல் ஆகிய ஆறு­பேரும் ஒன்­றி­ணைந்து ஒரு குழு­வாக இயங்கி முஸ்லிம் சமூக பிரச்­சி­னை­களை கட்டம் கட்­ட­மாக தீர்த்து வைப்­ப­தாக முடிவு செய்­துள்ளோம்.

இதன் ஆரம்ப கட்­ட­மாக, பதிவு செய்­யப்­ப­டாத மத்­ர­சாக்­களை பதிவு செய்­வது தொடர்பில் கடந்த வாரம் பாரா­ளு­மன்றில் உரை­யாற்­றி­ய­தோடு அந்த உரைக்கு பதில் தரும் முக­மாக நீதி அமைச்சர் குறித்த விடயம் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யோடு கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு எமக்கு நேரம் ஒதுக்கி தரு­வ­தா­கவும் அக்­க­லந்­து­ரை­யா­டலில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பாக நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடி அவற்றுக்கான உடனடி தீர்வினை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார். எமது இக்குழுவானது இப்பிரச்சினையோடு நின்றுவிடாமல் எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வினைத்தேடி தொடர்ந்தும் இயங்கும் என அவர் தெரிவித்தார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.