இலங்கைக்கு மேலும் 500 ஹஜ் கோட்டாவை வழங்க கோரிக்கை

0 46

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்கு அதி­க­மானோர் ஆர்வம் காட்டி வரு­கின்­ற­மையால் இலங்­கைக்கு மேல­தி­க­மாக 500 ஹஜ் கோட்­டாவை வழங்­கு­மாறு அரச ஹஜ் குழு சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சைக் கோரி­யுள்­ளது.

இலங்­கைக்கு இவ்­வ­ரு­டத்­திற்­கான 3500 ஹஜ் கோட்டாவை ஏற்­க­னவே சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு வழங்­கி­யுள்­ளது.

குறிப்­பிட்ட 3500 ஹஜ் கோட்­டாவும் தற்­போது பூர்த்­தி­யா­கி­யுள்­ளது. 3500 பேர் இதற்­கான ஏற்­பா­டு­களைப் பூர்த்தி செய்­துள்­ளனர்.

இந்­நி­லையில் இச்­செய்தி எழு­தப்­படும் வரையில் ஹஜ் கட­மைக்­காக மேலும் 235 பேர் முன்­வந்­துள்­ளனர். இவர்­களில் ஏற்­க­னவே 25ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­டணம் செலுத்­தி­ய­வர்­களும், பதி­வுக்­கட்­டணம் செலுத்­தாத விண்­ணப்­ப­தா­ரி­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். தற்­போது ஹஜ் கட­மைக்­கான விண்­ணப்­பங்கள் ஏற்­பது தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த வரு­டத்தை விட இவ்­வ­ருட ஹஜ் கட்­டணம் குறை­வாக உள்­ளதால் இவ்­வ­ருட ஹஜ் கட­மைக்­காக பெரும் எண்­ணிக்­கை­யானோர் ஆர்வம் காட்டி வரு­வ­தாலே மேல­தி­க­மாக 500 ஹஜ் கோட்டா சவூ­தி­யி­ட­மி­ருந்து கோரி­யுள்ளோம் என அரச ஹஜ் குழுவின் உறுப்­பினர் அஹ்கம் உவைஸ் தெரி­வித்தார்.

மேலும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் விளம்­பரம் செய்­யப்­பட்ட ஹஜ் முக­வர்­களின் பெயர் பட்­டி­யலில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள ஹஜ் கட்­ட­ணத்­திற்கும் மேல­தி­க­மாக சில முக­வர்கள் கோரு­வ­தாக முறைப்­பாடு கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. குறிப்­பி­டப்­பட்­டுள்ள கட்­ட­ணத்­திற்கும் மேல­தி­க­மாக பணம் செலுத்த வேண்டாம். இவ்­வாறு கோரப்­பட்டால் அரச ஹஜ் குழு­வுக்கு முறைப்­பாடு செய்­யலாம் எனவும் அஹ்கம் உவைஸ் தெரி­வித்தார்.

அத்­தோடு ஹஜ் முக­வர்கள் அரச ஹஜ் குழு­வுக்கு கைய­ளித்­துள்ள யாத்­தி­ரி­கர்­களின் பெயர் பட்­டியல் குறிப்­பிட்­ட­ப­டியே பேணப்­பட வேண்டும். அதில் எந்த திருத்­தங்­க­ளையும் செய்ய முடி­யாது. அவ்­வாறு ஏற்­க­னவே கைய­ளிக்­கப்­பட்­டுள்ள யாத்­தி­ரி­கர்­களின் பெயர் பட்டியலில் மாற்றங்கள் செய்தால் முகவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இவ்வருடம் 39 ஹஜ் முகவர்கள் தனியாகவும் கூட்டாக இணைந்தும் ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.